Breaking
Sat. May 18th, 2024

சில நிகழ்வுகள் நமது நெஞ்சங்களில் நீக்கமற நிலை பெற்றுவிடும் அப்படி பட்ட நிகழ்வொன்று இன்று மக்காவில் நடை பெற்றது. ஆம், சவூதி, தம்மாம் நகரைச் சேர்ந்த 57 வயதை நிறைவு செய்த முதியவர்.

57 ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்த பிறகும் அவருக்கு எட்டும் தொலைவில் இருக்கும் புனித மண்ணை பார்ப்பதர்கோ அங்கு ஹஜ் உம்றா செய்வதர்கோ சென்றதில்லை. இந்த மனிதர் ஒரு வழக்கில் அகபட்டு தண்டனை பெற்று தம்மாம் சிறையில் அடைக்க பட்டார்.

சிறையில் இருந்த காலங்களில் தனது கடந்த காலங்களை எண்ணி வருந்தினார் மனம் திருந்தி தவ்பா செய்தார் நல்லமல்களை செய்வதில் ஆர்வம் காட்டினார். மக்காவிற்கு செல்ல வேண்டும் உம்ரா செய்ய வேண்டும் என்ற தனது எண்ணத்தை தம்மாமில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்திடம் வெளிபடுத்தினார்

அந்த தொண்டு நிறுவனத்தினர் சிறையில் விஷேட  அனுமதி பெற்று அவரை உம்ராவிற்கு அழைத்து வந்தனர்.

முதல் முறையாக புனித மண்ணை சந்தித்தார், இறைவனின் முதல் ஆலயமான கஃபாவை சுற்றி தவாப் செய்தார் நோன்பிருந்த நிலையிலேயே ஸபா மர்வா வின் இடையே ஓடுவதர்காக வந்து முதல் சுற்றை ஆரம்பிக்கும்போது அவர் இறைவனிடம் சென்று சேர்ந்தார். ஆம், அவரது உயிர் பிரிந்தது. (இன்னா – லில்லாஹி – வ-இன்னா-இலைஹி-ரஜூஊன்)

ரமழான்  மாதத்தில் நோன்பிருந்த நிலையிலும், உம்ரா செய்து கொண்டு இருந்த நிலையிலும் இறைவன் பக்கம் சென்று சேர்ந்து விட்ட அவரின் ஜனாஸா மக்காவிலேயே நல்லடக்கம் செய்யபட்டது.

ஒரு முஸ்லிமின் கடந்த கால வாழ்கை எப்படி இருந்தாலும் அவனது இறுதி முடிவு சிறப்பானதாக இருக்கவேண்டும் அந்த அடிப்படையில் இந்த மனிதரின் இறுதி முடிவை .இறைவன் சிறப்பானதாக அமைத்து கொடுத்திருக்கிறான். இறைவன் நம் அனைவரின் இறுதி முடிவையும் சிறப்பானதாக அமைத்து தர .இறைவனிடம் வேண்டுவோம்.

கருனையாளருக்கெல்லாம் கருணையாளன் அல்லாஹ். அவனிடம் மன்னிப்பு கேட்டு – பாவத்திலிருந்து மீண்டு. அவனுக்கு நன்றி செலுத்துவோமாக!

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *