Breaking
Tue. May 14th, 2024

*குழந்தைகளின் பெற்றோர்களும் மற்றும் குழந்தைக்காக ஏங்கி எதிர்பார்க்கும் பெற்றோர்களின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்லப்பட வேண்டிய செய்தி இது..!

கேமிரா ப்ளாஷ் ஆன் ஆகி இருப்பதை மறந்து , பிறந்து 3 மாதங்களே ஆன குழந்தையை க்ளோஸ்-அப்பில் போட்டோ எடுத்துள்ளார் அக்குழந்தையின் குடும்ப நண்பர் ஒருவர்,
ப்ளாஷின் பாதிப்பினால் ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ளது அக்குழந்தை..!

புகைப்படம் எடுத்தப்பின் குழந்தையின் கண்களில் ஏதோ மாற்றத்தை கண்ட அப் பெற்றோர்கள் அதிர்ந்து போய் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவர்கள், குழந்தையை பரிசோதித்துவிட்டு மிக அருகாமையில் ப்ளாஷ் போடப்பட்டு படம் எடுக்கப்பட்டதால்
(கிட்டத்தட்ட 10 இன்ச் அருகாமையில்) அதானால் குழந்தையின் வலது கண் பார்வையை இழந்துள்ளது என்று கூறியுள்ளனர்..!

மேலும், சக்தி வாய்ந்த ப்ளாஷ் குழந்தைகளின் கண்ணின் கருமணியை பாதிப்புக்குள்ளாக்கி விடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்*

நம்மில் சிலர்கள் குழந்தை பிறந்தவுடனே அக்குழந்தையை செல்போனிலும் ,சக்திவாய்ந்த காமிரா மூலமும் பலக் கோணங்களிலும் அடிக்கடி படம் எடுத்து வெளிநாட்டில் இருக்கும் குழந்தையின் தந்தைக்கும் ,அன்பர்களுக்கும் .நண்பர்களுக்கும் ஆர்வக்கோளாரின் காரணத்தினால் அனுப்புகின்றனர்.
அப்படி படம் எடுப்பதும்,
குழந்தையின் தாயார் குழந்தைகளின் மிக அருகில் செல் போன்களை வைத்துக்கொண்டு பேசுவதும் அக் குழந்தையின் உடல் நலத்திற்கு கேடுவிளைவிப்பதுடன் ,உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தும் ,என்பதையும் ஏனோ மறந்து விட்டு செயல் படுகின்றனர்.
சில மருத்துவமனைகளில் குழந்தைகள் பராமரிப்பு குறித்தும் குழந்தைகளை எளிதில் பாதிப்பிற்கு உள்ளாக்கும் கதிர்வீச்சுகள் குறித்தும் பெற்றோர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை மறந்துவிட்டு பணம் ஈட்டுவது ஒன்று மட்டுமே குறிக்கோளாய் இருந்து வருகின்றன .
எது எப்படிஇருப்பின்,பெற்றோர்களும் மற்றோர்களும் குழந்தைகள் விசயத்தில் கண்னும் கருத்துமாக விழிப்புணர்வுடன் செயல்பட்டு வந்தால் உள்ளமும் இல்லமும் சிறப்புடன் விளங்கும் *

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *