Breaking
Wed. May 8th, 2024

பலஸ்­தீன மஸ்ஜிதுல் அக்­ஸாவை மீட்­ப­தற்கு எமது பாரா­ளு­மன்­றத்தில் அவ­சர கவ­ன­யீர்ப்புப் பிரே­ரணை ஒன்று கொண்­டு­வர வேண்டும். அத்­துடன் அனைத்து பள்­ளி­வா­சல்­க­ளிலும் துஆப் பிரார்த்­த­னைகளை மேற்­கொள்ள உலமா சபை நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரி­வித்­துள்ளார்.

பலஸ்­தீ­னத்தில் இஸ்ரேல் மேற்­கொண்­டு­வரும் ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக அஸ்வர் வெளி­யிட்­டுள்ள  அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
60 வரு­டங்­க­ளுக்கும் மேலாக மேற்­கு­லக வல்­ல­ர­சு­களின் ஆத­ர­வுடன் பலஸ்­தீனில் இஸ்ரேல் மேற்­கொள்ளும் காட்டு தர்பார் தற்­போது உக்­கி­ர­ம­டைந்­துள்­ளது. முஸ்­லிம்­களின் மூன்­றா­வது புனித தல­மான அல் அக்ஸா பள்­ளி­வா­ச­லுக்குள் நுழைய பலஸ்­தீ­னர்­க­ளுக்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.
பெண்­களும் சிறு­வர்­களும் வயது வந்­தோர்­களும் கொன்று குவிக்­கப்­ப­டு­கி­றார்கள். 21ஆவது நூற்­றாண்டில் நவீன முறையில் மானிட சுத்­தி­க­ரிப்பு பலஸ்­தீ­னத்தை ஆக்­கி­ர­மித்­துள்­ளது. இதற்கு விரோ­த­மாக நாம் குரல் கொடுக்க வேண்டும்.
மூன்­றா­வது இன்­தி­பா­ழாவும் பெண்­களின் தியாக உணர்­வோடு மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அல் அக்ஸா அனைத்து முஸ்­லிம்­க­ளி­னதும் சொத்து என்­பதை நாம் ஒரு­போதும் மறக்க முடி­யாது. 1967 ஆம் ஆண்டு அல் அக்ஸா தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­ட­போது அதற்கு விரோ­த­மாக குரல் எழுப்பி இஸ்­ரே­லுக்கு எதிர்ப்பு தெரி­விக்க முஸ்­லிம்­க­ளுடன் ஏனை­யோரும் இணைந்­தார்கள்.
ஜெனீ­வாவும் மனித உரிமை சாச­னமும் நம்மைப் போன்ற நாடு­க­ளுக்கு மட்டும் தானா? மனித உரி­மையை மரணக் குழியில் தள்­ளி­விடும் அமெ­ரிக்கத் தலை­மை­யி­லான மேற்­கத்­தேய வல்­ல­ர­சு­களின் அட்­ட­கா­சத்தை முடக்­கு­வ­தற்கும் ஐக்­கிய நாடு­களை கட்­டி­யெ­ழுப்­பு­வது அனைத்து முஸ்­லிம்­க­ளி­னதும் கட­மை­யாகும்.
அன்று பலஸ்­தீன மக்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்து பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்த பிரே­ரணை மீது முன்னாள் அமைச்சர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்­கா­ருக்கும் எனக்கும் பேசக்­கூ­டா­தென தற்­போ­தைய பிர­தமர் ரணில் அன்று உத்­த­ர­விட்­டி­ருந்தார்.
இன்று பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஒன்­றி­ணைந்து ஜெரு­சலேம் பூமியை காப்­ப­தற்கு பாரா­ளு­மன்­றத்தை உசார்­ப­டுத்த வேண்டும். இது அவர்­க­ளது கடமை. அதனால் பாரா­ளு­மன்ற அடுத்த அமர்வில் சபையின் கவனத்தை ஈர்க்க அல் அக்ஸாவை மீட்க அவசரக் கவனயீர்ப்பு பிரேரணையை கொண்டுவர வேண்டும்.
அனைத்து பள்ளிவாசல்களிலும் இது தொடர்பாக துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளவும் ஜும்ஆ பிரசங்கம் நிகழ்த்தவும் உலமா சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *