Breaking
Sun. Apr 28th, 2024

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள்  ஜனாதிபதி மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணியை தோற்கடிக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி எனும்  புதிய கூட்டணி உதயமாகியுள்ளது.

ஐ.தே.கட்சியை பிரதானமாக கொண்ட இக் கூட்டணியில் ஜாதிக ஹெல உறுமய , சிறிலங்கா சுதந்திர கட்சியிலுள்ள மகிந்தவிற்கு எதிரானவர்கள், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மாதுளுவாவே சோபித தேரரின்  சமூக நீதிக்கான அமைப்பு உள்ளிட்ட 40ற்கும் மேற்பட்ட சிவில் அமைப்புக்களும்  உள்ளடங்குகின்றது.
ஓகஸ்ட்  17 ஆம் திகதி  நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கியதேசியக் கட்சியின்  யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்  எதிர்வரும்  தேர்தலில்  பொ.ஐ.மு உறுப்பினர்கள்  18 பேர் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.
இதில் ராஜித சேனாரத்ன , அர்ஜூன ரணதுங்க, எஸ்.பி திஸாநாயக்க, துமிந்த திஸாநாயக்க, உள்ளிட்ட 18 பேரே போட்டியிடவுள்ளனர்.
எனினும் ஐ.தே.கட்சியின் யாப்புக்கு அமைய பௌத்த பிக்குமார்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் அவர்களுக்கு தேசியப்பட்டியலில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனவரி 8ஆம்  திகதி  பெற்றுக்கொண்ட நல்லாட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை ஆரம்பிப்பது தொடர்பில் சு.க உறுப்பினர்கள் ஜாதிகல ஹெல உறுமய ஆகியோர் ரணிலுடன்  நேற்று முன்தினம்  பேச்சு நடத்தியிருந்தனர்.
அதன்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. மேலும்  இதுதொடர்பில் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவிற்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவரிடமிருந்தும் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
நாளையதினம்  குறித்த அணியினர் வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *