Breaking
Sun. Apr 28th, 2024

பிரிட்­டனின் வேல்ஸ் பிராந்­தி­யத்தில் பஸ்ஸில் பயணம் செய்­து­கொண்­டி­ருந்த முஸ்லிம் பெண் ஒரு­வ­ருக்கு பிரித்­தா­னிய கலா­சாரம் குறித்து அறி­வுரை கூற முயன்ற நபர் ஒருவர், தானே பாடம் கற்­றுக்­கொண்ட சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது.

நியூபேர்ட் நக­ரி­லி­ருந்து சிவம்­பிரன் நகரை நோக்கி சென்­று­ கொண்­டி­ருந்த மேற்­படி பஸ்ஸில் பெண்­ணொ­ருவர் தனது மக­னுடன் உரை­யாடிக் கொண்­டி­ருந்தார். அப்பெண் முஸ்லிம் கலா­சா­ரப்­படி நிகாப்பும் அணிந்­தி­ருந்தார்.

இவர்கள் ஆங்­கிலம் அல்­லாத வேறொரு மொழியில் உரை­யா­டு­வதை அவ­தா­னித்த ஆங்­கி­லேய நபர் ஒருவர், மேற்­படி பெண்­ணுக்கு அறி­வுரை கூறி னார்.

“நீங்கள் ஐக்­கிய இராஜ்­ஜி­யத்தில் இருக்­கும்­போது நீங்கள் ஆங்­கி­லத்தில் உரை­யாட வேண்டும்” என அந்­நபர் கூறினார்.

அப்­போது மேற்­படி பெண் பதி­ல­ளிக்கும் முன்­பா­கவே அந்த பஸ்­ஸி­லி­ருந்த மற்­றொரு வயோதிப்பெண், அந்­ந­பரை திரும்பிப் பார்த்து, “அப்பெண் வேல்ஸில் இருக்­கிறார். அவர் வேல்ஸ் மொழியில் உரை­யா­டு­கிறார்” எனக் கூறினார். அவ்­வ­ள­வுதான் அந்த நபர் எதுவும் பேச முடி­யாமல் வாய­டைத்துப் போனார்.

இவ்­வி­ட­யத்தை மற்­றொரு பயணி இணை­யத்தில் வெளிப்­படுத்தியுள்ளார். பிரிட்­டனில் ஆங்­கிலம் மாத்­தி­ர­மல்­லாமல் ஸ்கொட்­லாந்தில் ஸ்கொட் டிஸ், வேல்ஸில் வேல்ஸ், வட அயர்­லாந்தில் ஐரிஷ் போன்ற மொழி­களும் பேசப்படுகின்றன.

வேல்ஸில் ஆங்கிலமும் வேல்ஸும் உத்தியோகபூர்வ மொழிகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *