Breaking
Sat. May 4th, 2024

ஜுனைட் எம்.பஹ்த்

அமெரிக்காவை சார்ந்த நிக்கோலா ரிச்சி என்ற பிரபல பாடகி, இஸ்லாத்தை பற்றி ஆராய ஆரம்பித்தார்.

இஸ்லாம் அன்பின் மார்க்கமாக, அமைதியின் மார்க்கமாக, உண்மையின் மார்க்கமாக இருப்பதை அவர் தனது ஆய்வின் போது உணர்கிறார்.

இந்த மார்க்கத்தை பற்றிய உண்மைகளை மறைத்து அந்த மார்க்கத்தில் மீடியாக்கள் தவறாக சித்திரிப்பதை நினைத்து கவலை கொள்கிறார். தாம் இஸ்லாத்தை ஆராய்ந்ததாகவும் அது உண்மை என்பதை அறிந்து கொண்டதாகவும் அதனால் அந்த மார்க்கத்தில் தன்னை இணைத்து கொள்ள போவதாகவும் தனது குடும்பத்திடம் தெரிவித்தார்.

இதை அவரது தாய் கடுமையாக எதிர்த்தார். தாயின் எதிர்பையும் மீறி தன்னை அவர் இஸ்லாத்தில் இணைத்து கொண்டு தனது இசை தொழிலுக்கும் விடை கொடுத்து ஹிஜாபுடன் தன்னை ஒரு முஸ்லிம் பெண்ணாக மாற்றி கொண்டு விட்டார்.

நிக்கோலா ரிச்சி தனது பெயரையும் ஆயிதா என்று மாற்றி கொண்டு விட்டார்.

அமெரக்காவில் இருந்து வெளியேறி புனித தலமான மக்கா மதினாவை அடுத்திருக்கும் பகுதிகளில் தான் வாழ விரும்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

தீவிரவாதத்தை வேரறுக்கும் மார்க்கம் இஸ்லாம்!!

இஸ்லாத்தில் இணைந்த பிரபல அமெரிக்க பாடகி நிக்கோலா ரிச்சி அதிரடி பேட்டி!

அறிவு ஜீவிகள் என்ற பெயரில் வலம்வரும் பல மூடர்கள் தீவிரவாதத்தோடு இஸ்லாத்தை இணைத்து பேசும் காட்சிகளை நாம் கண்டு வருகிறோம்.

இந்த மூடர்களுக்கு மரண அடி தரும் விதத்தில் அமெரிக்க சகோதிரி நிக்கோலா ரிச்சி யின் பேட்டி அமைந்திருக்கிறது.
நிக்கோலோ ரிச்சி அமெரிக்காவின் பிரபல பாடகியாவார் அண்மையில் இவர் இஸ்லாத்தில் இணைந்தார்.

அவர் இஸ்லாத்தில் இணைந்ததற்கான காரணத்தை தனது பேட்டியில் விளக்கியுள்ளார்.

“அமெரிக்காவின் இரட்டை கோபுர தகப்பிற்கு பிறகு அமெரிக்க மீடியாக்கள் மட்டுமன்றி உலக மீடியாக்கள் அனைத்துமே இஸ்லாத்தை தீவிரவாதமாகவும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் சித்தரித்தன.

இதனை தொடர்ந்துதான் நான் இஸ்லாத்தை ஆரய தொடங்கினேன். இஸ்லாத்தை ஆராய்ந்த போதுதான் மீடியாக்களின் பொய்முகத்தை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.

மனித நேயத்தை அடிப்டையாக கொண்டு அமைந்துள்ள ஒரு மார்க்கத்தில் எப்படி இந்த மீடியாக்களால் தீவிரவாதத்தோடு தொடர்ப்புபடுத்த முடிகிறது என எண்ணி வருந்தினேன்.

மனிதாபிமானமும் சகிப்புத் தன்மையும் சகோதரத்துவ உணர்வும் நிறைந்த மார்க்கமாக இஸ்லாத்தை நான் கண்டதால் என்னை நான் இஸ்லாத்தில் இணைத்து கொண்டேன்.”

இவ்வாறு அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *