Breaking
Tue. May 7th, 2024

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஓட்டமாவடி கோட்ட பாடசாலைகளில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் பிரதேசத்தின் மூத்த கல்வி மான் மற்றும் பிரதேசத்தின் முதலாவது பொது வைத்திய நிபுணர் ஆகியோர்களை கௌரவிக்கும் நிகழ்வு அமீர் அலி பவுண்டேசனின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

அமீர் அலி பவுண்டேசனின் தலைவரும் இராஜங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஓய்வு பெற்ற கோட்ட கல்வி அதிகாரி கலாபூசனம் ஏ.எம்.ஏ.காதர் மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் சிரேஸ்ட பதிவாளர் எஸ்.அஹமட் பரீட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் ஓட்டமாவடி கோட்ட பாடசாலைகளில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த நூற்றி எட்டு (108) மாணவர்களும் அவர்களுக்கு கற்பித்த நாட்பத்தாறு (46) ஆசிரியர்களும், மூத்த கல்வி மான் கலாபூசனம் ஏ.எம்.ஏ.காதர் மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தின் முதலாவது பொது வைத்திய நிபுனரும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் சிரேஸ்ட பதிவாளர் எஸ்.அஹமட் பரீட் ஆகியோர் அதிதிகளால் நினைவுசின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்; இராஜங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் சேவையை பாராட்டி ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஈ.எல்.மஹ்ருப்பினால் இராஜாங்க அமைச்சருக்கு நினைவு சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.

Related Post