Breaking
Fri. May 17th, 2024

எதிர்­வரும் ஒன்­றரை வரு­டங்­களில் இலங்கையின் பொரு­ளா­தார வளர்ச்­சியில் பாரி­ய­மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன இதற்­கான ஆரம்­ப­கட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது .உள்­நாட்டு பொரு­ளா­தா­ரத்தை வளப்­ப­டுத்த உற்­பத்தி ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க வேண்டும் அத்­துடன் வெ ளிநாட்டு முத­லீட்டை அதி­க­ரிப்­ப­தற்­காககுறு­கிய கால மற்றும் நீண்ட கால திட்­டங்கள் வகுக்­கப்­ப­டு­வ­தாக நிதி­ய­மைச்சர் ரவிகரு­ணா­நா­யக்க தெரி­வித்தார்.

சபு­­கஸ்­கந்த பாது­காப்பு கல்­லூ­ரியில் இடம்பெற்ற ‘இலங்­கையில் தற்­போ­தைய பொரு­ளாதார நிலைமை’ தொடர்பான செய­ல­மர்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இதனை தெரி­வித்தார் அங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது கடந்த வருடம் ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி நாட்டு மக்கள் நாட்டின் பொரு­ளா­தார முறை­மையை மாற்­றி­ய­மைத்­தனர்.

தற்­போது நாட்டின் பொரு­ளாதார நிலைமை எவ்­வாறு உள்­ளது என்பதுதான் மக்­களின் கேள்­வி­யாகஉள்­ளது.பொருளா­தாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வது அல்ல பிரச்­சினைஇது வரை காலமும் நாட்டில் நில­விய பொருளாதார நில­மைதான் சிக்­க­லாக இருந்­தது. இருப்­பினும் கடந்த ஆட்­சியை குறை­கூ­றிக்கொண்டு இருக்க முடி­யாது. அப்­போ­தையஆட்­சியில் நில­விய பல­வீனம் கார­ண­மாகத்தான் மக்கள் எம்­மிடம் ஆட்­சியை கைய­ளித்­தனர்.

நாட்டில் 30 வரு­ட­காலம் நில­விய யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வர உங்­களால் முடிந்­தது. ஆயினும் பொரு­ள­ாதார யுத்­தத்தை வெற்­றி­கொள்ள கடந்த ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு முடி­யாமல் போய்­விட்­டது. புதிய அர­சாங்கம் என்ற ரீதியில் பொரு­ளா­தார யுத்­தத்­திற்கு தீர்­வு­காண வேண்­டிய பொறுப்பு எமக்­குள்­ளது.

2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி ஆட்­சியை பொறுப்­பேற்­றதும் நாம் வழங்­கிய நூறுநாள் வாக்­கு­று­தியை நிறை­வேற்­றினோம். அக்­கா­லத்தில் பாதீட்டு பற்­றாக்­குறை ஒரு சதத்தால் கூட அதி­க­ரிக்க வில்லை.

ஆயினும் எமது பாதீட்டு பற்­றாக்­குறை 7.1 ட்ரில்­லி­ய­னாக இருந்­தது எனினும் அது 8.9 ட்ரில்­லி­ய­னாக அதி­க­ரித்­துள்­ளதை நாம் அறிந்­துள்ளோம். இதற்கு காரணம் கடந்த ஆட்­சியின் போது மறை­மு­க­மாக மேற்­கொள்­ளப்­பட்ட செல­வு­களே. இது தொ­டர்­பாக எவ்­வித ஆவ­ணங்­களும் இல்லை. யுத்­த­கா­லத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட செல­வுகள் தொடர்பில் சரி­யான பதி­வுகள் உள்­ளன எனினும் பாதைகள்,விமான நிலை­யங்கள்,துறை­மு­கங்கள் நிர்­மா­ணிப்­ப­தி­லேயே பணம் முறை­யற்ற விதத்தில் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

பாதீடு என்­பது அர­சாங்­கத்தின் செல­வினம் மற்றும் வரு­மானம் என்­ப­தாகும் அதன்­பின்னர் நாம் பாதீட்டு இடைவெளியை அல்­லது பாதீட்டு பற்­றாக்­கு­றையை சந்­திக்­கின்றோம். இதனை ஈடு­செய்­வது எவ்­வாறு என்­ப­து தான்எமக்­குள்ள சிக்கல். அதற்கு தீர்வுவரி அறி­வீ­டாகும் இதுதான் கடி­ன­மான விடயம். இந்த சிக்­க­லான நிலையில் இருந்து நாட்டை மீட்க எமக்கு 5 வரு­ட­காலம் உள்­ளது.

எனினும் எதிர்­வரும் ஒன்­றரை வரு­ட­கா­லத்தில் இந்த பொரு­ளா­தார சிக்­கலில் இருந்து நாட்டை மீட்க முடியும் என நான் நம்­பு­கின்றேன்.இதனை எவ்­வாறு நாம் மேற்­கொள்வது முத­லா­வது வரு­மா­னத்தை அதி­க­ரித்தல். எமது தேவையில் 68 சத­வீ­தத்தை இறக்­கு­மதி செய்­கின்றோம். இந்­நி­லையில் சிறிய நாடான இலங்­கைக்கு என்ன செய்ய முடியும். எனினும் நாம் நாட்டு மக்­க­ளுக்கு பொருளா­தார சுமையை நாம் சுமத்த வில்லை.

ஏற்­று­ம­தியை வலுப்­ப­டுத்தல் பொரு­ளா­தார வலுப்­ப­டுத்­தலில் பிர­தா­ன­­மா­ன­தாகும். தேயிலை, இறப்பர், தெங்கு போன்­ற­வற்றை தவிர்த்து தைத்த ஆடைகள்,செரமிக், பாத­ணிகள் போன்­றவை ஏற்­று­ம­தியில் திருப்­தி­ய­ளிக்கும் வகையில் இல்லை.

நான் சிங்­கப்­பூரில் இடம் பெற்ற பொரு­ளா­தார மாநாட்டில் கலந்துக் கொள்ள சென்­றி­ருந்த போது சிங்­கப்­பூரில் உள்­ள­வர்­க­ளிடம் இது குறித்து தெரி­வித்தேன். அவர்கள் கூறி­ய­தா­வது. நாம் ஜப்பான் வாக­னங்­களை பயன்­ப­டுத்­து­கின்றோம். பாது­காப்­புக்கு இருக்கை பட்­டியை அணி­கின்றோம்.விபத்து ஏற்­பட்­டதும் பாது­காப்பு கட்­ட­மைப்பு

செயற்­பட பொருத்­தப்­பட்­டுள்ள சமிக்ஞை (Sensors) உற்­பத்தி செய்­வது இலங்­கையில் என கூறினர். அவர்கள் கூறி­யது போன்று உல­கத்தின் பல முன்­னணி நிறு­வ­னங்கள் அவர்­களின் சில உற்­பத்­தி­களை இலங்­கைக்கு அனுப்பி உற்­பத்தி செய்து மீள் ஏற்­று­மதி செய்­கின்­றனர்.இது நாம் கவ­னத்தில் கொள்ள வேண்­டிய ஒரு துறை­யாகும். இவ்­வா­றான துறை­களில் கவனம் செலுத்­து­வதன் மூலம் எமது பாதீட்டு பற்­றாக்­கு­றையை நிவர்த்தி செய்ய தேவை­யான அந்­நிய செலா­வ­னியை ஈட்­டிக்­கொள்ள முடியும்.எதிர்­வரும் இரண்டு வருட காலத்தின் இலங்கை 6.7 சத­வீத பொரு­ளா­தார வளர்ச்­சியை எட்டும் என நம்­பு­கின்றேன். இவ்­வி­லக்கை அடைய எமக்கு சிறந்த தொழிற்­படை தேவை. எம்­ம­வர்­களில் 2.2 மில்­லியன் மக்கள் வெளிநா­டு­களில் தொழில் புரி­கின்­றனர்.

இவர்கள் எமது நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் முக்­கி­ய­மா­ன­வர்கள் ஒருவர் வெளிநாட்­டுக்கு சென்று தொழில் புரிந்தால் குறைந்த பட்சம் 300 டொலரை ஊதியமாக பெற முடியும். வெளிநாடுகளுக்கு தொழில் புரிய செல்­ப­வர்­களை நிறுத்த வேண்­டு­மாயின் அதற்கு நிக­ரான ஊதி­யத்தை நாம் செலுத்த வேண்டும்.

அதற்­கா­கத்தான் நாம் ஆட்­சி­ய­மைத்­ததும் அரச ஊழி­யர்­களின் சம்­ப­ளத்தை 10000 ரூபாவால் அதி­க­ரித்தோம். இது இல­கு­வான காரி­ய­மல்ல.நம் அனை­வ­ருக்கும் நாட்­டுக்­கான பொறுப்­புள்­ளது.யுத்­தத்தை வெற்­றி கொண்டது போன்று பொருளா­தா­ரத்­தையும் வெற்றிக்­கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *