Breaking
Mon. May 20th, 2024
முஸ்லிம் நாணயமானவனாக இருப்பான், நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பான், அவனுக்கு இறைவன் தடுத்தவற்றை ஒருபோதும் எடுக்க மாட்டான், அவன் கஷ்டத்தில் இருந்தாலும் நஷ்டத்தில் இருந்தாலும் அமானிதங்களை பேணகுடியவனாக இருப்பான், அடுத்தவன் பொருளுக்கு ஆசை படாதவனாக இருப்பான்.
சிரிய முஸ்லிம்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு சென்று குடியேறி வருகின்றனர், அகதிகளாக செல்பவன் குபேரனாக இருக்க வாய்பில்லை, சிரிய அகதிகளில் பலர் அன்றாட உணவு தேவைகளுக்கே சிறமபடுகின்றனர்.
 
 இந்த சிறமம் நிறைந்த சூழலிலும் அடுத்தவன் சொத்துக்கு ஆசைபடாத, தனக்கு தேவைகள் இருந்தாலும் அமானிதத்தை ஒப்படைக்க தவறாத ஒரு ஒப்பற்ற சகோதிரியைதான் படத்தில் பார்கின்றீர்கள்.
ஆம், அந்த சகோதிரிய சிரியாவிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு ஜெர்மனுக்கு அகதியாக வந்தவர். அவர் வீதியில் நடந்து செல்லும் போது ஒரு மணிபர்சை கண்டு எடுக்கிறார். அந்த பர்சை திறந்து பார்த்த போது அதர்கும் 1000 யூரோக்கள் இருப்பதை காண்கிறார். அவரது நிலைக்கு 1000 யூரோ அல்ல 10,000 யூரோக்கள் இருந்தாலும் அவருக்கு தேவை இருக்கிறது. நமக்கு தேவை இருந்தாலும் இது நமக்கு உரியது அல்ல என்பதை தெழிவாக உணர்ந்து மொழி தெரியாத நிலையிலும் அந்த பர்சில் இருந்த முகவரியை பிறரின் உதவியோடு படித்து தெரிந்து உரியவலை நாள் முழுவதும் தேடி அலைந்தார்.
அவரால் பர்சுக்கு சொந்த காரரை சென்று அடைய முடியவில்லை. மறு நாள் விடிந்ததும் இஸன் நகர காவல் நிலையத்தை தேடி செல்கிறார். அங்கிருந்த காவலரிடத்தில் “தான் வீதியில் கண்டெடுத்த பர்சை பணத்தோடும் முகவரியோடும் ஒப்படைக்கிறார்” உரியவரை தேடி ஒப்படைக்குமாறு வேண்டுகிறார்.
அந்த சகோதிரியின் நாணயத்தையும் அமானிதத்தையும் கண்ட காவலர்கள் அதிசயித்தனர் .அவருக்கு சன்மானம் கொடுக்க முன் வந்தனர் அவர்கள் வழங்க விரும்பிய அன்பளிப்பை பெற்று கொள்ள விரும்பாமலேயே தனது கடமையை செய்து முடித்த மன நிறைவோடு அந்த சகோதிரி திரும்பி சென்றார்.
இஸன் நகர காவல்துறை தமது அதிகார பூர்வ இணைய தளத்தில் அந்த சகோதிரியின் புகைபடத்தை பதிவிட்டு மகிழ்ந்தனர். அதைதான் நீங்கள் பார்க்கின்றீர்கள்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *