Breaking
Thu. May 16th, 2024

காஸா – இஸ்ரேல் யுத்தம் முடிந்ததன் பின்னர் சர்வதே சத்தின் பார்வை பலஸ்தீனை நோக்கித் திரும்பியுள்ளது என்றே சொல்லவேண்டும். 65 வருடங்களாக பலஸ்தீன் மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப் புகளை -அட்டூழியங்களைக் கண்டுகொள்ளாத சர்வதேசத் தின் கண்களை காஸா – இஸ்ரேல் யுத்தம் திறந்துள்ளதை, பலஸ்தீனுக்கு ஆதரவாகக் குரல் எழுப்ப வைத்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

காஸா மீதான யுத்தம் நீடிக்க நீடிக்க அழிவுகள் கூடிக்கொண்டு போனமை ஒருபுறமிருக்க, மறுபுறம் அந்தப் பிரச்சினை , இஸ்ரேலின் கோர முகம் சர்வ தேசத்தை வேகமாகச் சென்ற டையத் தொடங்கின; பல நாடு கள் இஸ்ரேலின் உற்பத்திக ளைப் புறக்கணிக்கத் தொடங் கின; இஸ்ரேலைக் கண்டிக்கத் தொடங்கின; உலகம் பூராகவும் இஸ்ரேலுக்கு எதிர்ப்புகள் கிளம் பின; இடதுசாரிக் கொள்கையு டைய யூதர்கள் கூட இஸ்ரேலை எதிர்த்தனர்.

யுத்தம் முடிவுற்ற பின் பலஸ் தீன் சுயாதீன நாடாக – 1967 ஆம் ஆண்டின் எல்லைகளைக் கொண்டு நிறுவப்பட வேண்டும் என்ற கோ­ம் இப்போது சர்வ தேச அரங்கில் முன்வைக்கப் படுகிறது.
இஸ்ரேல் கைப்பற்றிய பலஸ் தீன நிலங்கள் அனைத்தையும் இஸ்ரேல் 3 வருடங்களுக்குள் தம்மிடம் ஒப்படைக்க வேண் டும் என்று காலக்கெடு விதிக்கும் பிரேரணை ஒன்றை பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஐ.நாவுக்குக் கொண்டுவரவுள் ளார்.

சுவீடன் கடந்த வாரம் பலஸ் தீனை சுயாதீன நாடாக அங்கீ கரித்தது. ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்த நிலைப் பாட்டை நோக்கிச் செல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 2011இல் மற்றுமொரு ஐரோப் பிய ஒன்றிய நாடான ஸ்பெயி னும் நாடாளுமன்றில் பிரே ரணை கொண்டுவந்து நிறை வேற்றியது; பலஸ்தீனை அங் கீகரித்தது.

இவ்வாறு சர்வதேசம் மெல்ல மெல்ல பலஸ்தீனை அங்கீக ரித்து வருகின்றது. இந்நிலை யில், பலஸ்தீனைச் சேர்ந்த மிக முக்கியமான கிரிஸ்தவ குரு மார் மூவர் பலஸ்தீனுக்கு ஆதர வாகக் குரல் எழுப்பத் தொடங் கியுள்ளனர். பலஸ்தீனை அங் கீகரிக்குமாறு சர்வதேசத்துக் குக் கோரிக்கை விடுத்துள்ள னர்.

“பலஸ்தீனை உடனடியாக அங்கீகரிக்குமாறு நாம் இந்தச் செய்தியை பலஸ்தீனின் தலை நகரான தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெரூ சலத்திலிருந்து விடுக்கின்றோம். சர்வதேசத்துக்கு -குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றிய நாடுக ளுக்கு நாம் இந்தக் கோரிக் கையை விடுகின்றோம். நீங் கள் உடனடியாக விரைந்து பலஸ்தீனை அங்கீகரிக்க வேண் டும்; இஸ்ரேலின் பிடியிலிருந்து அதை மீட்டுத்தர வேண்டும்” என மூன்று குருமாறும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ள னர்.

கிறிஸ்தவ குருமார்கள் பலஸ் தீனுக்கு ஆதரவாக d தமது தாய் நாட்டுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பது பலஸ்தீன மக் களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
பலஸ்தீனிலுள்ள கிறிஸ்தவர் கள் மற்றும் முஸ்லிம்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்காக இஸ்ரேல் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அம் முயற்சிகளில் ஒன்றாகக் கிறிஸ் தவர்களை இஸ்ரேலிய இராணு வத்தில் இணைவதற்கு வரு மாறு இஸ்ரேலிய அரசு கடந்த வருடம் அழைப்பு விடுத்திருந் தது.இது கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களிடையே பிளவு களை உண்டுபண்ணும் இஸ் ரேலின் சதி எனத் தெரிவித்து கிறிஸ்தவ குருமார்கள், இரா ணுவத்தில் இணைய வேண் டாம் என கிறிஸ்தவ இளைஞர், யுவதிகளுக்குக் கட்டளையிட்ட னர்.
19 இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்ற காஸாவில் வெறும் 1,500 கிறிஸ்தவர்களே உள்ள னர். காஸா d இஸ்ரேல் யுத்தத் தில் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்படு வர் எனத் தெரிவித்து அவர் களை இஸ்ரேலுக்கு வருமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டது; அனைத்து வசதிகளும் இலவ சமாகச் செய்துதரப்படும் எனக் கூறியும் அவர்கள் காஸாவை விட்டுப் போகவில்லை. ஹமா ஸின் ஆட்சியில் அவர்கள் நிம் மதியாக வாழ்வதாகத் தெரிவித் தனர்.

அந்த யுத்தத்தில் கிறிஸ்தவர் ஒருவர் மரணித்தும்கூட அவர் கள் காஸாவை விட்டுச் செல்ல மறுத்துவிட்டனர். இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் தங்குவதற்குத் தேவாலயத்தில் இடங்கொடுத் தனர்.
பலஸ்தீனை இஸ்ரேலிடமி ருந்து மீட்டெடுப்பதாக இருந் தால் இவ்வாறான ஒற்றுமை தேவை என உணரப்படுகிறது. ஆனால், இஸ்ரேலோ தொடர்ச் சியாகப் பிரித்தாளும் சூழ்ச்சி யையே பயன்படுத்தி வருகின் றது. பலஸ்தீனை கூறுபோடுவ தற்கு யூதர்கள் முதலில் பயன் படுத்திய ஆயுதம் இந்தப் பிரித் தாலும் தந்திரம்தான்.

பலஸ்தீன முஸ்லிம்கள் – பலஸ்தீன் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இஸ்ரேல் இருக் கின்றது. இதனால்தான் ஹமா ஸும் பாத்தாஹ்வும் ஒன்றி ணைந்ததைக் கடுமையாக எதிர்த்தது இஸ்ரேல். அதை அடிப்படையாக வைத்தே ஹமா ஸுக்கு எதிரான யுத்தத்தைத் தொடங்கியது.

பலஸ்தீனை அங்கீகரிக்கு மாறு -இஸ்ரேலிடமிருந்து அதை முற்றாக மீட்டுத் தருமாறு இன்று சர்வதேசத்திடம் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் நிலையில் ‡ இன்று பல சர்வதேச நாடுகள் பலஸ்தீனுக்கு ஆதரவாகத் திரும் பியுள்ள நிலையில் பலஸ்தீனர் கள் மாத்திரமல்ல, உலக முஸ்லிம் களே ஒன்றுபடவேண்டிய தேவை எழுந்துள்ளது. அது நடந்தால் மிக விரைவில் பலஸ்தீன் மீட் கப்படும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *