Breaking
Tue. Apr 30th, 2024
அனுர குமார திசாநாயக்க; இப்படியான ஒரு பதவி தேவையா?? ஒரு தனிப்பட்ட மனிதர் ஒரு மாபெரும் பணத்தொகையை வீணடிக்கும், ஒரு மாபெரும் தொகையை செலவழிக்கும் ஒரு ஆட்சியாளர் நமக்கு தேவையா? இந்த நடப்பாண்டின் கணக்குப்படி ஒரு நாளுக்கான செலவு இருநூற்று அறுபத்து இரண்டு இலட்சங்கள்.
இதை எப்படி செலவழிப்பார்கள் என்பதை நினைத்து பாருங்கள். ஐயாயிரம் ரூபாய் தாள்களாக மாற்றி சாப்பிடுகின்றார்களோ தெரியாது!!! காலையில் ஐயாயிரம் ரூபாத்தாள் சம்பல், இரவுக்கு சொதி என்று சாப்பிடுவார்களோ தெரியாது!!
யோசித்துப்பாருங்கள் இந்தளவுக்கான மக்கள் பணத்தை கையகப்படுத்திக்கொண்ட ஒரு ஆட்சியாளர். இதனால் தெரிவது இந்த ஜனாதிபதி முறையானது பண விரயத்தை மட்டுமல்ல ஒரு விகாரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சபை முதல்வரவர்களே எங்கள் நாட்டில் ஒரு சம்பிரதாயம் இருந்தது யாராவது ஒருவர் ஒருவரை தாக்கினால், தாக்கியவர் தண்டிக்கப்பட வேண்டும், தாக்கியவர் தாக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கோர வேண்டும். எங்கள் நாட்டில் நடப்பது என்ன தெரியுமா?? இங்கு தாக்கப்பட்டவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு தாக்கியவரை வத்திக்கானுக்கு அழைத்து செல்கின்றார்கள். இநத நாட்டில் நீதி எங்கே இருக்கிறது??
பாம்புக்கு மண்ணெண்ணெய் வார்த்தது போல் இங்கு ஒருவர் துடிக்கின்றார். அவர் துடிப்பின் இருந்தே தெரிந்து கொள்ளலாம் சபை முதல்வரவர்களே!!! நாங்கள் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி விட்டு மகர சிறைச்சாலையில் இருக்கவில்லை. வங்கிகளை ஏமாற்றிவிட்டு சிறை கூடங்களில் அடைபட்டவர்கள் அல்ல நாங்கள். மக்கள் பணத்தில் ஒரு சதத்தையேனும் வீணடித்து திருடியவர்கள் அல்ல நாங்கள். மக்கள் பணத்தை கொள்ளையிட்டவர்கள் இங்கு ஆட்டம் போடுவதை எங்களால் இப்போது காணக்கூடியதாக உள்ளது. என்னை பேச்சை முடிக்க விடுங்கள், கடைசியில் உங்களை பற்றி ஒன்றும் இல்லை, என்ன பேச விடுங்கள்.
சபை முதல்வர் ; மதிப்புக்குரிய சஜின் வாஸ் அவர்களே அமைதியாக இருங்கள். அவரை பேச அனுமதியுங்கள்.
அனுர குமார திசாநாயக்க; கடைசி வாக்கியங்களில் நீங்கள் அங்கு இங்கு கை வைத்தவைகள் இல்லை, நீங்கள் ஹெலிகாப்டர் வாங்கிய விடயங்கள் இல்லை, மஹர சிறையில் இருந்தவைகள் இல்லை. நீங்கள் கிரிஸ் நோனிஸை தாக்கிய விடயங்கள் இல்லை. என்னை பேச அனுமதியுங்கள்
சபை முதல்வர்; மதிப்புக்குரிய அனுர குமார திசாநாயக்க அவர்களே உங்கள் உரையை முடித்துக்கொள்ளுங்கள்.
அனுர குமார திசாநாயக்க; ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியை கையகப்படுத்திக்கொண்டு, உண்மையான கட்சி காரர்களை மௌனமாக்கி உள்ளீர்கள்.
சபை முதல்வர்; ; பாராளுமன்றம் ஐந்து நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *