Breaking
Fri. May 3rd, 2024

எம்.எம் மின்ஹாஜ்

பொது மக்­களின் பணத்தை சூறை யாடிய திரு­டர்­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எந்த தரு­ணத்­திலும் பாது­காக்க முனைய மாட்டார். குற்­ற­வா­ளிகள் தொடர்பில் சாட்­சி­யங்­க­ளுடன் வழக்கு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. கால­தா­மதம் ஏற்பட்டபோதிலும் நீதி­மன்­றமே குறித்த நபர்­களை கைது செய்யும் . எம்மால் எந்த அச்­சு­றுத்­தல்­க­ளையும் விடுக்க முடி­யாது. எனினும் பிரதி நீதி அமைச்சர் என்ற வகையில் இது தொடர்பில் முடி­யு­மான அனைத்­தை­யும நான் செய்வேன் என பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேன­சிங்க தெரி­வித்தார்.

இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ராக நிலுக் ஷி விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிய­மிக்­க­வில்லை .மறாக நானே அவரை நிய­மித்தேன் எனவும் அவர் சுட்­டி­காட்­டினார்.

கொள்­கலன் பரி­சோ­தனை குறித்து இலங்கை சுங்க திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் எவ­ரையும் நான் அச்­சு­றுத்­த­வில்லை. சட்­டத்­த­ரணி என்ற வகை­யி­லேயே குறித்த பிரச்­சி­னையில் தலை­யிட்டேன். நான் எந்­த­வொரு தவறும் செய்­ய­வில்லை. இதே­வேளை எனக்கு எதி­ராக அர­சியல் மட்­டத்தில் சதித்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் சாடினார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே பிரதி அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

சுங்கத் திணைக்­க­ளத்­தினால் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட கொள்­கலன் தொடர்பில் சுங்­கத்­தி­ணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­யொ­ரு­வரை அச்­சு­றுத்­தி­யமை தொடர்­பி­லான செய்தி உண்­மைக்கு புறம்­பா­ன­து. இந்த விட­யத்தில் நான் சட்­டத்­த­ரணி என்ற வகை­யி­லேயே ஆஜ­ரா­கினேன் .அதனை விடுத்து பிரத்­தி­யே­க­மாக அச்­சு­றுத்­த­வில்லை. நைலோன் கயிறு கொள்­கலன் என்­னு­டைய உற­வினருடை­ய­தாக இருப்­பினும் இந்த விட­யத்தில் நான் சட்­டத்­த­ர­ணி­யா­கவே ஆஜ­ரா­கினேன்.

இந்த விட­யத்தில் எனக்கு எதி­ராக சதித்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. ஒரு சில அர­சியல்வாதிகள் என்னை இலக்கு வைத்து சூழ்ச்சி செய்­கின்­றனர். என்­னு­டைய அர­சியல் பய­ணத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கவே சிலர் முயற்­சிக்­கின்­றனர். நான் எந்த சந்­தர்ப்­பத்­திலும் சட்­ட­வி­ரோ­த­மான காரி­யங்­களில் நான் ஈடு­பட போவ­தில்லை.

தற்­போது அனைத்து கட்­சி­களின் தலை­வர்­களும் மக்­களின் சேவையில் பொறுப்­பு­ணர்­வுடன் செயற்­பட வேண்டும். புதிய தேர்தல் முறைமை வந்­த­வுடன் ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கோ, போதைப்­பொருள் வர்த்­த­கத்தில் தொடர்பு பட்­ட­வர்­க­ளுக்கோ தேர்­தலில் வெற்றி பெற முடி­யாத நிலைமை ஏற்­படும். ஆகவே அனைத்து அர­சியல் தலை­வர்­களும் நியா­ய­மான முறையில் நடக்க வேண்டும்.

எவன்கார்ட் விவ­காரம்

எவன்­கார்ட் தொடர்பில் நீதி­மன்றம் குற்­ற­வா­ளிகள் ஐந்து பேரை கைது செய்ய வேண்டும் என கோரி­யுள்ள நிலையில் அதற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தடை­யாக இருப்­ப­தாக குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது. குற்­ற­வா­ளி­களை பாது­காக்க வேண்­டிய எந்­த­வொரு கடப்­பாடும் பிர­த­ம­ருக்கு கிடை­யாது. சட்­டத்தை மதித்து செயற்­பட கூடி­ய­வரே பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆவார்.

பொது மக்­களின் பணத்தை சூரை­யா­டிய திரு­டர்­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எந்த தரு­ணத்­திலும் பாது­காக்க முனைய மாட்டார். குற்­ற­வா­ளிகள் தொடர்பில் சாட்­சி­யங்­க­ளுடன் வழக்கு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. கால­தா­மதம் ஏற்பட்ட போதிலும் நீதி­மன்­றமே குறித்த நபர்­களை கைது செய்யும் . எம்மால் எந்த அச்­சு­றுத்­தல்­க­ளையும் விடுக்க முடி­யாது. தற்­போது நாட்டின் அரச துறை சுயா­தீ­ன­மாக்­கப்­பட்­டுள்­ளது. இத­னையே அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்­திற்கு நீதி­மன்றம் வழங்­கிய வியாக்­கி­யா­னத்தின் போது நாம் அவ­தா­னித்தோம்.

இருந்த போதிலும் மோச­டிக்­கா­ரர்கள் கைது செய்­யப்­ப­ட­வில்லை என்றால் பிரதமர் குற்றம் சாட்டும் அதே­வேளை கைது செய்­தாலும் அதற்கும் எதிர்ப்பு வெளியி­டு­கின்­றனர். எனவே இது தொடர்பில் பிரதி நீதி அமைச்சர் என்ற வகையில் என்னால் முடி­யு­மா­ன­வற்றை செய்ய தயார்

இலஞ்ச, ஊழல் ஆணைக்­குழு தலை­வரின் நிய­மன விவ­காரம் அத்­தோடு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது மனைவியின் உறவினர் என்ற வகையிலேயே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக நிலுக் ஷி விக்கிரமசிங்கவை நியமித்தார் என்ற குற்றச்சாட்டு பரவலாக சுமத்தப்பட்டு வருகிறது. எனினும் நிலுக்ஷி விக்கிரமசிங்கவை பிரதமர் நியமிக்கவில்லை மறாக நானே அவரை நியமித்தேன். இது தொடர்பில் நிலுக் ஷிவ விக்கிரமசிங்க விருப்பம் இல்லாமலேயே இருந்தார். எனினும் இவர் நீதியான முறையில் செயற்பட கூடியவர் என்பதனாலேயே நியமித்தோம் என்று தெரிவித்தார். .

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *