Breaking
Tue. May 7th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், கண்டி மாவட்ட, பாத்த ஹேவாஹெட்ட பிரதேசத்தின், தெல்தோட்ட முஸ்லிம் கொலனிக்கான சுகாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டு, இன்று (08) மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இணைப்புச் செயலாளர் இஸ்ஸதீன் றியாஸ் மற்றும் கண்டி மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஹம்ஜாட் ஆகியோரது ஆலோசனையில், பாத்த ஹேவாஹெட்ட பிரதேச சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மானின் வேண்டுகோளுக்கிணங்க, இருபது இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட  குறித்த சுகாதார மத்திய நிலையத்தை, மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

தெல்தோட்ட முஸ்லிம் கிராமத்தின் நீண்டகால தேவைப்பாடாக இருந்த சுகாதார மத்திய நிலையத்தினை அமைப்பதற்கான காணியை, அப்பிரதேசத்தில் வசிக்கும் மர்ஜான் குடும்பத்தினர் வழங்கியதையடுத்து (வக்பு), கடந்த வருடம் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.

அந்தவகையில்,  முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், சுகாதார மத்திய நிலையத்தின் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு,  கிராம சேவகர் மற்றும் ஊர் பள்ளிவாசல் ஊடாக, சுகாதார அமைச்சுக்கு இன்று கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின் கண்டி மாவட்ட இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸதீன், கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட் ஹாஜியார், பிரதேச சபை உறுப்பினர் கலீலூர் ரஹ்மான் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Post