Breaking
Tue. May 21st, 2024

இர்ஷாத் றஹ்மத்துல்லா

யுத்தத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளான முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள புதுக்குடியிறுப்பு பிரதேச செயலகப் பிரிவில் இயங்கிவரும் டெஸ்கோ ஆடை உற்பத்தி நிலையத்தினை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் ,அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று பார்வையிட்டுள்ளார்.
கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் ஆடை உற்பத்தி நிறுவகங்கள் காணப்படுவதாலும்,இதன் மூலம் இப்ப்பிரதேசத்தில் மேலும் ஆயிரக்கணக்கான  இளைஞர்,யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் வகையில் இதனது உற்பத்தியினை மேலும்  விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் அமைச்சர் றிசாத்  முகாமைத்துவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
தற்போது  ஆடைத் தொழிற்சாலையின் விஸ்தரிப்பு வேலைகள் இடம் பெறுவதாகவும் இன்னும் சில மாதங்களில் புதியவர்கள் உள்ளீர்க்கப்படவுள்ளதாக டெஸ்கோ முகாமைத்துவ பணிப்பாளர் அமைச்சரிடத்தில் எடுத்துக் கூறினார்.
.இது தொடர்பில் தேவையான உதவிகளை தமது அமைச்சு செய்து கொடுக்க தயாராகவுள்ளதாக இங்கு தெரிவித்த அமைச்சர் றிசாத்  எதிர்காலத்திலும் இம்மாவட்டத்தில் மேலும் தொழிற்பேட்டைகளை அமைப்பது தொடர்பில் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த வுள்ளதாகவும்  கூறினார்.
அமைச்சருடன்,வடமாகாண சபை உறுப்பினர் ஜனுாபர்,முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி.கேதீஸ்வரி,செரமிக் கூட்டுத்தாபன பிரதி நிதி விஜின்தன்,முல்லை மாவட்ட அமைச்சரின் அபிவிருத்திக்கான இணைப்பாளர் எம்.மபூஸ் உட்பட பலரும் இணைந்திருந்தனர்.
RR.jpg2_

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *