Breaking
Thu. May 9th, 2024

ஆக்கம் எஸ்.எச்.எம்.முஜாஹிர் – புதுக்குடியிருப்பு

குறிப்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனுக்கு இன்று (27) பிறந்த நாளாகும் (42வயது). அத்துடன் பாராளுமன்ற அரசியலில் 15வது வருடத்தில் காலடி எடுத்தும் வைக்கின்றார். இதனை முன்னிட்டு இக்கட்டுரை.

உலகில் எங்கு பார்த்தாலும் முஸ்லிம் என்ற இனம்தான் திட்டமிட்டுத் தாக்கப்படுகின்ற இனமாகும்.உலகம் பூராகவும் உள்ள முஸ்லிம்களை அடக்கி ஒடுக்க வேண்டும்-அழித்தொழிக்க வேண்டும் என்ற தூர நோக்குடைய சர்வதேச சதித் திட்டத்தின் அடிப்படையில்தான் உலகம் பூராகவும் இன்று முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றனர்;, அழித்தொழிக்கப்படுகின்றனர், அடக்கி ஒடுக்கப்படுகின்றனர்.

முஸ்லிம் நாடுகள்,முஸ்லிம் அல்லாத நாடுகள் என்ற வேறுபாடுகள் இன்றி எல்லா நாடுகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.இன்று மத்திய கிழக்கில் எந்தவொரு நாடும் தப்பவில்லை.திட்டமிட்ட அடிப்படையில் அந்த நாடுகளில் யுத்தம் தொடங்கப்பட்டு முஸ்லிம்களை வைத்தே முஸ்லிம்களை அழித்தொழிக்கும் சதித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

முஸ்லிம் அல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் அந்நாடுகளில் உள்ள பெரும்பான்மை இன மக்களால் தாக்கப்படுகின்றனர்.இந்தியா,மியான்மார் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இந்த நிலைமையைக் காணலம்.

இலங்கையை பொருத்தவரை அவ்வப்போது பல்வேறு சக்திகளால் முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றனர்.இப்போது பொது பல சேனா போன்ற சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிராக சதி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.அதேபோல்,1990 முதல் 2009 வரை முஸ்லிம்கள் புலிகளால் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் பல்வேறு சக்திகளிடம் இருந்து முஸ்லிம்கள் பிரச்சினைகளை எதிர்கொண்ட போதிலும்,புலிகள் ஏற்படுத்திய பிரச்சினைகளே மிகப் பெரிய பிரச்சினைகளாகும்.வடக்கில் ஒரு லட்சம் முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்றியும் கிழக்கில் கொன்று குவித்தும் புலிகள் 19 வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர்.

புலிகள் 2009 இல் ஒழிக்கப்பட்டதும் முஸ்லிம்கள் பெரு மூச்சு விடத் தொடங்கினர்.ஆனால்,வடக்கு முஸ்லிம்கள் இதற்கு விதிவிலக்காவர்.

புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் தங்கள் நிலங்களை இழந்து மீள்குடியேற முடியாமல் தவிக்கின்றனர்.அவர்களின் நிலங்கள் வேறவர்களால் அபகரிக்கப்பட்டுவிட்டன.அந்த நிலங்களுக்கு பதிலாக அரச நிலங்களைப் பெறுவதற்குக் கூட நாசகார சக்திகள் தடை விதிக்கின்றன.

இவ்வாறு யுத்த காலத்திலும் யுத்தம் முடிந்த பின்பும் பல நெருக்கடிகளை எதிர்க்கொண்டு வரும் முஸ்லிம்களுக்கு குரல் கொடுப்பதற்கு-அவர்கள் இழந்தவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு முஸ்லிம் தலைமைகள் இதுவரை காத்திரமான நடவடிக்கைகளை எடுத்ததே இல்லை என்பதை எவரும் மறுக்க முடியாது.ஆனால் அவ்வாறான தலைமைகளுள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மாத்திரமே விதிவிலக்காக உள்ளார்.

வடக்கு முஸ்லிம்கள் 1990 களில் வெளியேற்றப்பட்ட போது தானும் அம்மக்களுடன் சேர்ந்து வெளியேறினார்.அகதிகளுள் ஒருவரான அவர் அன்று அம்மக்களின் அவல வாழ்க்கையை நினைத்து கண்ணீர் விட்டார்.அந்த அவல வாழ்க்கையை இல்லாதொழித்து தன் சமூகத்தின் பழைய வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு எதையாவது செய்ய வேண்டும் என்று மிகத் தீவிரமாக யோசித்தார்.அதன் பலனாகவே அவர் அரசியலுக்குள் நுழைந்தார்.

வன்னி மாவட்டத்தில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றுக்குத் தெரிவானார்.அப்போது தான் சார்ந்திருந்த கட்சி தனது மக்களுக்கு காத்திரமான எவற்றையும் செய்ய முன் வராததையிட்டு மனம் நொந்தார்.அரசில் இணைந்து அமைச்சு பதவியைப் பெறுவதன் மூலம்தான் தம் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் என்ற உண்மையை தனது கட்சியின் தலைமைத்துவத்துக்கு எடுத்துக் கூறினார்.ஆனால்,அந்த தலைமைத்துவம் தனிப்பட்ட லாபம் கருதி அந்த யோசனையைத் தட்டிக் கழித்து விட்டது.

வெறுமனே எதிர் கட்சியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு வீடு வாசல்களையும் ,சொந்த நிலங்களையும் அனைத்து சொத்துக்களையும் இழந்து முழுமையாக அகதிகளாக மாறியுள்ள முஸ்லிம்களுக்கு எதையும் செய்ய முடியாது என்பதையும் இவ்வாறே போனால் வடக்கு முஸ்லிம்கள் என்றென்றும் நிரந்தர அகதிகளாக- மீள முடியாத-மிகவும் பின் தங்கிய சமூகமாகவே வாழ வேண்டி வரும் என்பதையும் நன்கு உணர்ந்ததால் அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளைப் பெறுவது என ரிஷாத் பதியுதீன் 2004 இல் முடிவெடுத்தார்.

ரிஷாத் பதியுதீனின் தீர்மானத்துடன் அப்போது முஸ்லிம் காங்கிரஸின் எம்பிக்களாக இருந்த அமீர் அலி,நஜீப் ஏ.மஜீத் ஆகியோர் உடன்பட்டதால் மூவரும் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி சந்திரிகா தலைமையிலான அரசில் இணைந்தனர்.

தம் மக்களின் அவலத்தை போக்க எப்படிப்பட்ட அமைச்சு தேவையோ அப்படிப்பட்ட அமைச்சை அவர் கேட்டுப் பெற்றுக் கொண்டார்.அந்த அடிப்படையில் அவருக்கு வன்னி புனர்வாழ்வு அமைச்சு வழங்கப்பட்டது.அதன் பிறகு மீள்குடியேற்ற அமைச்சு வழங்கப்பட்டது.தற்போது வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சராக இருந்து அவரது சேவை தொடர்கிறது.

மேற்படி மூன்று அமைச்சுகளின் ஊடாக தன்னால் முடிந்த அளவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைகளை செய்துள்ளார்;, செய்து கொண்டும் வருகிறார்.

தற்போது இருக்கின்ற முஸ்லிம் தலைமைகளுடன் ஒப்பிடுகையில் ரிசாட் பதியுதீனின் மக்கள் சேவை அபாரமானது.மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசமாகும்.வடக்கு முஸ்லிம்கள் மட்டுமன்றி நாடு பூராகவும் உள்ள மூவின மக்களும் இதை மறுப்பதற்கில்லை.அவருக்கு வாக்களிக்க மறுக்கின்ற முஸ்லிம்கள் கூட இதை ஏற்கத்தான் செய்கின்றனர்.

யுத்தம் முடிந்ததன் பின்னர் சொற்ப எண்ணிக்கையிலான முஸ்லிம்களே மீள்குடியேறியுள்ளபோதிலும் அவர்கள் சமூக விரோத சக்திகளால் தமிழ்,முஸ்லிம் மக்களிடையே நிரந்தர பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு அவ்வப்போது கொடுமைகளுக்கு உற்படுத்தப்படுகின்றனர்.அவற்றில் இருந்து முஸ்லிம்களைப் பாதுகாத்து ஒரு பாதுகாப்பு அரணாக ரிஷாத் பதியுதீன் திகழ்கின்றார் என்ற உண்மையை எவராலும் மறுக்க முடியாது.

தன் இன மக்களின் விடிவுக்காக தனது வாழ்வை அவர் அர்ப்பணித்துள்ள போதிலும் வடக்குத் தமிழ் மக்களைக் கூட அவர் மறந்ததில்லை.வேலை வாய்ப்புகள் முதல் பல தரப்பட்ட சேவைகளை அவர் தமிழ் மக்களுக்கு செய்து வருகின்றார்.தமிழ்-முஸ்லிம் உறவை சீர்குலைக்க பாடுபடும் சில சக்திகளின் செயற்பாடுகள் இச்சேவைகளுக்கு முட்டுக் கடையாக இருக்கின்ற போதிலும்,அவற்றை எல்லாம் தகர்த்தெறிந்து தமிழ் மக்களுக்கு சிறந்த சேவையற்றி வருகின்றார்.

ஒரே நாளில் 500 பேருக்கு ஆசிரியர் நியமனம், பல்லாயிரம் வேலை வாய்ப்புக்கள்,10,000 நிரந்தர வீடமைப்பு, அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் என்பன அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கனமான சேவைகளுக்கு சில உதாரணங்களாக இவற்றை கூற முடியும்.

2009 இற்கு முன்பு , 2009 இற்கு பின்பு என்ற ரீதியில் வன்னி அபிவிருத்தியை நோக்கும் போது கடந்த ஐந்து வருடங்களில் வன்னி மாவட்டம் கண்டுள்ள அபிவிருத்தி சொல்லிலடங்காதது.
இதற்கு காரணமாக அமைந்தது அமைச்சர் ரிசாத் பதியுதீன் என்ற ஆளுமை மிக்க அரசியல் தலைவர் வன்னி மாவட்டத்திற்கு கிடைத்தமையாகும்.

இன்று இந்த தலைமையை இல்லாதொழித்து வன்னி மாவட்டத்தையும் வடமாகாண முஸ்லிம்களையும் மற்றும் நாடுபூராகவுமுள்ள முஸ்லிம்களையும் இருண்ட யுகத்திற்குள் தள்ளிவிட சில இன மதவாம் பிடித்தவர்களும் அவர்களின் அற்ப சொற்ப சலுகைகளுக்கு அடிபணிந்த ஓர் இரு சமுகத்துரோகிகளும் தொடர்ச்சியாக துணைபோய்க் கொண்டிருப்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தையே வேதனைக்குட்படுத்தியுள்ளது.

வடக்கு மக்களுக்கு மாத்திரம்தான் தனது சேவைகள் என குறுகிய மனப்பான்மையில் இருக்காது நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் அவரது சேவைகள் சென்றடைகின்றன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கி இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் அவர் மிக சிறந்த சேவைகளை வழங்கி வருகின்றார்.அவரது கட்சியில் இன்று அரசியல் பிரதிநித்துவங்கள் கணிசமாக அதிகரித்து காணப்படுகின்றன.

நாட்டில் இன்று தலைதூக்கியுள்ள இனவாத, மதவாத சதிகாரக் கும்பல்களுக்கு எதிராக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தன்னந்தனியே நின்று போராடி முஸ்லிம் சமுகத்தை பாதுகாக்கும் ஒரு தேசியத் தலைவராக உருப்பெற்றுள்ளார்.

பொதுபலசேனா என்ற இனவாத கும்பல்களின் அச்சுறுத்தல் , அடாவடித்தனங்கள் என்பவற்றையெல்லாம் எதிர்கொண்டு தனது சமுகத்தை முன்னிறுத்தி போராடி வருகின்றார்.

இந்த இனவாதக் கும்பல்களுக்கெதிராக குரல் கொடுத்தமைக்காக இன்று நீதிமன்றங்களின் முன்னால் கைகட்டி நிற்கும் ஒரே முஸ்லிம் தலைமை என்றால் அது ரிசாத் பதியுதீன் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

15 வருட பாராளுமன்ற அரசியல் வாழ்க்கையை நிறைவு செய்துள்ள அமைச்சர் ரிசாதின் அரசியல் வாழ்க்கை எமக்கு உணர்த்துவது எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்குத் தலைமை தாங்கக்கூடிய ஒரேயொரு தலைவர் என்ற நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதைத்தான்.

அவரது சமூக உணர்வு மேலும் அதிகரித்து ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் அவர் தலைமை தாங்க வேண்டும்;. முஸ்லிம்களின் ஏக தலைவராக மாற வேண்டும்.அந்த நிலையை அடைகின்றபோதுதான் முஸ்லிம்களுக்கு விடிவு கிட்டும்.அந்த நிலை மிக விரைவில் ஏற்பட வேண்டும் என்று 15 வருட பாராளுமன்ற வாழ்க்கையையும் இன்று தனது 42 வயதையும் நிறைவு செய்யும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்காக நாம் அனைவரும் இச் சந்தர்ப்பத்தில் பிரார்த்திப்போம்.

rr1 rishad1.jpg2_.jpg5_.jpg6_ rishad1.jpg2_.jpg5_ rishad11.jpg2_1.jpg4_1 rishad13

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *