Breaking
Sun. Apr 28th, 2024

(அண்மையில் அலுத்கமயில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிடப்பட்டு

நடத்தப்பட்ட சம்பவத்தில் முஸ்லிம்களுக்கு உயிர்செதமும் பாரிய

அளவிலான பொருட்சேதமும் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது )

நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துள்ளபோதும் எந்தவொரு வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறாமையானது கவனிக்கப்பட வேண்டியதொரு விடயம் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் ஒவ்வொரு வன்முறைகள் நடைபெற்று வந்த நிலையில் பயங்கரவாதத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், உலகின் எந்தவொரு பகுதியிலும் இல்லாத வகையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஐந்து வருடங்கள் முடிவடைந்துள்ள போதும் ஒரு வன்முறைகூட இடம்பெறவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டு பயங்கரவாதத்தை ஒழித்தது மட்டுமன்றி இதுவரை எந்தவொரு வன்முறையும் இடம்பெறுவதற்கு அனுமதிக்கவில்லையென்பது பாரியதொரு அடைவாகும்.
கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய பொருளாதார அபிவிருத்தியை நோக்கி முன்னேறும் அதேநேரம், அரசியல் ஸ்திரத்தன்மையொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் அக்கறை காட்டியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இந்த அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் அப்பால் தெற்காசிய பிராந்தியத்தில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் இலங்கை பாரிய ஒத்துழைப்பு வழங்கி வருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்லோவேனியா குடியரசின் பிளெட் நகரில் நடைபெற்ற பிளெட் மூலோபாய பேரவை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *