Breaking
Fri. May 3rd, 2024
– மது ராதா –
‘நான் ஆட்டோவில் ஏறினால் அந்த டிரைவர்களிடம் அதிகம் பேசுவதில்லை. சில நாட்களுக்கு முன் எனது தாயாரோடு கரூரில் ஒரு ஆட்டோவில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆட்டோவில் அவரது பிள்ளைகள் ஒருவர் மருத்துவராகவும் மற்றவர் விமானியாக வேலை செய்து வருவதாகவும் எழுதப்பட்டிருந்தது. இது எனக்கும் எனது தாயாருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. இதனை படித்த எனது தாயார் அந்த ஆட்டோ டிரைவரிடம் பேச்சுக் கொடுத்தார்.
எனது தாயார்: உங்களின் மகள் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவராக பணிபுரிவதாக எழுதியுள்ளீர்களே? அவர் எங்கு படித்தார்?
ஆட்டோ டிரைவர்: எனது மகள் அரசு பள்ளியில் எங்களது கிராமத்தில் படித்தாள். அனால் கடுமையாக உழைத்தாள். சென்ற மாதம் ஒரு மருத்துவரை திருமணமும் செய்து கொண்டுள்ளார். என்னுடைய மற்றொரு மகன் விமானியாக லண்டனில் வேலை செய்து வருகிறார். அவரும் திருமணம் முடித்து தனது குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
எனது தாயார்: தவறாக எண்ண வேண்டாம்! உங்களின் குழந்தைகள் நல்ல நிலையில் இருக்கும் போது இன்னும் ஏன் ஆட்டோ ஓட்டி வருகிறீர்கள்?
ஆட்டோ டிரைவர்: இந்த வேலைதான் எனது பிள்ளைகளுக்கு இவ்வளவு சிறந்த அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. எந்த காலத்திலும் இந்த தொழிலை நான் மறக்க மாட்டேன். தற்போது எனது பொருளாதார நிலை சிறப்பாக உள்ளது. தற்பொது ஆட்டோ ஓட்டுதலை எனது ஹாபியாக செய்து வருகிறேன். வறியர்கள், வயதானவர்கள் போன்றோருக்கு உதவும் வகையில் எனது தொழிலை செய்து வருகிறேன். இதில் எனக்கு பூரண திருப்தி கிடைக்கிறது.
ஆட்டோ டிரைவரின் இந்த பதிலைக் கேட்டு நான் ஆச்சரியமடைந்து போனேன். வருங்காலத்தில் எனது பொருளாதார நிலை உயர்ந்தாலும் எனது பழைய வேலையையும் அங்கு பணியாற்றியவர்களையும் எக்காலத்திலும் மறக்கக் கூடாது என்ற படிப்பினையையும் பெற்றுக் கொண்டேன்.”

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *