Breaking
Mon. Apr 29th, 2024

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தேவையற்ற வீதி சோதனை சாவடிகளை அகற்றுவதுடன் பாதுகாப்பு கெடுபிடிகளிலிருந்தும் நிம்மதியாக வாழ வழி விடுங்கள் என தெரிவித்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் கிண்ணியாவில் உள்ள சிற்பி தொழிலாளர்களுக்கான அனுமதியினை முன்னையவாறு பிரதேச செயலாளருக்கு அதன் நிருவாக முறையையையும் வழங்க வேண்டும் .

பாதுகாப்பு படையினர் சிற்பி தொழிலாளர்களிடம் கைப்பற்றிய பொருட்களை அவர்களிடம் மீள ஒப்படையுங்கள் எனவும் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கேட்டுக் கொண்டார்.

பிரேரனை ஒன்றின் போது நேற்று (08) இடம் பெற்ற அமர்வின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் பாதுகாப்பு தரப்பில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் புலனாய்வுப் பிரிவில் நியமிக்கப்பட்டது

தொடர்பில் இது பயங்கரவாதத்துக்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .

இதனை வன்மையாக கண்டித்து உலகில் உள்ள முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல முஸ்லிம்களை சந்தேக கண் கொண்டு மீண்டும் இவ் உயர்சபையில் நோக்க வேண்டாம் இனவாத பேச்சுக்களை கிளப்பி நாட்டை சீர்குலைக்க முற்படாதீர்கள்.

நாங்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகம் பௌத்த சமூகம் கிறிஸ்தவ சமூகம் என்பன இந்த நாட்டில் நல்லிணக்க ஆட்சியையே விரும்புகிறார்கள்.

அன்று வடபுலத்தில் தமிழ் மகனான பத்தியம்பிள்ளை தொடக்கம் சின்னையா போன்றவர்களே பாதுகாப்பு துறையில் கடற்படை பொலிஸ் படைகளில் புலனாய்வு பிரிவில் முக்கிய பதவிகளை வகித்து வந்தார்கள் இது சிறுபான்மை சமூகத்துக்கு கௌரவத்தை கொடுத்தது.

இது போன்று மேஜர் சஹீட் தொடக்கம் வஹார் வரை படைகளில் முக்கிய பதவிகளை வகித்ததும் சிறுபான்மை இன மக்களை கௌரவப்படுத்தியது.
சர்வதேச நாடுகளை இலங்கையை கண்காணித்துக் கொண்டிருக்கிறது சர்வதேச உதவிகள் எமக்கு தேவை நாட்டை இன நல்லிணக்க பாதையில் கொண்டு செல்ல வேண்டும் இதற்கான மூவின சமூகமும் கைகோர்க்க வேண்டியுள்ளது.

இந்த நாட்டில் எதிர்வரும் தேர்தலில் 113 பெரும்பான்மை ஆசனங்களை எந்த கட்சியும் பெறமுடியாது சிறுபான்மை கட்சிகளின் உதவியோடுதான் பெரும்பான்மை ஆசனத்துடன் ஆட்சியமைக்க முடியும் என்றார்.

Related Post