Breaking
Sun. May 5th, 2024

கடந்த அர­சாங்­கத்தில் கைத்­தொழில் அமைச்­ச­ராக  ரிஷாத் பதி­யுத்தீன் இருந்த போது அவ­ரது  அமைச்­சிற்குள் பலாத் கார­மாக நுழைந்து குழப்பம் விளை வித்த சம்­பவம் தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் இரு பிக்­கு­களை கைது செய்ய நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

இச்­ச­மப்வம் தொடர்பில் ஏற்­க­னவே  குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்ள பொது­பல சேனா அமைப்பைச் சேர்ந்த 6 பிக்­கு­மார்கள்  பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில், தொடர்ச்­சி­யாக வழக்­கு­க­ளுக்கு ஆஜ­ரா­காத 4 ஆவது மற்றும் 5 ஆவது சந்­தேக நபர்­க­ளான பிக்­கு­க­ளையே கைது செய்ய நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது. இதற்­கான உத்­த­ரவை கோட்டை பிர­தான நீதிவான் பிறப்­பித்­துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி அல்­லது அதற்கு அண்­மித்த நாளொன்றில் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சர் றிஷாத் பதி­யு­தீனின் அலு­வ­ல­கத்­துக்குள் அத்­து­மீறி பொது பல சேனாவின் பிக்­குகள் சிலர் நுழைந்­தி­ருந்­தனர்.

மேற்­படி சம்­பவம் தொடர்­பாக குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருந்த 6 பிக்­கு­மார்­க­ளுக்கும்  நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கு­மாறு அழைப்­பாணை விடுக்­கப்­பட்­டி­ருந்­த­தது. இதன்­படி நீதி­மன்­றத்தில் ஆஜ­ரான பிக்­கு­மார்கள் அறு­வ­ரையும் தலா ஒரு இலட்சம் ரூபா பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான்  அனு­மதி வழங்­கினார்.

இந் நிலையில் அவர்­க­ளுக்கு வழக்கில் தொடர்ச்­சி­யாக ஆஜ­ராக உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் 4 ஆவது மற்றும் 5 ஆவது சந்­தேக நபர்­க­ளான பிக்­குகள் தொடர்ச்­சி­யாக மன்றில் ஆஜ­ரா­காமல் இருந்­ததைத் தொடர்ந்து அவர்­களை கைது செய்ய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

இது தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் மீண்டும் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்ள நிலையில் நேற்று மன்றில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் மற்றும் மைத்திரி குணரத்ன ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

-Vidivelli-

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *