Breaking
Sat. May 18th, 2024

அஹமட் இர்ஸாட்

நாட்டிலுள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காகவும், தேர்தல் முறை மாற்றத்தினை அமுல்படுத்துவதற்காகவும் நேற்று திங்கட்கிழமை (27.04.2015) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பத்தொன்பதாவது திருத்தச் சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பினைக் காட்டுவதினை தவிர்த்து நாட்டில் அமைதியானதும் சுதந்திரமானதுமான ஆட்சியினை நிலை நாட்டும் பொருட்டு சமர்பிக்கப்பட்ட பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு ஒத்துளைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சிகளை வேண்டி மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளரும், மேல் மாகாண சபை உறுப்பினறுமான பைருஸ்  தலைமையில் 5000க்கும் அதிகமான பைரூஸ் இன் ஆதரவாளர்கள் பொறளை சந்தியிலிருந்து பாராளுமன்றத்தை நோக்கி படையெடுத்தனர்.

இந்நிகழ்வில் மேலும் மேல் மாகாண சபை உறுப்பினரின்  வேண்டுகோளினை பலப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் முக்கியஸ்தர்கள், வர்த்தகர்கள் எனப்பல முக்கியஸ்தர்கள் வெற்றிகரமாக ஊர்வளம் நடைபெற்று முடிவதற்கு  மேல் மாகாண சபை உறுப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்கியமையினை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இந்த மக்கள் பேரணியானது, கொழும்பு மாவட்டத்திலிருந்து அனைத்து ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர்களினாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மேல் மாகாண சபை உறுப்பினா்,

“பத்தொன்பதாவது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 225 உறுப்பினர்களும் இதற்கு ஆதரவளிப்பார்கள் என நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.

தனி மனிதனுக்கிருக்கின்ற அதிகாரத்தை இல்லாமல் செய்து, அதிகாரத்தினைப் பாராளுமன்றதுக்கு கொடுக்குமாறு வேண்டியே நாங்கள் இங்கு மக்கள் பலத்துடன் வேண்டி நிற்கின்றோம்.

ஆனால், எதிர்க்கட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் படுத்துறங்கியதைப் போன்று தங்களது எதிர்ப்பினைக் காட்டுவார்களாயின் இரவோடிரவாக பாராளுமன்றத்தை கலைத்து, பொதுத்தேர்தலொன்றினை உடனடியாக ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதியையும், பிரதமரையும் வேண்டிக்கொள்கின்றோம்.

அதற்கு மேல் எமது பாராளுமன்றத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாதுள்ளது. ஏனென்றால், பாராளுமன்றத்திலிருப்பவர்களில் நூற்றுக்கு அறுபது தொடக்கம் எழுபது வீதமானவர்கள் கள்வர்களாகவும், இந்த நாடு சகல விதமான அபிவிருத்தியிலும் பிந்தங்கிய நிலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களாகவுமே காணப்படுகின்றனர்.

ஆகவே, இவர்களுக்கு இனியும் இடமளிக்காது, பத்தொன்பதாவது திருத்தச்சட்டத்தை அமுப்படுத்தி, உடனடியாகப் பொதுத்தேர்தலொன்றுக்குத் தயாராகுமாறு பொது மக்கள் சார்பாக அரசாங்கத்தினைக் கேட்டுக்கொள்கின்றேன்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *