Breaking
Mon. May 6th, 2024
இளநிலை பட்டப் படிப்பு படிக்கும் லத்தீப் என்னும் மாணவன் ஐதராபாத் எஸ்.ஆர். நகரில் வசிக்கிறார். 21 09 2014 அன்று காலை அப்துல் லத்தீப் தனது நண்பருடன் சேர்ந்து அப்பகுதியில் இருக்கும் அரசு வங்கிக்கு சொந்தமான ஒரு ஏ.டி.எம்.க்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
அவர் எடுக்க நினைத்த பணம் ரூ. 200 தான். இதற்காக தனது ஏ.டி.எம் கார்டை இயந்திரத்தில் செலுத்திய பின்னர், தனது ரகசிய குறியீட்டு எண்ணை அழுத்தினார். அப்போது திடீரென அந்த ஏடிஎம் இயந்திர பாகங்கள் திறந்து கொண்டு அந்த இயந்திரத்திலிருந்த ரூ. 26 லட்சம் வெளியே கொட்டியதாக தெரிகிறது.
இதை கண்டு அதிர்ந்த மாணவன் லத்தீப், உடனடியாக ஏ.டி.எம் மையத்திலிருந்த இருந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை விவரமாக தெரிவித்துள்ளார். பின்னர் தனது நண்பனை பணத்திற்கு காவல் வைத்து விட்டு அருகிலிருந்த எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விரைந்து வந்த வங்கி அதிகாரிகள், இயந்திரத்தை சரி செய்தனர். சம்பவம் நிகழ்ந்த ஏ.டி.எம் மையத்தில் கண்காணிப்பு கேமராவோ பாதுகாவலரோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கி அதிகாரிகளின் இந்த அலட்சியத்தை போலீஸார் கண்டித்தனர். அதேநேரம் மாணவர் லத்தீப்பின் நேர்மையையும், பணத்தை ஒப்படைக்க அவர் எடுத்த முயற்சிகளையும் போலீஸாரும், வங்கி அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.
உண்மையான இறை அச்சம் உள்ளவர்கள் இப்படிதான் செய்வார்கள். இஸ்லாம் இதை தான் போதிக்கிறது. ஏவல், விலக்கல் அறிந்து நடக்க வேண்டும் என்பது இறை கட்டளை. அதன் படி சகோதரர் லதீப் நடந்து கொண்டது இறைவனின் வெகுமதி ஐ பெற்று தரும். அடுத்தவர்களுக்கு உரிமையனவைகளை அநீதமாக பறிப்பவர்கள், பறிக்க நினைப்பவர்களுக்கு இந்த சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது.
அறநெறியின் பால் தன் மகனை வளர்த்த மாணவரின் பெற்றோருக்கு பாராட்டுக்கள்.
இதற்கு நேர்மாற்றமாக டெல்லியில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் டி.எஸ்.சி. சாலையில் அமைந்துள்ள வங்கி ஏ.டி.எம். ஒன்றை நேற்று இரவு வாலிபர்கள் முகத்தை மூடி கொண்டு உடைக்க முயற்சி செய்துள்ளனர். வாலிபர்கள் உடைக்க முயற்சி ஏ.டி.எம்.மில் பாதுகாவலர் இல்லை. அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் ஏ.டி.எம். இயந்திரம் இருந்த அறையின் கதவை தட்டியுள்ளனர்.
அவர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். வாலிபர்கள் ரோக்தாஸ் சவுகான் மற்றும் குல்ஷன் திவாரி என்று தெரியவந்தது. அவர்கள் நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக்கழக்கத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். அவர்கள் அப்பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அவர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை கொள்ளையடிக்க கடந்த ஒரு வாரமாக திட்டமிட்டுள்ளனர். பின்னர் பாதுகாவலர் இல்லாத ஏ.டி.எம். ஒன்றை தேர்வு செய்துள்ளனர். நான்கு நாட்களுக்கு முன்னர் ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம்.மிற்கு சென்றுள்ளனர்.
ஆனால் அவர்களது திட்டம் நிறைவேறவில்லை. இந்நிலையில் டி.எஸ்.சி. சாலையில் இருந்த ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்றபோது சிக்கிக் கொண்டனர்.” என்று போலீஸ் டி.எஸ்.பி. ராஜ் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார். வாலிபர்களிடம் இருந்து ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க பயன்படுத்தப்பட்ட கருவிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *