Breaking
Sun. May 19th, 2024

பாராளுமன்றத்தில் நேற்று(03) நடைபெற்ற நடவடிக்கைகளானது பாராளுமன்றத்தின் உயரிய தன்மைக்கும் அபிமானத்துக்கும் பெரும் களங்கத்தினை ஏற்படுத்தியுள்ளது எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவர்களையும் தாம் வன்மையாக கண்டிப்பதாக சாபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று சபையில் அறிவித்தார்.

பாராளுமன்ற சபா மண்டபத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தின் மே மாதத்தின் முதலாவது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியதோடு அதன் பின்னர் பாராளுமன்றத்திற்குள் இடம்பெற்ற கூச்சல் குழப்பம் மோதல்களையடுத்து சபை 1.35 க்கு இடை நிறுத்தப்பட்டு மீண்டும் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமானதோடு இதன் போது சபாநாயகர் சபைக்கு விசேட அறிக்கையொன்றை விடுத்த போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.

இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இச் சந்தர்ப்பத்தில் சபை நடவடிக்கைகளை தற்காலிகமாக இடை நிறுத்தி கட்சித் தலைவர்களை கூட்டி விசேட கூட்டமொன்றை நடத்தினோம். இதில் கலந்து கொண்ட எம். பி.க்கள் இச்சம்பவத்திற்கு தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர். இதன் பின்னர் இச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பிரதி சபாநாயகர்கள் மற்றும் குழுக்களின் பிரதிநிதி தலைவர் தலைமையில் குழுவொன்றை நியமித்தேன். உடனடியாக இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தெரிவித்துள்ளேன். இவ் அறிக்கை கிடைத்ததும் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்படும் எம்.பி. க்கள் தொடர்பில் தெளிவான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் சம்பவம் பாராளுமன்றத்தின் கௌரவத்திற்கு இழுக்கினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தால் எம்.பி. க்கள் பலருக்கு காயமேற்பட்டுள்ளதோடு எம்.பி.யொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *