Breaking
Mon. Apr 29th, 2024

தீர்வுக்கு ஆதரவளிக்க சொல்ஹெய்ம் தயார் இலங்கை அரச தலைவர்கள் அழைத்தால் அங்கு அரசியல் தீர்வு நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கத் தான் தற்போது தயாராக இருப்பதாக நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.அத்துடன் தற்போது இலங்கை அதன் சொந்த ன கடின உழைப்பு மூலம் தன்னு டைய சிக்கல்களை தீர்ப்பதற்குப் பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சமூகம் அதற்குச் சிறந்த மத்தியஸ்தராக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நோர்வே நாட்டு வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கைஇ மகத்தான ஆற்றல் கொண்ட ஒரு நாடு. உழைப்பாளிகள் மற்றும் மிகவும் படித்தவர்கள் உள்ளனர். நான் இலங்கைக்குச் சாத்தியமான எந்த வழியில் உதவி செய்ய முடியும் என்றால்இ எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இலங்கை அரச தலைவர்கள் அழைத்தால்இ அரசியல் தீர்வு நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கத் தற்போது நான் தயாராக இருக்கின்றேன். அத்துடன் முதலீடு மற்றும் சுற்றுலா ஊக்குவிப்புத் தொடர்பிலும் உதவி வழங்க முடியும். இலங்கையுடன் கடந்த பதினேழு ஆண்டுகள் தொடர்பு வைத்திருக்கின்றேன். கடந்த ஜனவரி மற்றும் ஓகஸ்ட் தேர்தல்கள் இலங்கை வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எட்டியுள்ளதாகக் கருதுகின்றேன். இதனை நான் மட்டுமல்ல இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கை மக்கள் தமது வாக்குகள் மூலம், மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப் புள்ளி வைத்ததுடன் விரைவான பொருளாதார வளர்ச்சி நோக்கி நகரும், ஜனநாயகம் ஆட்சிக்கு வழி வகுத்துள்ளனர்.

எனவே, புதிய தலைவர்கள் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். அனைத்துச் சிங்கள மக்களுக்கும் மகிந்த மீது இருந்த நம்பிக்கை, அவர் 2009 ஆம் ஆண்டு போரை முடிவுக்குக் கொண்டு வந்தது தான். எனினும் அவர் போரை வெற்றி கொண்ட பின்னர், தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் மகத்தான வாய்ப்பை வீணாக்கி விட்டார்.

அத்துடன் மகிந்த தமிழர்களுக்கான இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஏதும் செய்யவில்லை. மேலும் இன அமைதி, நல்லிணக்கம் நோக்கி இலங்கையைக் கொண்டு செல்லவில்லை. முஸ்லிம் மக்கள் மீதும் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இதனால் தமிழ், முஸ்லிம் மக்களின் சொற்ப வாக்குகளையே மகிந்தாவால் பெற முடிந்தது. ஆனால், இலங்கையில் தற்போதைய மாற்றம் மூலம் இன முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை அடைவது இலகுவான காரியமில்லை. எனினும் எனக்கு நம்பிக்கையுள்ளது. அனைத்து இலங்கையர்களுக்கும் சமாதானம் ஒரு பெரிய நிவாரணம் ஆகும் என்பதை நான் வலியுறுத்துகின்றேன். துரதிஷ்டவசமாகச் சித்திரவதை மற்றும் வெள்ளை வான் காணாமற்போதல்கள் போருக்குப் பின்னரும் தொடர்ந்தது. ஆனால் உண்மையில்இ இலங்கையில் தற்போது அதன் சொந்த கடின உழைப்பு மூலம் தன்னுடைய சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. – என்றார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *