Breaking
Mon. Jun 3rd, 2024

பாத்திமா பர்சானா ஜனாதிபதிக்கு கடிதம்

முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் ஆட்சேரப்புச் செய்யப்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு பயிரினங்கள்,விதைகள், மற்றும் ஏனையவறடறை வழங்கும், 5ம் வகுப்பு படித்தவர்கள் செய்யும் வேலைகளைச் செய்து வந்தார்கள்.

ஆனாலும், ஜனாதிபதி தனது 100 நாள் வேலைத்திட்டத்தில் ‘பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வழங்கப்படும் தெரிவித்திருந்தார்’. ஆனாலும் நூறு நாள் இன்னும் கடக்காத நிலையில் தற்போது பயிரினங்கள் வழங்க வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குப் பணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இலவசமாக பயிர்விதைகள், தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது இப்புதிய அரசாங்கத்தில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமசேவகர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து 50 குடும்பத்தை தெரிவு செய்தல் வேண்டும் பின்னர் அவர்களுக்கான பயரினங்கள் வழங்கப்படும் பின்னர் தலா ஒரு பயிர் பொதிக்கு 150 ரூபா வீதம் அறவிட வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இது அம்பாறை மாவட்டத்தின் ஒரு குறிப்பிட்ட பிரதேச செயலகங்களில் மட்டும் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மிகவும் கேவலப்படுத்தப் பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தயவு செய்து இச்செய்தியை ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவர ஊடகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

எல். எம். பாத்திமா பர்சானா

Related Post