Breaking
Sun. May 12th, 2024

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இலஞ்சம் கொடுத்தே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை பெற்றுக் கொண்டார் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்த கருத்துக்கெதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி செல்லவுள்ளதாக அக் கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.

இந்த குற்றச்சாட்டை அம்பாரை மாவட்டத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றின் போது தெரிவித்துள்ளார் அதன் போது ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்pனர்கள் அந்த மேடையில் இருந்துள்ளனர்.

இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை பிரதி அமைச்சர் சுமத்தியிருப்பது நாங்களும் ஒரு கட்சி என்ற அடிப்படையில் அதன் உண்மை நிலையை அறிய வேண்டிய தேவைப்பாடு இருக்கின்ற காரணத்தினால் நாங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடத்தில் இந்த இந்த முறைப்பாட்டைச் செய்து உண்மையிலயே எங்களுடைய கட்சியின் தலைவர் றிஸாட் பதியுதீன் இலஞ்சமாக பணம் கொடுத்துத்தான் இந்த அமைச்சைப் பெற்றாரா என்கிற விடயத்தை அறிய வேண்டியுள்ளது.

அது மாத்திரம் அல்லாமல் அம்பாறை மாட்டத்தில் சில இளைஞர்கள் எங்களிடத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றார்கள் சுகாதார அமைச்சின் கீழ் தொழில் வழங்குவதாக சுகாதார பிரதி அமைச்சர் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக ஆதர்வ பூர்வமாக தகவல்கள் கிடைத்துள்ளன இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்றத்திலே ஒரு நாள் தனிநபர் பிரேரனை கொண்வந்து இதனுடைய சகல விடயங்களையும் நாங்கள் பேச இருக்கின்றோம்.

இவ் விடயங்கள் தொடர்பாக நல்லாட்சி நடந்து கொண்டிருக்கின்ற இக் கால கட்டத்திலே உண்மைத் தன்மையை எல்லோரும் அறிய வேண்டும் என்பது எங்களுடைய கட்சியின் எதிர்பார்ப்பாகும் என்றும். தெரிவித்தார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *