Breaking
Fri. May 3rd, 2024
பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியமைக்குமாக இருந்தால் அது முஸ்லிம்களின் நிம்மதியை சீர்குலைத்து விடும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து கிண்ணியாவில் இன்று (10) இடம் பெற்ற மக்கள் கலந்துரையாடலின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில் மக்களது பிரச்சினைகளை நன்கு அறிந்த ஒருவராகவும் முஸ்லிம் சமூகத்தின் மதக் கடமைகள் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய தலைவராக சஜீத் பிரேமதாச விளங்குகிறார். இவ்வாறான சிறந்த தலைமைத்துவப் பண்பு கொண்டவரே எமது நாட்டுக்கு பொறுத்தமானவர் இவ்வாறானவரே ஜனாதிபதியாக வர வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உட்பட ஏனைய சிறுபான்மை கட்சிகள் ஒன்றினைந்து பலத்த வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக்க எண்ணியுள்ளோம். எல்லோரும் கைகோர்த்து ஜனநாயக ரீதியான போராட்டத்தில் இணைந்துள்ளோம் சிறுபான்மை சமூகத்தின் இறுப்பை பாதுகாக்கவும் நிம்மதியாகவும் தலைநிமிர்ந்து வாழக் கூடிய ஆட்சியை உருவாக்குவதில் சகலருதும் ஒத்துழைப்பும் தேவை . வாக்கு அற்ற நிலையில் மொட்டுக்கட்சியினருடன் இணைந்து இனவாதக் கும்பல்களாக எஸ் பி திஸாநாயக்க, உதயகம்மன்பில, அதுரலிய தேரர்,ஞானசார தேரர் போன்றோர்கள் இருக்கிறார்கள் அன்னச் சின்னத்தில் இருப்பவர்கள் என்றுமே வாக்கு பலத்தை கொண்டவர்களே இதனுடன் மனோகனேசன், சம்பிக்கரணவக்க ,றவூப் ஹக்கீம்,றிசாட் பதியுதீன் ஆகியோர்களும் இணைந்து கொண்டு ஜனநாயக ரீதியான பயணத்தில் பயணம் செய்கிறார்கள் இம் முறை திருகோணமலை மாவட்டம் சஜீத் பிரேமதாசவுக்கு 1 இலட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளையும் இதில் மூதூர் தொகுதியில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று அமோகமான வெற்றியை தரும். கோத்தபாய ராஜபக்சவுக்கு 10 ஆயிரம் கூட வாக்குகள் கூட இங்கு பெற முடியாது.
எதிர்கால வெற்றிக்கு அன்னச் சின்னத்திற்கு வாக்களியுங்கள் மக்கள் வாக்குடன் புதிய ஜனநாயக முன்னணி அணி இணைந்துள்ளது இந்த வெற்றியை தடுக்க முடியாது .மக்களுடைய அபிலாசைகளை வென்றெடுக்கவும் வீடில்லாதவர்களுக்கு அனைவருக்கும் வீட்டு வசதிகள், அரச ஊழியர்களின் சம்பள உயர்வு, திறந்த சமூகமயமான இலங்கை தேசத்தை அழகுபடுத்தவும், கல்வி, சுகாதாரம் ,போக்குவரத்தில் புதிய நவீனமயமான இலக்கினை அடைய அன்னச் சின்னத்திற்கே வாக்களிப்போம் என்றார்.

Related Post