Breaking
Sat. May 18th, 2024

-இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் –

எதிர் கட்சி தலைவராக சம்பந்தன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கு அகில இலஙகை மக்கள் காங்கிரஸ் கட்சியினதும், இலங்கை முஸ்லிம்களினதும் பாராட்டை தெரிவிப்பதாக

கட்சியின் தேசிய தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமன றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர்  ரஹீம்.

கெளரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே, இந்த உயர் சபைக்குப் பிரதிச் சபாநாயகராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டமைக்காக உங்களுக்கு எனது கட்சி சார்பாக எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்அதேபோல் பிரதிக் குழுக்களின் தலைவராக எங்களுடைய நண்பர், எங்களுடைய மாவட்டத்தைச் சார்ந்த ஒரு மூத்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பது எங்களுடைய மண்ணுக்கு ஒரு கெளரவமாக உள்ளதெனக் கூறிக்கொண்டு அவருக்கும் என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றேன்

அதேபோல் இன்று நடந்த ஒரு வரலாற்று நிகழ்வாக  சிறுபான்மைச் சமூகத்துக்காகக் குரல் கொடுத்துவந்த, குறிப்பாகத் தமிழ் பேசும் மக்களுக்காகப் பல வழிகளிலே பாடுபட்டுப் பேசிவந்த எங்களுடைய  மூத்த ஓர் அரசியல்வாதியும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான கெளரவ சம்பந்தன் ஐயா அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டமை எங்களுக்கெல்லாம் பெரிய சந்தோசத்தைத் தருகின்றதுஎனவே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாகவும் எங்களுடைய முஸ்லிம் சமூகம் சார்பாகவும் அவருக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்

அதேபோல் இன்று இந்தச் சபையிலே முக்கியமான ஒருவராக திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா என்ற ஒரு பெண்மணியையும்  நான் பார்க்கின்றேன்.   அவர் யுத்தத்திலே பாதிக்கப்பட்ட ஓர் அரச அதிகாரிஅவர் கடந்த தேர்தலிலே வன்னியில் போட்டியிட்டு ஒரு சில வாக்குகளால் தோல்வியடைந்திருக்கிறார்.

இருந்தாலும், யுத்தத்திலே பாதிக்கப்பட்ட அதுவும் வன்னியைச் சார்ந்த பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு பெண்மணிக்கு இந்தப் பாராளுமன்றத்திலே அமர்வதற்குச் சந்தர்ப்பம் கொடுத்தமைக்காக நானும் அந்த மாவட்டத்தைச் சார்ந்தவன் என்ற வகையிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு என்னுடைய நன்றியைக் கூறுகின்றேன்

இன்று இந்த எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது தினத்திலும் பலர் பல விதங்களில் இனவாதக் கருத்துக்களைத் திணித்ததை இங்கு காணக்கூடியதாக இருந்ததுஅவர்கள் இந்த இடத்தில் இல்லாவிட்டாலும், இந்த இனவாதம்தான் இந்த நாட்டிலே30 வருடங்களாக இரத்த ஆறு ஓடுவதற்கு வழிவகுத்ததுயாரும் விரும்பி யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை.

   இன்று  இனவாதக் கருத்துக்களைப் பேசுகின்றவர்களைப்போல அன்று பேரினவாதத் தலைவர்கள் அல்லது பேரினவாதச் சக்திகள் வாக்குகளைப் பெறுவதற்காக, ஆட்சியைப் பிடிப்பதற்காக அல்லது இவ்வாறான அரசியல் நோக்கங்களுக்காக சுயநலக் கொள்கைகளோடு அவ்வாறு பேசியும் செயற்பட்டும் இப்படியான ஒரு யுத்தம் வருவதற்குக் காரணகர்த்தாக்களாக இருந்தார்கள்

அதனால் தான் இந்த நாடு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து இன்றுவரை நிம்மதியில்லாத ஒரு நாடாக உள்ளது. நமது நாடு  ஓர்  அழகான, சிறிய, எல்லா வளங்களையும் கொண்டிருக்கின்ற, நல்லதொரு அமைவிடத்திலேgeographically-அமைந்திருக்கின்றது. ஒருவருக்கொருவர் சண்டை பிடிக்கின்ற அல்லது ஒருவரையொருவர் கொன்று அதிலே சந்தோசமடைகின்ற, ஒருவரையொருவர் வாழவிடாமல் துரத்தி அதிலே இன்பம் அனுபவிக்கின்ற நாடாக இந்த நாட்டைப் பார்த்து 30வருடங்களைக் கடந்திருக்கின்றோம்எனவே, இவ்வாறான பேச்சுக்களைப் பேசுவதனூடாக இவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை

இந்த நாட்டின் ஜனாதிபதியாக வந்திருக்கின்ற மேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியாக ஆக்கவேண்டும் என்பதிலே இங்கிருக்கின்ற பல பெளத்த மக்களும் இந்து, கத்தோலிக்க,இஸ்லாமிய மக்களும் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மலையகக் கட்சிகள், மனோகணேசன் தலைமையிலான அணியினர், ஜே.வி.பி., முஸ்லிம் காங்கிரஸ் எங்களுடைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சரத் பொன்சேகா உட்படப் பலர் இந்தப் போராட்டத்திலே, அந்தப் பயணத்திலே தங்களை அர்ப்பணித்ததை இங்கு நாங்கள் சொல்லலாம்

குறிப்பாக,கடந்த அரசிலே அமைச்சராக இருந்த நானும் என்னுடைய கட்சியைச் சேர்ந்த 70 மக்கள் பிரதிநிதிகளும் அந்த அரசைவிட்டு வெளியேறக் காரணமே இந்த இனவாதம்தான் என்று கூறலாம்காரணம், அன்று தம்புள்ளையிலே தொடங்கி அளுத்கம வரை எங்களுடைய மதத்தலங்களை உடைத்துச் சேதத்தை ஏற்படுத்தி எங்களுடைய மதத்தலங்களுக்கே பாதுகாப்பில்லாத துர்ப்பாக்கிய நிலைமையை ஏற்படுத்தியதுதான்

பேரினவாதச் சிந்தனை கொண்ட ஒரு மதகுருவை மையமாகக்கொண்ட  அந்த இயக்கம் இந்த நாட்டிலே அதனைச் செய்துகொண்டிருந்ததுஅதைப்பார்த்து அன்றைய ஆட்சியாளர்கள் அமைதியாக இரசித்துக்கொண்டிருந்தது மட்டுமல்ல,சட்டத்தைக் கையிலெடுப்பதற்கும் அவர்களுக்கு இடம் கொடுத்தார்கள்

அந்த மதகுரு,  “நான் சட்டரீதியற்ற பொலிஸ்காரன்என்று அடிக்கடிபேசுவார்.  ஆனால்   இந்த நாட்டிலே  சட்டம் அவருக்கு எந்தவொருதண்டனையையும்கொடுக்கவில்லை அவருடைய அந்தக்கொட்டத்தை அடக்குவதற்கு அரசாங்கம்எந்தவொருநடவடிக்கையையும் எடுக்கவில்லை.

அதனால்தான்  அந்த ஆட்சிதோற்கடிக்கப்பட்டது. நான் ஏற்கெனவே சொன்னகட்சிகள்,மதத்தினர் எல்லோரும் ஒன்றுசேர்ந்து பொலனறுவைமாவட்டத்திலேஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து   சாதாரணமக்களோடு வாழ்ந்த, அந்தமக்களின் உணர்வுகளைப் புரிந்த மைத்திரிபால சிறிசேன அவர்களை  இந்தநாட்டின்ஜனாதிபதியாக்குவதற்கு வாக்களித்தார்கள்.

எனவே, இன்று இரண்டுபிரதான கட்சிகளாக இருக்கின்ற ஐக்கிய தேசியக்கட்சியினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும்  தலைவர்களான  பிரதமஅமைச்சர்மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களும் மேதகுமைத்திரிபாலசிறிசேன அவர்களும் ஒன்றுசேர்ந்து ஒரு தேசியஅரசாங்கத்தைஅமைக்க முன்வந்திருப்பதை நாங்கள் இந்த நாட்டுக்கு ஒருநல்லசகுனமாகவே  பார்க்கின்றோம்.

இதை உடைத்துசின்னாபின்னமாக்கி இந்த நாட்டிலே மீண்டும் ஒருயுத்தத்தைஅல்லது மீண்டும் ஓர் அழிவைக் காணச் சிலர்துடிப்பதுபோலஅவர்களுடைய பேச்சுக்கள் எங்களுக்குத் தென்படுகின்றன.எனவே,இந்த இரண்டு தலைவர்களும் ஏனைய பல சிறிய கட்சிகளும்சேர்ந்துஇரண்டு வருட காலத்திற்கு    அமைக்கப்போகின்ற இந்ததேசிய அரசாங்கத்திலே அவர்கள் கொண்டுவரப்போகின்ற பலநல்ல விடயங்களுக்குப் பூரண பக்கபலத்தைநீங்கள் வழங்கவேண்டுமென்று என்னுடைய கட்சி சார்பிலே நான்அன்பாகவேண்டுகோள் விடுகின்றேன்.

ஏனென்றால், எங்களுடைய நாட்டைப் பொறுத்தமட்டிலேநிரந்தரமான ஒருதேசிய பொருளாதாரக் கொள்கையோ, தேசியகல்விக் கொள்கையோ அல்லதுதேசிய வெளிநாட்டுக்கொள்கையோ  இல்லை.

ஆட்சியாளர்கள் மாறுகின்றபோதுஎல்லாம் மாறுகின்ற ஒரு நிலைகாணப்படுகின்றது. இது எமதுநாட்டுக்கு மிகவும் ஓர் ஆபத்தான நிலையைத்தான்உருவாக்கும்.

மேலும், எங்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பாகக்குறிப்பிடும்போது மூன்றுஇலட்சம் தமிழ்ச் சகோதரர்கள் மெனிக்பாமை நோக்கி வந்தார்கள். நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த  காலத்திலே இரண்டு இலட்சம் தமிழ்,முஸ்லிம், சிங்கள மக்களை கிழக்கு மாகாணத்திலும்  மூன்று இலட்சம் தமிழ் மக்களில் ஒரு பகுதியினரை வடமாகாணத்திலும் நிரந்தரமாக மீள்குடியேற்றக்கூடிய ஒரு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் வடக்கிலிருந்து நானும் ஓர் அகதியாக  வெளியேற்றப்பட்டவன்.

அடிக்கடி இந்த விடயத்தை நான் ஞாபகமூட்டியிருக்கின்றேன்.என்னோடு சேர்த்து வெளியேற்றப்பட்ட ஓர் இலட்சம் முஸ்லிம் சகோதரர்களில் 20சதவீதமானவர்கள்தான் சொந்த மண்ணிலே மீள்குடியேறியிருக்கிறார்கள்.எஞ்சியவர்களின் மீள்குடியேற்றுவதில் பல சவால்கள், பல பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே, இந்தத் தேசிய அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆட்சி செய்கின்ற  வட மாகாண அரசும்  சேர்ந்து நியாயமான முறையிலே அவர்களுடைய மீள்குடியேற்றத்துக்காக ஒரு திட்டத்தை வகுத்து  அதனைச் செயற்படுத்த வேண்டுமென்று இச்சந்தர்ப்பத்திலே வேண்டுகோள் விடுக்கின்றேன்.

எங்களுடைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டிலே5பேருடன் அது ஆரம்பிக்கப்பட்டது. இறைவனுடைய அருளாலும் மக்களுடைய ஆதரவினாலும் 5 வருடத்துக்குள் 5 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, வன்னி மாவட்டத்திலே ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் மட்டக்களப்பிலே ஓர் உறுப்பினரையும் திருகோணமலையிலே ஓர் உறுப்பினரையும் அதேபோல, அநுராதபுர மாவட்டப் பிரதிநிதியாகஇலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த பின்பு  ஐக்கிய தேசியக் கட்சியினூடாக எங்களுடைய கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரு சிறுபான்மையின உறுப்பினர் –   என்னருகில் அமர்ந்திருக்கின்ற சகோதரர்  இஸ்ஹாக்அவர்களையும் எங்களுடைய கட்சி பெற்றிருக்கிறது. மேலும், குருநாகல் மாவட்டத்திலே 54,000வாக்குகளைப் பெற்ற டாக்டர் ஸாபி அவர்களுக்காகவும் புத்தளத்தில் 1200வாக்குகள் வித்தியாசத்திலே அடுத்த இடத்திலே  இருக்கின்ற சகோதரர் நவவி அவர்களுக்காகவும் வாக்களித்த தமிழ், சி்ங்கள, முஸ்லிம் மக்களுக்கு நான் இச்சந்தர்ப்பத்திலே நன்றி கூறுகின்றேன். அதேபோன்று நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வன்னி மாவட்டத்திலே எங்களுடைய கட்சிக்காக வாக்களித்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் புத்தளம், குருநாகல், திருகோணமலைபோன்றஏனைய மாவட்டங்களிலும் கட்சிக்காக வாக்களித்த மக்களுக்குநன்றிகூறுகின்றேன். குறிப்பாக, அம்பாறை மாவட்ட மக்களுக்கு நான் நன்றிகூறவேண்டும். நாங்கள் தேர்தலில்  எங்களுடைய கட்சிச் சின்னத்திலேதனியாகப்போட்டியிட்டபொழுது 33,000 இற்கும் மேற்பட்ட வாக்குகளைஅவர்கள்அளித்தார்கள். ஓரீராயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அங்குஒரு பிரதிநிதித்துவத்தைப் பெற முடியாது போனாலும், எங்களை நம்பிவாக்களித்த அந்தமக்களுக்கும் நான் நன்றி கூறுகின்றேன்.

அவர்களை ஒருபோதும் நாங்கள் கைவிடமாட்டோம். அந்த மக்களுக்காக,அவர்களுடைய எதிர்பார்ப்புகளுக்காக இந்தப்பாராளுமன்றத்திலே நிச்சயமாகஎங்களுடைய கட்சிப் பாராளுமன்றஉறுப்பினர்களும் கட்சிப் போராளிகளும்ஒன்றுசேர்ந்து  உழைப்போம்.

இந்த தேசிய அரசினூடாக  அமைக்கப்படுகின்ற அமைச்சரவை தொடர்பாக பல கருத்துக்கள் கூறப்பட்டனஇந்த நாட்டிலே  ஐம்பதுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள் என்ற வரலாறு இருக்கின்றது. எனவே, சிறு சிறு விடயங்களுக்காக முரண்பட்டுக்கொள்ளாமல் எதிர்வரும் இரண்டு வருட காலத்துக்கு எல்லோரும் ஒன்றுசேர்ந்து உழைப்போம். 30 வருட யுத்தத்திற்குப் பிறகு எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிரந்தரமான நல்ல தீர்வைப் பெற்றுஇந்த நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டுமென மீண்டும் வேண்டி, விடைபெறுகின்றேன்.

நன்றி.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *