Breaking
Tue. Dec 16th, 2025

வாஞ்ஜுர்

எந்த இழிசெயலுக்கும் தயங்காம‌ல் ஏதாவது செய்திகளைப் புனைந்து வெளியிட்டுத் தம் அரிப்பைத் தீர்த்துக் கொள்ள வேசியாகி கீழிறங்கி ஊடகங்கள்.

ரு புறத்திலிருந்து மற்றொரு புறத்துக்கு ஒன்றைக் கடத்த உதவுவதே ஊடகம் ஆகும்.

மின்சாரத்தை ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குக் கொண்டு வரும் உலோகக்கம்பி அல்லது நீர், அல்லது மின்சாரம் பாயும் எதுவானாலும் மின் கடத்தும் ஊடகமாகும். ஒலி அலைகளைச் சுமந்து வருவதற்குக் காற்று ஊடகம் ஆகும். சிங்கப்பூரிலிருந்து தங்கத்தைக் கடத்தி வரும் ‘குருவி’யும் ஊடகம்தான்.

lootingfinding

யாஹூ இணையதளத்தில் வெளியிடப்பட்ட இரு நிழற்படங்களில் ஒன்றில் கருப்பினத்தவர் ஒருவர் சில உணவுப் பொருட்களைச் சுமந்து கொண்டு மார்பளவு நீரில் நீந்திச் செல்கிறார்.மற்றொரு நிழற்படத்தில் வெள்ளையர் ஒருவரும் ஒரு பெண்மணியும் முதுகிலும் கைகளிலும் பொருட்களைச் சுமந்து கொண்டு அதே போல நீந்திச் செல்கின்றனர்.ஒரே நாளில் ஒரே இணையத் தளத்தில் வெளியிடப்பட்ட இவ்விரு நிழற்படங்களில் முதலாவதில் அந்தக் கருப்பினத்தவர் உணவுப் பொருட்களைச் ‘சூறையாடிச்’ செல்வதாகவும் வெள்ளையர்கள் அப்பொருட்களைக் ‘கண்டுபிடித்துச்’ செல்வதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

இவர்களது ‘இஸ்லாமோஃபோபியா’ அரிப்பைச் சொறிந்து கொள்ள எந்த நிலைக்கும் கீழிறங்குவார்கள்.

திரைப்படத்தில் வந்த காட்சியினைப் போட்டு, “சிரியாவில் ஃபேஸ்புக் அக்கவுண்ட் வைத்த பெண்ணைக் கல்லால் அடித்து கொல்லும் கொடூரம்” எனப் பச்சைப்பொய்ப் பரப்பி, தம்மை எழுத்தாளர் என அழைத்துக்கொள்ளும் உலுத்தர்களும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் 9.8.2014 அன்று தட்ஸ்தமிழ் தளத்தில் வெளியான ஒரு செய்தி

ojntrc

Related Post