Breaking
Tue. Apr 30th, 2024
முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்க போனஸ் ஆசனம் தருகின்றோம் வாருங்கள் என பொதுபலசேனா அழைத்தாலும் வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் சென்றுவிடுவார் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவம் இல்லை என குற்றம் சுமத்தும் கல்முனை வடக்கு இளைஞர் அமையம் அவரது செயற்பாடுகள் அவ்வாறு அமைந்துள்ளது என தெரிவித்துள்ளது.
கல்முனை வடக்கு இளைஞர்  அமையத்தின் தலைவர் ஏ.எச்.எம் பூமுதீன் வெயியிட்டுள்ள அறிக்கையில் மேற்படடி குறிபிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
தமிழ் தேசிக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் வடக்கு முஸ்லிம்கள் மீதான கூட்டமைப்பின் குரோத செயற்பாடுகளுக்கு நன்கு ஒத்திசைவாகச் செல்வதை அண்மைக்காலாமாக அறிய முடிகின்றது.
மேற்படி செயற்பாட்டை முஸ்லிம் ஒருவர் மூலமாக முன்னெடுக்கவே கூட்டமைப்பு அஸ்மினுக்கு போனஸ் ஆசனத்தை வழங்கியிருந்தது. கூட்டமைப்பின் அந்த நோக்கத்தை மிகவும் கர்ச்சிதமாக முன்னெடுத்துச் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.
வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் .வீடமைப்பு தொழில்வாய்ப்பு போன்றவற்றிற்கும் அதனை முன்னெடுக்கும் அமைச்சர் ரிசாதிற்கும் தடைகளை ஏற்படுத்தி துரோகம் இழைக்கும் செயற்பாட்டில் கூட்டமைப்பு தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது.
இதற்கு பெருமபான்மை மக்கள் ஆதரவு தெரிவிக்காததை உணர்ந்த கூட்டமைப்பு முஸ்லிம் ஒருவருக்கு ஊடாக அந்த திட்டத்தை முன்னெடுக்க வெளிப்பட்டதன் வெளிப்பாடே அன்று இமாம் இன்று அஸ்மின் போன்றோரின் நியமனங்களாகும்.
இமாமை தமிழ் தேசியப்பட்டியல் மூலமாக நியமித்து மேற்படி நோக்கத்தை முன்னெடுக்க கூட்டமைப்பு முனைந்த போதும் வயது முதிர்ந்த அவரால் அதனை கர்ச்சிதமாக செய்து முடிக்க தவறியமையால் மீண்டும் அவருக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்காது அவரை வீட்டுக்கு அனுப்பியது கூட்டமைப்பு. அதே நோக்கத்தை முன்னெடுக்கவே இப்போது வடமாகாண சபைத் தேர்தலில் தமக்கு கிடைத்த போனஸ் ஆசனத்தின் மூலம் அஸ்மினை நியமித்துள்ளது கூட்டமைப்பு.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடை ஏற்படுத்துவதில், வீடமைப்பு திட்டங்கள் தொடர்பில் காட்டிக் கொடுப்பதில் (பிட்டிசம் அனுப்புவதில்) வடக்கு முஸ்லிம்களின் அங்கிகாரத்தை கடந்த 14 வருடங்களாக பெற்று வரும் அமைச்சர் ரிசாதிற்கு எதிராக அவதூறுகளை பரப்பிடுவது என்று தனது பெயருக்கு முன்னால் உள்ள அஷஷெய்க் பட்டத்திற்கும் பெயருக்கும் பின்னால் உள்ள நழீமி என்ற கல்வி நிலையத்திற்கும் கலங்கத்தை ஏற்படுத்தி வருகின்றார் அஸ்மீன் என்று சொல்லத் தோன்றுகின்றது.
முஸ்லிம்கள் எங்கு ஒற்றுமைப்படுகின்றார்களோ அங்கு ஒன்று கூடி அந்த ஒற்றுமையை சீர்குலைக்க நாசகார அரசியலை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் அதன் உறுப்பினர்களும் கடந்த சில வருடங்களாக மேற்கொண்டு வருவதை நாம் அறிந்தவை.
காத்தாங்குடியில் ஆரம்பித்த அவர்களின் நாசகார அரசியல் வடக்கிற்கு சென்று இன்று பதுளைக்கு வந்துள்ளது. பதுளை முஸ்லிம்களின் ஒற்றுமையையும் அங்கு ஒரு முஸ்லிம் பிரதிநித்துவம் வருவதையும் பொறுத்துக்கொள்ள முடியாத இந்தக் கூட்டம் தமது பொய்ப்பரப்புரைகளை இன்று இணையத்தளங்களில் பரப்பிவிடுவதுடன் பதுளையில் முஸ்லிம்களை ஒற்றுமைப் படவைக்க கால்கோலாக நின்ற அமைச்சர் ரிசாதையும் வசைபாடும் பரப்புரைகளையும் பதிவேற்றி வருகின்றது.
வடக்கில் அன்று 78பள்ளிவாசல்களை தரைமட்டமாக்கிய விடுதலைப்புலிகளுடன் கைகோர்த்து நிற்கும் அய்யுப் அஸ்மினின் கட்சி வடக்கில் கூட்டமைப்போடும் மலையகத்தில் ஐ.தே.க வோடும் முஸ்லிம்களுக்கு எதிராக கூட்டுச் சேர்ந்திருக்கும் இவர்கள் புலிகளைப்போல் இன்று பள்ளிகளை உடைக்கும் பொது பலசேனாவுடன் கூட்டுச் சேர மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது என்பதற்கு அஸ்மீன் கூறப்போகும் பதில்தான் என்ன?
வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் அங்கம் வகிக்கும் த.தே.கூ – தங்களால் துரத்தியடிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கு எந்த உதவி ஒத்தாசையும் புரியாது அந்த மக்களின் பலாத்கார வெளியேற்றத்தை மறைக்கும் வகையில் கூறி வரும் சொற்பிரயோகமான அது ஒரு ‘துன்பியல் சம்பவம்;’ என்பதன் உள்நோக்கம் தெரியாமல் அஸ்மினும் அதே சொல்லைப் பயன்படுத்துவதை எண்ணி நாம் வெட்கித் தலைகுணிகின்றோம்.
இந்தத் துன்பியல் சொல் எவ்வாறு பிரபல்யம் அடைந்தது என்பது இன்றுள்ள பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஏன் அஸ்மினுக்கு கூட நியாபகம் இருக்காது.
தங்களால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அவர்களின் சொந்த மண்ணில் வெளியேற வரும்போது அவர்களை வரவேற்க வேண்டிய உதவி செய்ய வேண்டிய தார்மீக பொறுப்பை கொண்ட கூட்டமைப்பு – அதற்கு பதிலாக தடைகளை ஏற்படுத்துவது மட்டுமன்றி துன்பியல் சம்பம் என்று கூறி நழுவியும் விடுகின்றது.
புலிகளின் கொள்கைகளை அணுவும் பிசகாது பின்பற்றும் கூட்டமைப்பு நிச்சயமாக முஸ்லிம்களின் மீள்குடியயேற்ற பணிகளுக்கு தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தும் என்பதற்கு சற்று 12 வருடங்கள் பின்னோக்கி பார்க்க வேண்டியுள்ளது.
ஏனெனில் ,2002ம் ஆண்டு புலிகளின்; தலைவர் பிரபாகரன் கிளிநொச்சி வட்டகச்சியில் நடத்திய சர்வதேச பத்திரிகை மாநாட்டின் பின்தான் துன்பியல் என்ற சொல் இலங்கையில் வடக்கு முஸ்லிம்களின் விடயத்தில் பிரபல்யம் அடையத் தொடங்கியது. அதுவும் அச்சொல்லை பிரபாகரன் கூறவில்லை மாறாக அன்டன் பாலசிங்கம் தான் கூறினார். 
அதுவும் எனது கேள்வி ஒன்றுக்கே அவர் அவ்வாறு கூறினார் என்பதையும் நன்பர் அஸ்மினுக்கு ஒரு தெளிவுக்காக கூறிவைக்க விரும்புகின்றேன்.
வடக்கு முஸ்லிம்களை மீள் குடியேற வருமாறு இந்த மாநாட்டின் மூலம் அடைப்புவிடுங்கள் என்று இரண்டுக்கு மூன்று தடைவை என்னால் பிரபாகரினிடம் மன்றாட்டமாக வேண்டிய போது ஒரு கனமேதும் பிரபாகரன் வாருங்கள் வந்து குடியேறுங்கள் என்று ஒரு சொல்லையேனும் கூறாதது மட்டுமன்றி, என்னை அக்கேள்வியிலிருந்து விடுபட வைப்பதற்காக இறுதி முயற்சியாக அண்டன் பாலசிங்கத்தின் சொல்தான் அந்த துன்பியல் என்பதை மிகவும் அடக்கமாக அஸ்மினின் கவனத்திற்கு தருகின்றேன்.
இறுதியாக இப்படிப்பட்ட இனத்துரோகிகளோடு இணைந்திருக்கும் உங்களுக்கு வடக்கு முஸ்லிம்களின் விடயத்திலோ அல்லது அந்த மக்களுக்காக இரவு பகலாக உழைக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தொடர்பிலோ கருத்து தெரிவிக்க எந்த ஒரு  தகுதியோ இல்லை என்பதை இனிவரும் காலங்களிலேயாவது உணர்ந்து நடக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *