Breaking
Wed. May 15th, 2024

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று கொழும்பு விஹா­ர­மகா தேவி பூங்­காவில் வெளியிடப்பட்டது.

(முழு விபரம்)

ஐந்து முக்கிய வேலைத்திட்டங்களை கொண்டதாக தேர்தல் விஞ்ஞாபனம் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் எமது பொரு­ளா­தாரக் கொள்கை அனை­வ­ரையும் செல்­வந்­தர்­க­ளாக்கும் கொள்­கை­யாகும் என்று அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பொரு­ளா­தா­ரம்
எமது ஆட்சியில் 10 இலட்சம் தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­குவதற்கு நடவடிக்கைஎடுக்கப்படும். ஜீ.எஸ்.பி வரிச் சலு­கையை மீளப் பெற்­றுக்­கொள்வோம். தெற்­கா­சிய மற்றும் ஆசிய நாடு­க­ளுடன் பொரு­ளா­தார உடன்­ப­டிக்­கையை செய்து கொள்­வதுடன். உலகப் பொரு­ளா­தா­ரத்­துடன் இணைய நடவடிக்கை எடுக்கப்படும். பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­க­ளுக்­கான 45 பொரு­ளா­தார வல­யங்­களை ஏற்­ப­டுத்தப்படும். அத்துடன் தொழில்­துறை மற்றும் தொழி­நுட்ப அபி­வி­ருத்­திக்­காக 11 வல­யங்­களை ஏற்­ப­டுத்தப்படும்.

சுற்­று­லாத்­து­றையை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக அதி­யுயர் சுற்றுலா அபி­வி­ருத்தி வல­யங்களும் உருவாக்கப்படும். விவ­சா­யத்­து­றையை முன்­னேற்­று­வ­தற்­காக 23 வல­யங்கள் உருவாக்கப்படுவதுடன் எமது உற்­பத்­தி­களை வெளி­நாட்டு சந்­தை­க­ளுக்கு அனுப்பும் நோக்­கி­லான முக்கிய வேலைகளும் முன்னெடுக்கப்படும்.

மீன்பிடி
நாட்டின் மீன் பிடி துறை அபி­வி­ருத்­திக்­காக நீர்­கொ­ழும்பு சிலாபம் வென்­னப்­புவ கல்­பிட்­டிய மன்னார் யாழ்ப்­பா­ணம் திரு­கோ­ண­மலை மட்­டக்­க­ளப்பு அம்­பாறை அம்­பாந்­தோட்டை போன்ற பிர­தே­சங்­களில் மீன்பிடி அபி­வி­ருத்தி வல­யங்கள் உருவாக்கப்படும்

அத்துடன் கிராம அபி­வி­ருத்­தியை மேம்படுத்துவதற்காக நாட்டின் அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கி 2500 கூட்டுக் கிரா­மங்கள் அமைக்கப்படும். அத்துடன் கிராமப் பெண்­களின் முன்­னேற்­றத்­திற்­கான பல்வேறுதிட்­டங்கள் முன்னெடுக்கப்படும் மேலும் கமத்­தொழில் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்களும் செயற்படுத்தப்படும்.

கிராமப்புறங்களில் யானை மற்றும் மனி­தர்­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான திட்­டங்கள் முன்வைக்கப்படும். இவற்றுக்கான விசேட வேலைத் திட்டங்களை அமுல்படுத்துவோம்.

தேயிலைதுறை
தேயிலைத் தொழிற்­துறை முன்­னேற்­றத்­திற்­காக பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தி ஏற்றுமதி நிறுவனம் ஏற்படுத்தப்படும். அதில் தேயிலை தொழில்சாலைகளும் சிறு தேயிலை உற்பத்தியாளருக்கும் விசேட மீள்பயிரிடும் திட்டமும் முன்வைக்கப்படும்.

சமுர்த்தி அர­சியல் கார­ணங்­க­ளுக்­காக நிறுத்­தப்­பட்ட சமுர்த்தி கொடுப்­ப­ன­வுகள் குறித்த பயனாளிகளுக்கு மீள வழங்­கப்­படும். சமுர்த்திக் கொடுப்பனவை வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறுதொழில்
சிறு மற்றும் மத்­தி­ய­தர வர்த்­த­கங்­களை மேம்­ப­டுத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும்.
சிறு தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக சிறிய மற்றும் நடுத்தர அளவு வர்த்தக ஊக்குவிப்பு சபையை நிறுவுவோம்.

இளைஞர் அபி­வி­ருத்­திக்­கான திட்­டங்கள்.
இளைஞர்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு படைப்புக்களை வெ ளிப்படுத்துவதற்காகவும் அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் அனைத்து வசதிகளையும் கொண்ட இளைஞர் நிலையங்கள் மாவட்ட ரீதியில் அமைக்கப்படும்.

இராணுவம் பாது­காப்பு
படை­யி­ன­ர் பயங்­கர வாதத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­ளுக்கு பங்­க­ளிப்பு வழங்­கு­வ­தோடு ஐ.நாவின் சமா­தான படைக்கு பங்­க­ளிப்பு செய்யவும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். மேலதிக உயர் உயர் கல்­வியை பெறுவதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படும்.

அரசசேவை
அரச சேவையை முதன்­மை­ப­டுத்தி பொறுப்பு கூறும் அதி­கார சபை உரு­வாக்­கப்­படும். அவர்களுக்கு அண்மையில் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தொகை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும். அரச ஊழியர்களுக்கு குறைந்த விலையில் இலகு தவணைக் கொடுப்பனவில் வீடுகள் கொடுக்கப்படும். வெளிநாடுகளில் தொழில்வாய்ப்பை பெற்றுச் செல்பவர்களுக்கு சம்பளமற்ற ஐந்து வருட விடுமுறை வழங்கப்படும்.

தனியார் துறை
தனியார் துறை­யி­னரின் ஊழியர் உரி­மைகள் பாது­காக்­கப்­படும். அவர்களின் சம்பள உயர்வுக்காக சட்ட மூலம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும். மாதாந்த குறைந்தபட்ச சம்பளம் 10 ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும். இவ்வருடம் 1500 ரூபா தனியார்களுக்கு வழங்கப்பட்டது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் 1000 ரூபா வழங்கப்படவேண்டும். காணப்படுகின்ற வாழக்கைச் செலவுக்கு அமையவாழ்க்கை செலவு கொடுப்­ப­னவு தீர்மானிக்கப்படும். தொழில் இழக்கும்போது பாதுகாப்பு வழங்குவதற்காக காப்புறுதி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

தோட்டத்தொழிலாளர்களுக்கு வீடுகள்
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு காணியும் லயன் லயன் அறைகளுக்கு பதி­லாக வச­தி­க­ளுடன் வீடுகளும் வழங்­கப்­படும். மலை­ய­கத்தில் கல்­வித்­து­றையை மேம்­ப­டுத்த நட­வ­டிக்­கைகள் முன்­னே­டுக்­கப்­படும்.

ஊழல்மோசடி ஒழிப்பு
ஊழல் மோச­டிகள் முற்­றாக ஒழிக்­கப்­ப­டு­வ­தற்­கான திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும். அனைத்து துறைகளிலும் ஊழலை ஒழிப்பதற்காக சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். தற்போது காணப்படுகின்ற ஊழல் மோசடி ஆணைக்குழுவுக்கு பதிலாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படும். ஹொங்கொங் மற்றும் பிரிட்டனிலுள்ள முறைமைகள் பரிசீலிக்கப்படும். தேர்தலுக்கான செலவுகள் வரையறுக்கப்படும். தகவலறியும் சட்டமூலம் தேசிய கணக்காய்வு சட்டம் என்பன நிறைவேற்றப்படும்.

பொலிஸ்
பொலிஸ்­ துறை ப­லப்­ப­டுத்­தப்­படும். 1865 ஆம் ஆண்டு பொலிஸ் கட்டளைச் சட்ட மூலத்திற்கு பதிலாக புதிய சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்படும். நிதி விசாரணை புலனாய்வுப் பிரிவு பாராளுமன்ற சட்ட மூலத்தின் பிரகாரம் பொலிஸ் மற்றும் குற்றவியல் நீதி தொடர்பான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும். பொலிஸ் சேவையின் சம்பள முரண்பாடுகள் மற்றும் பதவி உயர்வு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.

மது­ போதை­வஸ்து இல்­லாத நாடு
போதைப் பொருள் வியாபாரம் தொடர்பில் மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கான சட்டமூலங்கள் நிறைவேற்றப்படும். போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சுதந்திரம்
நாட்டின் ஜனநாயகத்தை பலப்படுத்தி நல்லாட்சி கோட்பாடுகளை அரசாங்கத்துறையில் இணைத்து மனித உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசியலமைப்பின் அடிப்படை உரிமை தொடர்பான அத்தியாயத்தை மேலும் பலப்படுத்துவோம்.நாட்டின் இனப்பிரச்சினைக்கு அனைத்து தரப்பினதும் ஒத்துழைப்புடனும் இணக்கப்பாட்டுடனும் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் அதிஉச்ச அதிகார பகிர்வுக்கு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் . பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூறும் அமைச்சரவை அமைக்கப்படும்.

விருப்பு வாக்குமுறைமை நீக்கப்பட்டு விகிதாசார மற்றும் தொகுதிவாரி முறைமையிலான தேர்தல் முறை அமுல்படுத்தப்படும் . பாராளுமன்ற கண்காணிப்புக் குழுக்கள் 20 நியமிக்கப்படும். அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் அபிவிருத்தி இணைப்பு குழுக்கள் உருவாக்கப்படும்.
அதன் தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவார்கள்.

அர­சி­ய­ல­மைப்பு சிக்­கல்­களை தீர்­ப­தற்­கான அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்றம் அமைக்கப்படும். அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக சமூக பொருளாதார சிவில் பிரதிநிதித்துவங்கள் அடங்கிய உயர் ஆலோசனை சபை அமைக்கப்படும். எதாவது ஒரு சட்ட மூலத்தை மீள் பரிசீலிப்பதற்காக இந்த சபையினால் குறித்த சட்ட மூலத்தை மீண்டும் பாராளுமன்றத்திற்கு அனுப்பும் அதிகாரம் உள்ளது. நல்லாட்சி நிறுவனங்கள் நாட்டின் நான்காவது தூணாக பார்க்கப்படும்.

மதங்கள்
பௌத்தம் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் அனைத்து மதங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இளம் தேரர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகான மகாநாயக தேரரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இந்து மதத்தைப் பொறுத்தவரை வலிவடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்திற்கு செல்வதற்கு ஏதாவது தடைகள் காணப்படின் அவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆலயங்கள் மற்றும் கடுமையான நிதிநெருக்கடிகளை சந்தித்துள்ள ஆலயங்களை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

அறநெறி ஆனந்தம்
அறநெறி ஆனந்தம் திட்டத்தின் கீழ் உயர் கல்வியை பெற்றிராத ஆசிரியர்களுக்கு தேவையான உயர் கல்வியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக யாழ்.மற்றும் கிழக்கு பல்கலைக்கழங்ககளின் உதவிகள் பெறப்படும்.

கிறிஸ்தவம்
கிறிஸ்தவ விவகார அமைச்சு மீண்டும் உருவாக்கப்படும். வரவு செலவுத்திட்டத்தில் அதற்காக நிதி ஒதுக்கப்படும். மத சுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கையெடுக்கப்படும். வடக்கில் அழிந்துள்ள தேவாலயங்களை புனரமைக்க நடவடிக்கையெடுக்கப்படும்்.

முஸ்லிம்
முஸ்லிம்மக்களின் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் வர்த்தக நிலையங்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்கக நடவடிக்கையெடுக்கப்படும். வடகிழக்கிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள் குடியேற்றம் செய்யப்படுவார்கள். மௌவி வெற்றிடங்கள் நிரப்பப்படும்.

நல்லிணக்கம்
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு உயர்ந்த மட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் .ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேரவையுடனும் அதன் உறுப்பு நாடு­க­ளு­டனும் இலங்­கையில் அனைத்து மத மற்றும் இனக் குழு­மங்­க­ளு­டனும் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு தேசிய சட்ட வரை­ய­றைக்குள் ஐ.நாவின் மனித உரிமை அலுவலகத்தின் அறிக்­கை­க­ளுக்கு பதில் வழங்­கப்படும் .

கலைத்துறை
சுதந்திரமான கலைதுறை. விளையாட்டு துறை என்பவற்றை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கையெடுக்கப்படும்..

பெண்கள் உரிமைகள் பாதுகாப்பு
எமது நாட்டில் பெண்கள் தொடர்பாக நிலவுகின்ற தவறான எண்ணங்கள் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் சமம்மின்மை. அவர்களின் பிரச்சினை என என்பதை ஐ.தே.க. அறிந்துவைத்துள்ளது. அந்த வகையில் பெண்களின் பொருளாதார சமூக கலாசார உரிமங்களை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கையெடுக்கப்படும். பெண்கள் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்படும். அனைத்து அதிகாரங்களுடன் கூடிய தேசிய பெண்கள் பாதுகாப்பு ஆணைக்குழு நிறுவப்படும்.
பெண்களுக்கு எதிரான பாலியல்வன்கொடுமைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவை தொடர்பான வழக்குகள் குறுகிய காலத்தில் விசாரிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மாவட்ட மட்டத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அலுவலங்கள் மற்றும் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். பாலியல்வன்கொடுமைகளை தடுப்பதற்காக விசேட அதிகாரங்களுடன் ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படும். உள்ளூராட்சி மன்றங்களில் 25 வித பெண்களுக்கான ஒதுக்கீடு வழங்கப்படும்.
அபிவிருத்தி
மேல் மாகாணத்தின் அடிப்படை வசதிகளை முன்னேற்றுவதற்கான முதலீடுகள் பெற்றுக்கொள்ளப்படும். நடுத்தர மக்களுக்காக 5 இலட்சம் வீடுகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அபிவிருத்தியையும் சுகாதார மற்றும் நலன்புரி வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படும்.

சிரேஷ்ட பிரஜைகளை கௌரவித்தல்.
சிரேஷ்ட பிரஜைகளை சிறந்த உற்பத்தி திறன்மிக்க பிரஜைகள் ஆக்க உருவாக்க நடவடிக்கையெடுக்கப்படும். அவர்கள் தமது வாழக்கையை கௌரவமாகவும் சுயாதீனமாகவும் நடத்துவதற்கு தேவையான நிதி மற்றும் உதவிகள் வழங்கப்படும்.

கல்வி
கல்வித்துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும். சாதாரண தர பரீட்சைகள் எவ்வாறு இருப்பினும் மாணவர்கள் உயர்தரம் கல்வி கற்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். 13 வருட பாடசாலை வாழ்க்கை கட்டாயப்படுத்தப்படும். எந்தவேறுபாடின்றி அனைத்து பாடசாலைகளுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படும். பாடசாலை கண்காணிப்பு சபைகள் உருவாக்கப்படும். அனைத்து பாடசாலைகளுக்கும் சுகாதார வசதிகள் செய்துகொடுக்கப்படும். அனைத்து பாடசாலைகளிலும் ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் இருக்கும் நடவடிக்கையெடுக்கப்படும்.புதிய பாடசாலை கல்வி சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படும்.

ஆசிரியர்கள் கல்வி நடவடிக்கைகள் தவிர வேறுஎந்த செயற்பாடுகளிலும் ஈடுபட முழுமையாக தடை செய்யப்படும். தேசிய பரீட்சைகளுக்கான திகதிகள் நிர்ணயிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்ற அனுமதியின்றி கல்வி அமைச்சரால் மாற்ற முடியாது.

மொத்த தேசிய உற்பத்தியில் 6 வீதம் கல்விக்காக ஒதுக்கப்படும். பல்கலைக்கழக கல்வி சபை ஒன்று உருவாக்கப்படும். அனைத்து பீடங்களிலும் இலத்திரனியல் கல்வி நிலையங்கள் உருவாக்கப்படும். வாசிப்பு நிலையங்களில் இலவச வைபை உருவாக்கப்படும்.

2016 ஆம் ஆண்டில் இருந்து அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தங்குமிட விடுதிகள் அமைத்துக்கொடுக்கப்படும்.பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட ஆங்கில பாடநெறி முன்னெடுக்கப்படும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *