Breaking
Fri. Dec 19th, 2025
கனடாவின் தெற்கு ஒன்றாரியோ மாநில மிச்சிச்சுகா (Mississauga) மாநகர சபை மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் மாநகர மேயர் பதவிக்காக நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் போனி ச்ரோம்பிக் (Bonni Crombie) இத்தேர்தலில் தான் வெற்றி பெற்றால் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பை தான் தத்தெடுக்கப்போவதாக வாக்குறுதியளித்துள்ளார்.
மிச்சிச்சுகா நகரில் இலங்கைத் தமிழர்கள் பலர் செறிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரங்களின் போதே மட்டக்களப்பைத் தத்தெடுப்பது என்ற வாக்குறுதி அவரால் வழங்கப்பட்டது.
போனி ச்ரோம்பிக் (Bonni Crombie) தான்  கனடிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், மாநகரசபை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இதன் அடிப்படையில் மாநகர மேயராகப் பதவி வகிப்பதற்கான அனைத்துக் தகுதிகளும் தனக்குள்ளதாக அவர் தெரிவித்துவருகின்றார்.

Related Post