Breaking
Sat. May 18th, 2024

சார்ளி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டவுடன் ஃப்ரான்ஸில் இஸ்லாம் தனது வீரியத்தை இழக்கும் என்றுதான் எல்லோரும் எண்ணினர். ஆனால் நிலைமையோ தற்போது தலைகீழாக மாறியுள்ளது.
.
முன்பு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டவுடன் இஸ்லாம் எப்படி அசுர வேகத்தில் பரவியதோ அதே போன்று இன்று ஃப்ரான்ஸ் முழுவதும் இஸ்லாத்துக்கு ஆதரவான ஒரு சூழல் எற்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் என்றால் யார் என்றே தெரியாமல் இருந்த பல ஃப்ரான்ஸ் நாட்டு மக்கள் இன்று ஆர்வத்தோடு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வாங்கிச் செல்கின்றனர். குர்ஆனின் மொழி பெயர்ப்பு மிக அதிக அளவில் விற்றுத் தீர்கிறது.
.
ஃபிளாசபி மேகசின் (Philosophie magazine) என்ற பத்திரிக்கையின் டைரக்டர் ஃபேப்ரிக் ஜெர்சல் (fabric gerchel) கூறுகிறார் ‘தற்போது ஃப்ரான்ஸில் இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மிக வேகமாக விற்பனையாகின்றன. பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டதற்கு பிறகு இந்த விற்பனை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதத்தில் குர்ஆனின் மொழி பெயர்ப்பு விற்பனையானது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது’
.
Mathilde Mahieux, of La Procure chain of bookshops என்ற புத்தக நிறுவனமானது மத சம்பந்தப்பட்ட புத்தகங்களை மட்டுமே அச்சிட்டு விநியோகிக்கும் ஒரு நிறுவனம். இவர்கள் கூறுவதாவது

ஆய்வு செய்வதற்காக நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றையும், குர்ஆனின் மொழி பெயர்ப்புகளையும் ஃப்ரான்ஸ் மக்கள் அதிகமதிகம் வாங்கிச் செல்கின்றனர். இந்த எழுச்சியை முன்பு நாங்கள் கண்டதில்லை’ என்கின்றனர்.
.
‘அல்புராக்’ என்ற பெயரில் புத்தக பப்ளிசராக பணிபுரியும் இஸ்லாமியரான மன்சூர் கூறுகிறார் ‘தற்போது இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்களின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளன. செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு நிலைமை எவ்வாறு இருந்ததோ அது போன்ற நிலையை நான் தற்போது பார்க்கிறேன்’ என்கிறார்.
.
Yvon Gilabert யுவான் கிளாபர்ட் வெஸ்டர்ன் ஃப்ரான்ஸில் புத்தக கடை நடத்தி வருபவர். அவர் கூறுகிறார் ‘கத்தோலிக்க பெண் ஒருவர் என்னிடம் வந்து குர்ஆனின் மொழி பெயர்ப்பு கேட்டார். ‘நீங்கள் கத்தோலிக்கர் ஆயிற்றே! குர்ஆன் எதற்கு’ என்று கேட்டேன். ‘குர்ஆன் உண்மையில் வன்முறையைத்தான் போதிக்கிறதா’ என்பதை ஆய்வு செய்வதற்காக இதனை வாங்குகிறேன்’ என்கிறார்.
.
சென்ற மார்ச் மாதம் ஃப்ரான்ஸ் புத்தக கண்காட்சியில் அதிகம் விற்பனையான புத்தமாக கருதப்பட்டது “A Christian Reads The Koran,” என்ற புத்தமாகும். இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1984 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
.
ஜீன் ராய் சர்போர்ன் பல்கலைக் கழகத்தில் புரபஸராக வெலை செய்து வருகிறார். இவர் தனது அனுபவத்தைப் பகிரும்போது ‘ஓரிறைக் கொள்கை என்ற தத்துவமானது பொதுவாக எல்லோரும் ஒத்துக் கொண்ட ஒன்று. தற்போது குர்ஆனை ஆழ்ந்து படித்து வருகிறேன். இனி எனது கல்லூரி பாடங்களில் குர்ஆனும் இடம் பெறும்’ என்கிறார்.
.
தொடர்ந்து உண்மை செய்திகளை உடனுக்குடன் அறிய எம் பக்கத்தை லைக் செய்து எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்:

https://www.facebook.com/acmc.lk

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *