Breaking
Tue. May 14th, 2024

பாரீஸில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையின் போது துப்பாக்கி சண்டை ஏற்பட்டு உள்ளது. இதில் போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்து ஒருவர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 6 இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 129 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைப்படை தீவிரவாதிகள் 8 பேரும் கொல்லப்பட்டனர்.

இந்த தீவிரவாதிகள் அனைவரும் அண்டை நாடான பெல்ஜியத்தில் உள்ள தீவிரவாதிகளின் உதவியுடன் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அந்த நாட்டிலும் தீவிரவாதிகளையும், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் தேடும்பணி தீவிரமாக முடுக்கிவிடப்பட்டு உள்ளது. பாரீஸ் தாக்குதலை அடுத்து பிரான்ஸ் எல்லைகள் சீல் வைக்கப்பட்டு தொடர்ந்து தேடுதல் வேட்டையானது நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தாக்குதல் நடத்திய 9 வது தீவிரவாதியும் தப்பிவிட்டதாக, வீடியோ தகவல்களை ஆதாரமாக கொண்டு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஐரோப்பிய நாடுகள் முழுவதும் தேடுதல் வேட்டையானது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

பாரீஸ் புறநகர்பகுதியான செயின்ட்-டெனிஸில் தீவிரவாதிகளை தேடுதல் வேட்டையில் பிரான்ஸ் போலீஸ் படை ஈடுபட்டிருந்தபோது, மறைந்திருந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திஉள்ளனர். இதனையடுத்து தற்போது, இருதரப்பு இடையேவும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டு உள்ளது. துப்பாக்கி சண்டையில் போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்து உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *