Breaking
Fri. May 17th, 2024

சவூதி அரேபியாவின் King Saud பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்களான இளைஞர் குழு ஒன்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அப்ரஹா மன்னனின் யானைப்படை புனித கஅபாவை அழிப்பதற்காக பயன்படுத்திய பாதை ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.

இந்த யானைப்படை தொடர்பில் புனித அல்-குர்ஆன், 1௦7 ஆம் அத்தியாயத்தில், சுருக்கமாகவும் யானைபடைக்கு நேர்ந்த கதியை தெளிவாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் பதினான்காம் நூற்றாண்டின் குர் ஆன் ஆய்வாளரான இப்னு கதீர் என்பவர் குறிப்பிடுகையில் அப்ரஹா அல் ஆஸ்ரம் (Abraha Al-Ashram) என்பவன் ஏமன் நாட்டில் ஒரு கவர்னராக இருந்தான். அப்பொழுது அவனது தலைமையில் ஒரு யானைப் படயினைத் திரட்டி புனித கஅபாவை அழிக்கும் நோக்குடன் படையெடுத்து மக்கா நோக்கி வந்தான். அந்த நேரம் அல்லாஹ்வின் கோபப்பார்வை அவன் மீது விழுந்தில் அல்லாஹ் அவனுக்கும் அவனது படையினருக்கும் எதிராக சிறு பறவைகளைக் கொண்டு கல்மாரி பொழியச் செய்தான். யார் தலைமையில் யானைப் படைகள் வந்ததோ அவனும் 13 யானைகளுடன் கூடிய அவனது படைகளும் சின்னாபின்னப்படுத்தப்பட்டன. அதில் எல்லாக் கற்களும் அவனது படையினர் மீது விழவில்லை. இருப்பினும் அப்படையினரின் உடலில் உள்ள தசைகள் வெடித்து சிதருண்டு போய் சப்பித் துப்பிய வைக்கோல் போலாகினர். இதனைக் கண்ணுற்ற அப்ரஹா மக்காவை விட்டு எமனுக்கு தப்பியோடும் வழியில் தனது தசைகளும் வெடித்து சிதறியதில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆய்வை மேற்கொள்ள மலைகளினூடாகவும், கரடு முரடான கற்பாறைகளினூடாகவும் மிகவும் களைப்புடன் தொடர்ந்த இந்த இளம் ஆய்வுக் குழுவினரின் அதீத ஆய்வின் போது இதற்கு ஆதாரமாக இருந்த பல
இடங்களையும், அடையாளங்களையும் நஜிரானின் வட பகுதியிலும்,(north of Najran,) ஆசிர் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியிலும்(east of Asir) மற்றும் பாஹா பகுதியின் கிழக்கு எல்லையிலும்(east of Baha) எடுக்கப்பட்ட பெறுமதிமிக்க புகைப்படங்கள் மூலம் பதிவு செய்துள்ளனர்.

மேலும் அவர்களின் ஆய்வுக்கு வலு சேர்க்கும் வகையில் தத்லித் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் (southeast of Tathlith) உள்ள அல்கஹ்ர் மலையில் (Al-Qahr Mountain) பல முக்கியமான வரலாற்றுப் பதிவுகளாக யானைகளின் உருவம் செதுக்கப் பட்ட கல்வெட்டுக்களையும், அசீரின் கிழக்குக்ப் பகுதியில்(east of Asir) ஹபாயிரில்(Hafaer) உள்ள பழமை வாய்ந்த கிணறு ஒன்றையும் மற்றும் பாஹா பிரதேசத்தின்(Baha region) அகீக்கின் நகராட்சிக்குட்பட்ட கரா பகுதியில்(Kara in Aqeeq) நடை பாதை ஒன்றையும் கண்டு பிடித்துள்ளனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *