Breaking
Wed. May 1st, 2024

வில்பத்து சரணாலயம் விஸ்தரிக்கப்பட்டு வனஜீவராசிகள் வலயமாக அந்தப் பிரதேசம் பிரகடனப்படுத்தப்படுவதான அறிவிப்பு தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக் குறித்து கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர்கள், அரசாங்க எம்பிக்கள், ஜம்இய்யதுல் உலமா, சிவில் சமூகம், மற்றும் பாதிக்கப்பட்டோர் வெளியிட்ட கருத்துக்களின் தொகுப்பு.

அமைச்சர் ஹலீம்

முஸ்லிம் சமூகம் இன்று அமைதியிழந்கு தவிக்கின்றது. நெருக்கடியான, மிகவும் மோசமான சோதனை மிகுந்த காலகட்டத்திலே நாங்கள் இருக்கின்றோம். நமது சமூகத்திற்கெதிரான பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தினமும் வௌ;வேறு வடிவங்களில் அவை தாண்டவமாடுகின்றன. இதனால் நாங்கள் பாதிப்படைகின்றோம். ஜனாதிபதி மைத்திரிபால வில்பத்துப் பிரச்சினையை ஒரு சாராரின் நியாயங்களைக் கேட்டே கையாளுகின்றார். அதன் மூலமே வில்பத்து எல்லையை விஸ்தரிப்பதான முடிவை மேற் கொண்டுள்ளார். இது தொடர்பில் சம்பந்தப்பட்டிருக்கும் மக்களினதும், அவர்களின் பிரதிநிதியான அமைச்சர் ரிஷாத் பதியுதீனதும் கருத்துக்களைக் கேட்டறிந்து செயற்பட்டிருக்க வேண்டும். இறுதி முடிவை எடுக்கும் போது இவர்களிடம் கேட்டிருந்தால் இந்தப் பிரச்சினை இந்தளவு தூரம் விஸ்வரூபமாக மாறியிருக்காது.

இந்த நிலையில் முஸ்லிம் எம்பிக்கள் அனைவரும் ஏகமனதான முடிவொன்றை எடுத்து பிரதமருடன் முதலில் பேச்சு நடத்துவோம், அதன் பின்னர் ஜனாதிபதியுடன் பேசி இதற்கான தீர்வுக்கு முயற்சிப்போம்.

கடந்த காலங்களில் பொதுபலசேனா முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொண்ட அட்டகாசங்களை நாம் ஜனாதிபதியிடம் மிகவும் தெளிவாக எடுத்துணர்த்தியுள்ளோம். இவர்கள் தொடர்பில் எமக்கு நிறையப் பிரச்சினைகளுண்டு. இந்தப் பிரச்சினை இப்போது வேறுரூபத்தில் வில்பத்தாக கிளம்பியுள்ளது.

அமைச்சர் பௌசி

வில்பத்துப் பிரச்சினை வடக்கு முஸ்லிம்களை பெரிதும் பாதித்துள்ளது. மீள்குடியேறியுள்ள முஸ்லிம்கள் இனவாதிகளின் நடவடிக்கைகளினாலும் இனவாத ஊடகங்களின் செயற்பாடுகளினாலும் மனஉளைச்சலுக்குள்ளாகியுள்ளனர். அரசாங்கம் இவர்களின் விடயத்தில் பாராமுகமாக இருக்கக்கூடாது. முஸ்லிம்கள் எப்போதும் அரசையே நம்பியிருப்பவர்கள். அவர்கள் வேறு எந்த தவறான செயற்பாடுகளிளும் ஈடுபட்டதில்லை. தற்போதைய ஆட்சியைக் கொண்டுவருவதில் அவர்கள் பெரும் பங்களித்தவர்கள். குறிப்பாக ஜக்கியதேசியக் கட்சியை மையமாக வைத்தே அவர்கள் ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் வாக்களித்தனர். எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாரிய கடப்பாடுகளுண்டு. முஸ்லிம்களை துச்சமாக நினைத்து நடைபெற்று வரும் செயற்பாடுகளுக்கு பிரதமர் அனுமதிக்கக் கூடாது. ஆகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை முஸ்லிம் எம்பிக்களான நாம் சந்தித்து சமகாலநிலை பற்றி அவசரமாக எடுத்துரைப்போம்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்.

வில்பத்துப்பிரச்சினையை வடக்கிலுள்ள ரிஷாட் கையாளட்டும், கிழக்கின் அக்கரைப்பற்று பொத்தானைப் பள்ளிவாசல் விவகாரத்தை ஹக்கீம் கையாளட்டும் என்ற மனோபாவத்தை மாற்றுங்கள். இவ்வாறான சிந்தனைகளும் மனப்பாங்கும்தான் ஆட்சியாளர்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகின்றது. சமூகப் பிரச்சினையில் முஸ்லிம் எம்பிக்களும் சிவில் அமைப்புக்களும் சமூக நல நிறுவனங்களும் ஒற்றுமையுடன் ஓரணியிலிருந்தால் நமது உரிமைகளை இலகுவில் வென்றெடுக்களாம்;. வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற பேதமைகள் எமக்கு வேண்டவே வேண்டாம். வில்பத்து விவகாரத்தில் ஜனாதிபதிதான் சம்பந்தப்பட்ட விடயதான அமைச்சர். எனவே அவர் எந்த நேரத்திலும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட முடியும். வர்த்தமானி வெளிவந்தால் அதனை இரத்துச் செய்வதென்பது இலகுவான காரியமல்ல அதுமட்டுமன்றி பின்னர் இரத்துச் செய்வதன் மூலம் நாட்டில் சலசலப்பையும் பிரச்சினையையும் அது ஏற்படுத்தும். இது ரிஷாட் பதியுதீனுக்கு மட்டுமேயுள்ள பிரச்சினையல்ல முஸ்லிம்களுக்குள்ள பிரச்சினை. நாங்கள் அரசியலுக்கு வரமுன்பே ஜே ஆரினால் கொண்டுவரப்பட்ட 78ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் கீழான விகிதாசார பிரதிநிதித்துவத்தின் மூலமே இன்று 21 பேர் எம்பியாக இருக்கின்றோம். இந்த முறைமைக்கு சாவுமணியடித்து மீண்டும் தொகுதிவாரி முறையைக் கொண்டுவர முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. அவ்வாறு கொண்டுவரப்பட்டால் பாராளுமன்றத்தில் 5 அல்லது 6 முஸ்லிம் எம்பிக்களுக்கு மேல் அங்கம் வகிக்க முடியாது. இந்த வரலாற்றுத் துரோகத்திற்கான முழுப் பொறுப்பையும் ஒட்டுமொத்த முஸ்லிம் எம்பிக்களே பொறுப்பேற்க வேண்டும். புதிய அரசியலமைப்பை கொண்டுவருவது அவ்வளவு இலகுவான காரியமல்ல சமஷ்டி என்ற சொல்லே சிங்கள சமூகத்தை உசுப்பேற்றும். எனவே பெரும் பான்மைக் கட்சிகள் இரண்டும் இணைந்து  தற்போதய அரசியல் அமைப்பில் 20 வது திருத்தத்தை கொண்டுவந்து தேர்தல் முறையை மாற்றலாம். எனவே முஸ்லிம்களாகிய நாம் கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றுபட வேண்டிய தருணம் இது. வில்பத்து அதைவிட அவசரமான பிரச்சினை. எனவே காலம் தாழ்த்தாமல் பிரதமரையும் சந்திப்Nபுhம் அவர் மூலமும் அழுத்தங்களைக் கொடுப்போம் அவர்களால் கிடைக்கும் பதில் எமக்கு திருப்திதராவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகுவோம்.

மஹ்ரூப் எம்பி

நாம் வாழுகின்ற வீடுகளினை ஆறுமாதம் துப்பரவு செய்யாவிடினும் பற்றை வளர்கின்றது. இந்தப் பற்றைகளை தொடர்ந்து வெட்டாது விட்டால் இது மரமாக மாறுகின்றது. இதுதான் மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் நிலையும். அவர்கள் தாம் வாழ்ந்த பூமிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு 26 வருடங்களாகின்றன. இந்த நிலையில் அவை காடாகக் கிடக்கின்றன. அதனை துப்பரவு செய்யும் போது வில்பத்தை அழிப்பதாக இனவாதிகள் கூக்குரல் போடுகின்றனர். முசலி எங்கேயோ இருக்கின்றது. வில்பத்து எங்கேயா இருக்கின்றது. முசலிப் பிரதேசத்தில் மக்கள் வாழ்ந்த அடையாளமிருக்கின்றது. கிணறுகள், பள்ளிவாசல்கள், வரலாற்றுத் தடயங்கள் இருக்கின்றன. அரச அலுவலகங்களினதும் பாடசாலைகளினதும் எச்ச சொச்சங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் வில்பத்தை அமைச்சர் ரிஷாட் அழித்து மக்களைக் குடியேற்றுகிறாரென அபாண்டங்களைப் பரப்புகின்றனர். வடபுல முஸ்லிம்களுக்காக அவர் தன்னந்தனியனாக நின்று போராடுகின்றார் முஸ்லிம் குரல்களாக தம்மை இனங்காட்டிக்கொள்வோரின்; குரல்வளையும் இந்த விடயத்தில் அடங்கிக் கிடக்கின்றது. ரிஷாட் மட்டும் பிரச்சினைப் படட்டுமேயென எண்ணுவது கூடாது.

இனவாதிகளின் அட்டகாசங்களுக்கு முடிவுகட்டுங்களென நாம் கூறும் போது நாட்டுத் தலைமை மௌனம் காக்கின்றது. கைது செய்யுங்களெனக் கூறினால் அதற்கு மாற்றமாக அரவணைத்துப் போஷிக்கின்றனர். நீதி அமைச்சுக்கும், பௌத்த சாசன அமைச்சுக்கும் எந்த இணைவும் இருக்க முடியாது. இதனை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் நிறைவேற்றுகின்ற ஆக்க பூர்வமான பிரேரனை மூலம் வில்பத்து பிரச்சினை உட்பட சமூகப்பிரச்சினைக்கு முடிவுகட்டப்பட வேண்டும்.

முஜிபுர் ரஹ{மான். ஏம் . பி

பொதுபல சேனா போன்ற இனவாதிகள் முஸ்லிம்களை தொடர்ந்தும் இம்சிப்பதை அனுமதிப்பதற்கு அரசாங்கம் இடமளித்தால் அதன் விளைவுகள் வேறுவிதமாகவே அமையும். இந்த ஆட்சியை நாங்கள்தான் கொண்டுவந்தோம் என்பது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும்; நன்கு தெரியும். சிறுபான்மையினருக்கெதிராக செயற்பட்டால் அதன் விளைவு என்னவென்பதும் அவர்களுக்குப் புரியும். அவ்வாறு செயற்படுவதன் மூலம் மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு அவர்கள் ஒருபோதும் விரும்பவும்மாட்டார்கள.; அதற்கு இடமளிக்கவுமாட்டார்கள். பொதுபலசேனா பிரச்சினையில் ஜனாதிபதிக்கு முஸ்லிம் எம்பிக்களான நாங்கள் நல்ல செய்தியொன்றை ஏற்கனவே வழங்கியுள்ளோம். ஏதிர்க்கட்சியில் இருக்கும் போது ஆர்ப்பாட்டங்களையும் அறிக்கைகளையும் விட்டுக் கொண்டிருந்தோம். இப்போது அரசுடன் இருப்பதால் உள்ளுக்குள்ளே இருந்து போராடுகின்றோம் நாம் சும்மா இருந்துவிடவில்லை. சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களை முஸ்லிம் சமூகத்திற்காக பரிந்து பேசும் நிலையை நாம் ஏற்படுத்தியுள்ளோம். அண்மையில் ஜக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 40 எம்பிக்கள் ஜனாதிபதியை சந்தித்தோம். அதில் மூவர் மட்டுமே முஸ்லிம் எம்பிக்கள். அரசு எதிர் கொள்ளும் பிரச்சினைகளில் முஸ்லிம்கள் மீதான இனவாதிகளின் அட்டூழியங்கள் தொடர்பாக சிங்கள எம்பிக்கள் ஜனாதிபதியிடம் கூறி இதற்குத் தீர்வு காண வேண்டுமென்று வலியுறுத்தியதை நமக்குக் கிடைத்த வெற்றியாக கருதுகின்றோம்.

வில்பத்துப் பிரச்சினையில் முஸ்லிம் எம்பிக்களான நாம் ஒன்றுபட்டு அழுத்தங்களைக் கொடுப்போம். ஜனாதிபதி தனது தீர்மானத்தை மாற்றுவார் என நம்புகின்றோம்.

அமீர் அலி

வில்பத்துப் பிரச்சினையை நான் பல்வேறு கோணங்களில் பார்க்கின்றேன். ஜனாதிபதிக்கு உண்மை நிலையை எடுத்துக்காட்டி இந்த அறிவிப்பை இரத்துச் செய்ய வைக்க எடுக்கும் முயற்சி, முஸ்லிம்கள் இன்னுமின்னும் காணிகளை கையகப்படுத்திவிடுவார்களா என்ற அவசரத்தில் அவர்கள் மேற் கொள்ளும் விடயம், தங்களால் சொல்லப்பட்ட விடயங்கள் எதுவுமே செய்யப்பட வில்லை – இதையாவது செய்து காட்டுவோம் என்ற விடயம் அல்லது மஹிந்தவை விட நாங்கள் சிங்கள இனத்தின் மீது காட்டும் அக்கறை மேலானது என்ற விடயம் இவைகளௌ;ளாம் எனக்குள் எழுந்து நிற்கும் கேள்விகள்.

நாங்கள் அவசரப்பட்டு சில விடயங்களை மேற் கொள்வதிலும் பார்க்க முஸ்லிம் பாராளுமன்ற ஒன்றியத்தின் மூலம் பிரேரணையாக நிறைவேற்றி அதனை ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கொண்டு சென்று உரிய தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியை மேற் கொள்வோம். பொதுபலசேனாவின் விடயத்திலே ஜனாதிபதியை சந்தித்து நிலைமைகளை விளக்கிய வேளை அங்கு வாக்குவாதங்கள் கூட ஏற்பட்டன. எனினும் நாம் சொல்ல வேண்டியதை காட்டமாகக் கூறினோம். அதே போன்று வில்பத்துப் பிரச்சினையையும் எடுத்துக் கூறி எங்களது உரிமங்களை வென்றெடுப்போம்.

இன்று யார் மரம் வெட்டினாலும், எங்கு மரம் வெட்டினாலும் அதை அமைச்சர் ரிஷாட் பதியுதீன்தான் வெட்டினார் என்ற அபாண்டங்களைப் பரப்புமளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. வில்பத்துவில் எந்த அழிவுகளும் இடம்பெறவில்லை என அவர்களுக்குத் தெரிந்திருந்தும் அதனைக் கருப் பொருளாக வைத்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

முஸ்லிம்கள் அந்தப் பிரதேசத்தில் வாழவில்லை என்றால் பல்லாயிரக்கணக்கானோர் எங்கிருந்து வந்தார்கள் என்ற கேள்வியை நான் கேட்கின்றேன். கட்சி பேதங்களை மறந்து இந்த பணியை முன்னெடுப்போம். ஜனாதிபதி இதற்கு சாதகமான பதில் தராவிட்டால் மக்களிடம் இதனைக் கூறி சவால்களை முன்னெடுப்பதுபற்றி யோசிப்போம். ஏற்கனவே நாங்கள் செய்து காட்டியவர்கள். ரிஷாட் பதியுதீனை மட்டும் குறியாக வைத்து அவரை தாக்குவதன் மூலம் அவரது குரல் வளையை நசுக்க முடியுமென்றும் முஸ்லிம் சமூகத்துக்கு அவர் மேற்கொள்ளும் பணிகளை தடுப்பதற்கும் அவர்கள் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு அங்கு போக முடியாதிருந்த காலப்பகுதியில் அதாவது 2012 ஆம் ஆண்டு அவர்களின் பூர்வீக நிலங்களான சுமார் ஒரு இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாயக் காணிகளையும் பல்லாயிரம் ஏக்கர் குடியிருப்புக் காணிகளையும் கொழும்பிலிருந்து கொண்டு ஜி. எஸ் பி முறைப்படி வனப்பரிபாலன திணைக்களத்திற்கு அவை சொந்தமானதென வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனம் செய்தனர். பிரதேச செயலாளர்களுக்கோ காணியுரிமையாளர்களுக்கோ தெரிவிக்கப்படாமல் பொது அறிவித்தலின்றி மேற் கொள்ளப்பட்ட இந்த அராஜக நடவடிக்கையினால் நொந்து போயிருந்த இந்த மக்களுக்கு கடந்த அரசில் நாம் மேற்கொண்ட பல்வேறு அழுத்தங்களின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ½ ஏக்கர் வீதம் அரச காணிகள் வழங்கப்பட்டன. வுpவசாயத்திற்கென ஒரு ஏக்கர் வழங்கப்படுவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட போதும் அது இற்றைவரை நிறைவேற்றப்பட வில்லை. வில்பத்துவுக்கும் முஸ்லிம்கள் வாழுகின்ற கரடிக் குழி, பாலைக் குழி, மறிச்சுக்கட்டி, கொண்டச்சி, அகத்தி முறிப்பு, காயாக்குழி ஆகிய இடங்களுக்கும் எந்த தொடர்புமில்லை. இவை முஸ்லிம்கள் காலாகாலமாக வாழ்ந்த பூர்வீகக் கிராமங்கள்.

முஸ்லிம்கள் மீளக் குடியேறிய குடும்பங்களான இந்த இடங்கள் வில்பத்துக்கு சொந்தமானதெனக் கூறியே இனவாதிகள் கடந்த காலங்களில் கூக்குரலிட்டனர். ஞானசார தேரர் அங்கு சென்று அட்டகாசம் செய்தார். ஆனந்த தேரரும் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களென நடாத்தி என் மீது பல்வேறு அபாண்டங்களைப் பரப்பினார். இனவாத சூழலியலாளர்களும், இனவாத ஊடகங்களும் அவர்களுடன் இணைந்து வடபுல முஸ்லிம்களுக்கும் எனக்கும் எதிராக இல்லாத பொல்லாத கதைகளைக் கூறினர். இதனைப் பொறுக்க மாட்டாதே கடந்த டிசம்பரில் நான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஆணந்த தேரருடன் விவாதித்து உண்மைகளை விளக்கினேன். சிங்கள சமூகமும் எமது நியாயங்களை ஏற்றுக் கொண்டது.

ஜனாதிபதியிடம் இந்த விடயங்கள் தொடர்பில் பல தடவைகள் சந்தித்து உண்மைகளை எடுத்துக் கூறினேன். 2012 வர்த்தமானி அறிவித்தலால் எமக்கு அநியாயம் இழைக்கப்பட்டதையும் கூறியிருக்கின்றேன்.

மீளக் குடியேறிய மக்கள் படுகின்ற அவஸ்தைகள் வாரத்தைகளால் சொல்ல முடியாதவை. அரசோ, அரச சார்பற்ற நிறுவனங்களோ இந்த மக்களுக்கு எந்த உதவியும் வழங்கவில்லை. எங்களை மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே இன்னும் நடத்துகின்றனர். இவர்களுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட வீடுகள் வெளிநாடுகளிலும் அரபுலக நாடுகளிலும் எனது முயற்சியினால் பெறப்பட்டவை. சில வீடுகள் முஸ்லிம்களின் பூர்வீகமான அளக்கட்டு எனும் இடத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வில்பத்துவுக்கும் இந்தப் பிரதேசத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென மீண்டும் அழுத்தமாகக் கூறுகின்றேன். சுமார் ஒரு வருடங்களின் பி;ன்னர் இனவாதிகள் மீண்டும் கூத்தாடத் தொடங்கியுள்ளனர். தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களை அழைத்துக் கொண்டு அங்கு சென்று மக்கள் வாழும் வீடுகளில் மிலேச்சத்தனமாக புகுூந்து தாம் விரும்பியபடி படங்களை எடுக்கின்றனர். ஹெலிகொப்டரில் பறந்து படங்களை எடுத்து வில்பத்தை அழிப்பதாக ஊடகங்களில் ஒரு பிரம்மையை ஏற்படுத்துகின்றனர். சிங்கள சமூகத்தை தூண்டிவிடுவதே இனவாதிகளின் நோக்கமாக இருக்கின்றது.

ஜனாதிபதியிடம் போலியான வீடியோ நாடாக்களையும், தகவல்களையும் கொடுத்து அவரை தம்வசப் படுத்தியதனால் வந்த விளைவே வில்பத்துவை விஸ்தரித்து வனஜீவராசிகள் பூமியாக பிரகடனப்படுத்தப் போவதாக வெளிவந்த அவரின் அறிவிப்பு இது முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தானது. ஏதிர்கால சந்ததியினரின் வாழ்விடங்களை முடக்கச் செய்யும் ஒரு முயற்சியாகும். இது எனது தனிப்பட்ட பிரச்சினையல்ல முசலி சமூகத்தின் ஒட்டுமொத்த பிரச்சினையாகும்.

முஸ்லிம்கள் தொடர்பாக இத்தனை அட்டகாசங்கள் செய்யும் இனவாதிகளும் சூழலியலாளர்களும் வவுனியா மாவட்டத்தில் காலபோகஸ்வௌ பிரதேசத்தில் வனபரிபாலனத்திற்கு சொந்தமான காணிகளை எந்தவிதமாக கேள்விக்கணைகளுமின்றி சிங்கள சமூகத்திற்கு பகிர்ந்து வழங்கப்பட்டமை குறித்து ஏன் மௌனம் காக்கின்றனர?; முஸ்லிம்களுக்கு ஒரு நீதி, மற்றைய இனங்களுக்கு இன்னுமொரு நீதியா? இது தானா நல்லாட்சியின் இலட்சணம்.

புலிகளால் அடித்து விரட்டப்பட்டு அகதியான ஒரு சமூகத்தை இலக்கு வைத்து நடாத்தப்படுகின்ற இந்த அநியாயங்களை ஜனாதிபதி தட்டிக் கேட்பததற்குப் பதிலாக, தட்டிக் கொடுக்கின்றார் அவர்களின் மனப்போக்குக்கு ஏற்ப அவர் நடந்து கொள்வது வேதனையானது.

கலாநிதி. அனீஸ்

நடக்கும் நிகழ்வுகளை எண்ணும்; போது மிகவும் பயமாகவும், அச்சமாகவும் இருக்கின்றது. “சட்டிக்குள்ளே இருந்து அடுப்புக்குள்ளே விழுந்துவிட்டோமா?” என எண்ணத் தோன்றுகின்றது. இது சர்வதேச மட்டத்தில் சர்வதேச வலைப்பின்னலோடு மேற் கொள்கின்ற ஒரு முயற்சி. இது ஒரு தனி மனிதனாலோ தனிப்பட்ட அமைச்சராலோ தனியான ஊர் மக்களாளோ கையபாளக் கூடிய ஒன்றல்ல. இவ்வாறு ஒரு சமூகம் வேதனைக்குள் இருக்கும் போது அதனை சில முஸ்லிம் தலைமைகள் கண்டும் காணாதது போன்றிருக்கும் நிலையைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கின்றது. இது ஒரு சமூகப் பார்வையிலே, சமூக உணர்வோடு பார்க்கப்பட வேண்டிய விடயம். இந்த நாட்டின் தலைமைத்துவம் எடுத்திருக்கின்ற முடிவு நடை முறைப்படுத்தப்படுமேயாயிருந்தால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது பாரம்பரிய பிரதேசத்தை இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும். இவ்வாறான நிலைமையில் எமக்கிடையே இருக்கின்ற அரசியல் மற்றும் கொள்கை ரீதியான வேறுபாடுகளை மறந்து பணியாற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சமூகத்தை வழிநடத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், மார்க்க ரீதியான அமைப்புக்கள், சிவில் அமைப்புக்களுக்கு பாரிய கடப்பாடு இத்தருணத்தில் இருக்கின்றது.

இந்தப்பணியிலிருந்து நாம் விடுபடுவோமாயிருந்தால் இது எங்களை அறியாமலே உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் இளைஞர்களின் கைகளுக்குள் செல்லும் அதன் விளைவுகள் விபரீதமாகும். கடந்த காலங்களில் இவ்வாறுதான் எமது நாட்டில் நடந்தது. அவ்வாறான ஒரு நிலையை தோற்றுவிப்பதுதான் சிலரின் இறுதி இலக்காகவும் இருக்கின்றது. இந்த நாட்டிலே முஸ்லிம் பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் ஏற்படுத்துவதே அடிப்படை இலக்காக அவர்களுக்கு இருக்கின்றது. எனவே புத்தி சாதூர்யத்தோடு செயற்பட வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது. இதை ஒரு தனி அமைச்சர் மீது ஏற்பட்டுள்ள தாக்குதாகவோ, அல்லது ஒரு கட்சியின் மீது மேற் கொள்ளப்படுகின்ற தாக்குதலாகவோ சிலர் பார்க்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல.

இன்று மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

என். எம் அமீன் – தலைவர் முஸ்லிம் கவுன்சில்

வில்பத்துப் பிரச்சினை உட்;பட முஸ்லிம்கள் எதிர் நோக்கும் அத்தனை பிரச்சினைகளையும் தீர்வுகாண வேண்டுமெனில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும் கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபடுவதுடன் சிவில் அமைப்புக்களையும் சமூகப்பிரச்சினைக்காக தங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலமே இதில் வெற்றிபெற முடியும். வில்பத்து தொடர்பான இந்த கலந்துரையாடலில் நான்கு கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருப்பது ஆரோக்கியமான அடித்தளமாகும். ஏதிர்காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் இணைத்துக் கொண்டு இப்பயணத்தை முன்னெடுப்பதன் மூலமே இதில் வெற்றிபெற முடியும்.

சட்டத்தரணி சிராஷ் நூர்டீனால் வாசிக்கப்பட்ட தீர்மானங்கள்.

  1. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டு ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் மகஜர் ஒன்றை கையளித்தல்.

  1. 2012 ஒக்டோபர் 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 1879/15 ஆம் இலக்க வர்த்தமானி பிரகடனத்தை இரத்துச் செய்யுமாறும் ஜனாதிபதியினால் வில்பத்து விஸ்தரிக்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அந்த பிரதேசத்தை சொந்தமாக்குவதென்ற ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பான உத்தேச பிரகடனத்தை வாபஸ் பெறுமாறும் ஜனாதிபதியை கோருதல்.

  1. அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும்இ சிவில் சமூகத்தினரும், ஜம் இய்யதுல் உலமா பிரதிநிதிகளும் முசலி மீள்குடியேற்றக் கிராமங்களை பார்வையிட்டு உண்மை நிலைகளை அறிதல்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *