Breaking
Sun. May 5th, 2024
போலந்து நாட்டின் வார்சாவில் உள்ள விலங்கியல் காப்பகத்தில் காதலில் மூழ்கித் திளைத்த காரணத்திற்காக பிரிக்கப்பட்ட இரண்டு கழுதைகள் பிரிக்கப்பட்டு மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன.
அந்தக் கழுதைகளின் பெயர் நெப்போலியன் மற்றும் அனடோசியா என்பதாகும். இருவரும் இப்போது மீண்டும் தங்களது காதலைத் தொடர்கின்றனர்.
இரு கழுதைகளும் காதலில் மூழ்கித் திளைத்ததாக கூறி சமீபத்தில் இதைப் பிரித்து விட்டனர். இரு கழுதைகளும் கிட்டத்தட்ட 10 வருடமாக ஒன்றாக சுற்றித் திரிந்த காதல் பறவைகளாகும். ஆனால் இந்த விலங்கியல் பூங்காவுக்கு வந்த பெண்கள் பலர் – தாய்மார்கள் – இரு கழுதைகளும் கொஞ்சிக் குலாவுதைப் பார்க்கும்போது தங்களது பிள்ளைகளின் மனங்கள் கெடுவதாக புகார் கூறினர்.
இதையடுத்து உள்ளுர் வனக் காவல் அதிகாரி இதுகுறித்து விசாரணை நடத்தினார். பின்னர் பொதுமக்களின் நலன் கருதி, இந்தக் கழுதைகளைத் தனித் தனியாக வைக்க உத்தரவிட்டார். அதன்படி இரு கழுதைகளும் பிரிக்கப்பட்டன.
இரு கழுதைகளும் கடந்த ஒரு வாரமாக பிரிந்து வாழ்ந்து வந்தன. வாடியும் போய் விட்டன. இதைப் பார்த்த விலங்கியல் பூங்கா அதிகாரிகள், தாங்கள் தவறு செய்து விட்டதாக கூறி, இரு கழுதைகளையும் மீண்டும் ஒன்று சேர்த்து விட்டனர்.
இதுகுறித்து விலங்கியல் பூங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், விலங்குகளின் இயற்கைக் குணத்தை பிரித்து வைப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியாது என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். பிரித்து வைப்பது என்பது எங்களது நோக்கம் அல்ல. தற்போது இரு விலங்குகளும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கழுதைகளின் காதல், கடந்த பல நாட்களாக தேசிய அளவில் பெரிய செய்தியாக பேசப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிரித்த கழதைகளுக்கு ஆதரவாக பலரும் களத்தில் குதித்தனர். கிட்டத்தட்ட 7000 பேர் இதற்காக மகஜர் ஒன்றைத் தயாரித்து கையெழுத்துப் போட்டு அரசிடமும் கொடுத்து இரு கழுதைகளையும் ஒன்றாக சேர்க்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இந்த இரு கழுதைகளுக்காக பேஸ்புக்கிலும் பக்கம் திறக்கப்பட்டது. அந்த கழுதைப் பக்கத்திற்கு 10,000 லைக்குகள் வேறு கிடைத்தன.
தற்போது இருவரும் இணைந்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நெப்போலியன், அனடோசியாவுக்கு ஆறு கழுதைக் குட்டிகள் உள்ளன. அதில் ஒன்று இரண்டு மாதங்களுக்கு முன்பு பிறந்ததாகும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *