Breaking
Thu. May 2nd, 2024

“நீ” எனும் ரிஷாட்!!!

அணுகுண்டுகளும் ஆகாய விமானங்களும் வெடித்துச் சிதரினாலும் எனது ஆத்மா அல்லாஹ்விடம் அழகாய்ப் போய்ச் சேரும்” என்று கூறிவிட்டு மறைந்த மாபெரும் தலைவன் அஷ்ரபின் சங்க நாதமாகிய போராளிகளே புறப்படுங்கள். மர நிழல்களில்  ஓய்வெடுக்க உங்களுக்கு நேரமில்லை.   கடமையைச் செய்ய சமுதாயம் அழைக்கின்றது என்ற வீர முழக்கத்தின் வீர நடையாக விரைந்து செயல்படுபவன் நீ!  பேசினால் பூங்காற்று, வீசினால் புயல் காற்று நீ.

உழைப்பு உனது தாரக மந்திரம்.  உழைப்பே உன் போதி மரம். ஆபத்திலும் துணிபவன் நீ.  சரியாத இமயமலை நீ.  முஸ்லிம் சமூகத்தின் புதிய கலை நீ. மன்னாரிலிருந்து கண்ணீரோடு வந்தாய் நீ. உன்னோடு வந்தோரின்  கண்ணீரை துடைப்பவனும் நீ.

செயல்பட விட்டவர்கள் சிரித்து மகிழ்ந்தாலும் அந்த சின்னத்தம்பி உன் பொம்மையின் முதுகில் தீ வைக்கவில்லை. உன் கொடும்பாவி நெஞ்சிலேயே தீ வைத்தான். வீரனின் அடையாளம் அது என்பதனால், மரண நடிப்பிலும்  கொஞ்சம் நிம்மதி கண்டிருப்பாய் நீ.  கனிந்த மனம் கொண்டவன் நீ. மெளன மொழி பேசி  மன்னிப்போனும் நீ.   “ஹிந்தாவை”யே மன்னித்த மாநபியின் வழி கண்டவன் அல்லவா நீ.

வெற்றியிலே வீராப்பு கொள்ளாதவன் நீ. தோல்வியிலேயே துவண்டு போகாதவன் நீ. அதனால் நிலைத்த புகழ் உனக்கு. வாழ்ந்தவர்கள் கோடி ஆனால் சரித்திரத்தில் நிற்பவனோ நீ. தென்றலாய் வீசுபவனும் நீ.

உன் நெஞ்சத்துத் தீயை சகித்தவன் நீ. நிலையான மனம் உனக்கு, அதனால் நிலைத்த புகழ் உனக்கு.  உன் நெஞ்சில் விழுந்த தீக்காயம் ஆறினாலும் தீப்பந்தம் தாங்கி வந்த கைகளின் வடுக்கள்  இன்னும் ஆறவில்லை. தாக்கியவர்களைக்கூட தாங்கும் மனம் கொண்டவன் நீ.  நெஞ்சத்து தீயோடு மன்னார் மக்கள் துயர் துடைக்க அங்கு சென்ற நீ, ஜின்தோட்டை  அவலக்குரல் கேட்ட நீ அங்கே பற்றியெறியும் தீயை அணைக்க மாலை 7 மணிக்கு புறப்பட்ட நீ. நடுநிசி 12 மணிக்கு ஜின்தோட்டையை அடைந்த  வேகம்.  காற்றின் வேகமா ? அஸ்வ வேகமா ? மனோ வேகமா என்று அதிரவைத்தவன் நீ.

உனது உள்ளத்தின் வேகம், கடமையின் மோகம், எல்லை மிஞ்சும் ஆவல், அது ஜின்களின் வேகமாக அமைந்து ஜின்தோட்டையை அடைந்தவன் நீ. துக்கத்திலும் துயரத்திலும்  அம்மக்களை நடுநிசியில் சாந்தப்படுத்தியவன் நீ. வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும்  உனக்காக கையேந்தி இரைஞ்சும் உள்ளங்களின் சொந்தக்காரன் நீ.  கூ ட இருந்தே குழிபறித்தாலும் நீ கொடுத்ததும், உனக்கான  இரைஞ்லும்  உன்னைக் காத்து நிற்கும்.

எப்படை தோற்றாலும்  வெற்றிப்படை உடையோன் நீ. வெள்ளையனை எதிர்த்து களத்திலே வீர மரணமடைந்த மைசூர் சிங்கம் திப்பு சுல்தானின் சாயல் நீ. மாயா துன்னையின் படைத்தளபதியான கண்கேல் மரைக்கார்அலி இப்ராஹிமின் புலித்திரன் கொண்டவன் நீ. ஜிப்ரோடரை தாண்டிய தாரிக் ஸியாதின் பரம்பரை நீ. சீனாவில் கால் பதித்த அலப் அர்சிலானின் வாரிசுதானா நீ ?

வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால் என்று உரைத்தவன் நீ.  நாற்றம் எடுத்த அரசியலை நருமணமாக்க வந்தவன் நீ. பாதையிலிருந்தோரை படியேற்ற வந்தவன் நீ. கல்வியே வெற்றியின் வழி என்று முழங்கிய வன் நீ. கல்விக்கு உயிர் கொடுப்பது களனிக்கு நீர் வார்ப்பது போன்றதென்றாய் நீ. இத்தனை குணம் கொண்டதால்  மக்களின் நேசனாய் வளர்ந்தாய்  நீ.  நம்பிக்கை நட்சத்திரமானதால் அஷ்ரபின் பிரதியாகிவிட்ட ரிஷாட்  பதியுதீனே நீ, என்பதே மக்களின் ஆதங்கம்.

ஆதங்கம் தொடரும்.:-

தொடர்ந்து வருவாய் “நீ”.

வாழ்த்துக்கள்.

S.சுபைர்தீன்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *