Breaking
Fri. May 3rd, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவரும் , புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ M.H.M . நவவி ஹாஜியார் அவர்களின் ஏற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளைஞர் அணி ஏற்பாடு செய்திருந்த சிகரம் தொடு எனும் பட்டதாரிகளின் ஆவணம் திரட்டல் நிகழ்வு கடந்த சனியன்று(18.02.2017) இனிதே நடந்து முடிந்தது . அதற்கு ஒத்துழைப்பு நல்கிய கட்சியின் சொந்தங்கள் / வருகை தந்த பட்டதாரிகள் / ஊடகவியல் நண்பர்கள் / வளவாளராக வருகை தந்த கல்விமான் A.R.M.ஜிப்ரி ஆகிய அனைவருக்கும் நமது மனமார்ந்த நன்றிகள் .

இந்நிகழ்வை நாம் தொழில் கருத்தரங்கு என்ற தலைப்பிலோ , தொழில் தருவோம் என்கிற வாக்குறுதியுடனோ நடத்தவில்லை என்பதை வருகை தந்த பலரும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம் . அங்கு வழங்கப்பட்ட கேள்வி பதில் நிகழ்வு , கலந்தாலோசித்த விடயங்கள் என்பன இதற்கு தக்க சான்று .இதற்கு 250 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வருகை தந்து அவர்களின் தகவல்களை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொழில் பெறுவதில் உள்ள சவால்களை இணைந்து மோதுவோம் வாருங்கள் , உங்கள் தகவல்களை தாருங்கள் என்றே அழைத்து இருந்தோம் . இன்று இதனை சிலர் வேறு பக்கம் திசை திருப்புவதை காண முடிகிறது . .

இதன் பிரதான நோக்கம் இதுவே – இதுவரை காலமும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை இழந்த நாங்கள் சகல துறைகளிலும் பின்னடைவை சந்தித்தோம் .அதிலே தொழில் துறையும் ஒன்றாகும். இதன் விளைவு பிற பகுதி அரசியல்வாதிகள் கூட நமது தொகுதிக்குள் உள்ள அரச நிறுவனங்களில் அவர்களின் மக்களை கொண்டு வந்து நிரப்பும் பணியை செய்தனர் . இதனால் நமது பட்டதாரிகளும் கற்றவர்களும் பொருத்தமான தொழில் ஒன்றை பெறுவதில் பெரும் சவாலை எதிர் கொள்கின்றனர் .

தேர்தல் காலத்தில் தொழில் தருவோம் என்ற சொல்லும் எந்த கட்சியின் எந்த அரசியல்வாதியிடமும் இதுவரை நமது மாவட்டத்தில் எத்தனை பட்டதாரிகள் வேலையின்றி உள்ளனர் எனும் தகவல் இல்லை . மாகாண சபை உறுப்பினர் , நகர சபை , பிரதேச சபை தலைவர்களுக்கு மற்றும் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் ஒன்றிரண்டு வேலைவாய்ப்பு சந்தர்ப்பத்தை கூட அவர்களின் அடிமட்ட ஆதரவாளர்களுக்கு கொடுப்பார்கள் . அந்த ஆதரவாளர்களும் வேலை தந்த நன்றி கடனுக்காக அதே அரசியல்வாதியுடன் ஒட்டி கொண்டிருப்பார்கள் . அந்த அரசியல்வாதி செல்லும் பக்கம் தாங்களும் கொடி தூக்குவார்கள் இதுவே வரலாறு

இந்த தனிமனித செயல்பாடு கடந்து ஒரு வேலைவாய்ப்பு சந்தர்ப்பத்தை கட்சி பேதங்களுக்கு அப்பால் மொத்தமாக பெற்று கொள்வதே நமது நோக்கமாக இருந்தது , இருக்கிறது . இதற்கான ஆரம்ப கட்ட பணியை தான் நாம் மேற்கொண்டோம் .

இதனை வைத்து ஆசிரியர் நியமன போராட்டம் / அரச துறை பங்கீடு என்று பல பேரம் பேசல்களை நமது பாராளுமன்ற உறுப்பினர் மூலம் நாம் தொடர்வோம் . எதிர்வரும் வாரங்களில் கல்வி அமைச்சர் , பொது அலுவல்கள் அமைச்சர் போன்றோரை சந்திக்கவும் இந்த ஆவணங்களை பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் வழங்கவும் கூட முயற்சிகள் தொடர்கிறது .

இந்த நல்லாட்சி அரசை நிறுவ புத்தளம் தொகுதி மக்கள் எடுத்த கரிசனையை அரசின் உயர்மட்டம் நன்கு அறியும் என்பதை நாம் அறிவோம் .

இதனை பயன்படுத்தி தொடர்ந்தும் இந்த கட்சி மக்களின் தொழிலுக்காக போராடும்16832255_1851937411753747_7481738058093131065_n 16832405_1851937461753742_4511782280008128804_n 16831081_1851937505087071_8653435721679662157_n 16807004_1851937618420393_2100108114876393088_n 16831193_1851937651753723_1001151561498297975_n

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *