Breaking
Thu. May 2nd, 2024

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடவுள் இல்லை என்று தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, முன்னாள் ஜனாதிபதியை விசாரணைக்கு வரைவழைத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துமளவுக்கு, எவ்வித தேவையும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். எந்த தவறும் செய்திருக்காவிடில், ஆணைக்குழுவுக்கு ஆஜராவதற்கு எவ்வித தயக்கமோ, பயமோ ஏற்படவேண்டிய அவசியம் கிடையாது. அதேபோல அவரிடமிருந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு செயற்படும் ஆணைக்குழுவுக்கு எதிராகவும் அதற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் மற்றையோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவேண்டிய அவசியம் கிடையாது என்று ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார். எம்.பி. திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் வழங்கப்பட்ட பதவி இலஞ்சத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டது. இதுவே தற்போது நிலவும் பிரச்சினையாகும். தேர்தல் காலத்தில் இந்த மோசடி நடைபெற்றுள்ளமையால், தேர்தல் ஆணையாளர் இதனை பொறுப்பில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *