Breaking
Sun. May 12th, 2024

மஹிந்த ராஜபக்ச குடும்பமும் சுற்றமும் ஒருநாள் காலை உணவிற்காக 94 இலட்ச ரூபாவினை செலவிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாட்டு தலைவர்கள் மாநாடு நடைபெற்ற சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ச குடும்பமும் நண்பர்களும் ஒருவேளை காலை உணவிற்காக மட்டும் 94 இலட்ச ரூபாவினை செலவிட்டுள்ளனர்.

அலரி மாளிகைக்கு உணவு வழங்கிய ஹில்டன் ஹோட்டல் 94 இலட்ச ரூபா கொடுப்பனவு வழங்கப்படவில்லை என மஹிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளது.

2013ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அப்போதைய செயலாளர் லலித் வீரதுங்கவின் பெயரிற்கு ஹோட்டல் விலைப்பட்டியலை அனுப்பி வைத்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடையும் வரையில் இந்த பணம் செலுத்தப்படவில்லை. வெள்ளை, கறுப்பு கொக்லடன் பூசப்பட்ட நுவரெலிய ஸ்டோபரி, கறுப்பு கொக்லட்டில் மூழ்கடிக்கப்பட்ட மாம் பழம், கிறீம் சீஸ், வெள்ளரி சான்ட்விட்ச், மீன் சான்ட்விட்ச், அபெல் டெனிஸ், அண்ணாசி டெனிஸ் உள்ளிட்ட பல உணவு வகைகள் இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ அலரி மாளிகையில் அரச பணத்தில் விருந்துபசாரங்களை நடத்துவதில்லை என நலீன் பண்டார ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் விருந்துபசாரங்களை அலரி மாளிகையில் நடத்தினாலும் அது அவரது சொந்த செலவில் மேற்கொள்ளப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.(t)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *