Breaking
Thu. May 9th, 2024

சுவிட்சர்லாந்தில் உள்ள மக்களில் மிகுந்த பணக்காரர்கள் பட்டியலில் IKEA நிறுவனரின் குடும்பம் முதலிடம் பிடித்துள்ளது.

சுவிஸின் தொழில்துறை நாளிதழான பிலான்ஸ், சுவிஸில் உள்ள 300 பணக்காரர்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் பிரபல மரச்சாமான்கள் விற்கும் நிறுவனம் வைத்துள்ள கம்பிராட்டின் (Ingvar Kamprad) குடும்பம் முதலிடம் பிடித்துள்ளது.

இவர் தனது சொந்த நாடான சுவீடனில் வசித்து வந்தாலும், இவர்களது மகன் பீட்டர், ஜோனஸ் மற்றும் மத்தியஸ் ஆகியோர் சுவிஸ் கடவுச்சீட்டு வைத்துள்ளனர்.

இவர்களுக்கு சுவிஸில் 42 முதல் 43 பில்லியன் பிராங்குகள் மதிப்புள்ள சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள 300 நபர்கள் மொத்தமாக 589 பில்லியன் பிராங்குகள் வைத்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 25 பில்லியன் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த பட்டியலில் 2வது இடத்தில் மருந்து நிறுவனத்தின் நிறுவனர் ஹாப்மேன் 26 – 27 பில்லியன் பிராங்குகளுடனும், 3வது இடத்தில் உள்ள சுவிஸ்- பிரேசில் நிறுவனர் ஜார்ஜ் பாலோ 25 -26 பில்லியன் பிராங்குகளுடனும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *