Breaking
Mon. May 20th, 2024

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது தமிழ் உற­வி­னர்­களை பார்க்க மாதம் ஒரு­முறை யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜ­யத்தை மேற்­கொண்டு வரு­கின்றார்.வடக்கு மக்கள் மீதான நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கவ­னிப்பும் அமோ­க­மா­க­வுள்­ளது.

ஆனால் நாட்டில் வாழும் முஸ்லிம், சிங்­கள மக்கள் தொட ர்பில் அவர் சிறிதும் அக்­கறை கொள்­ளா­தி­ருக்­கின்­றா­ரென பொது பல சேனா அமை ப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார். நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தி யாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், வவு­னியா போகஸ்­வெவ பகு­தியில் சிங்­கள குடி­யி­ருப்­புகள் புதி­தாக உரு­வாக்­கப்­பட்­டன. இவை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் காலத்தில் உரு­வாக்­கப்­பட்­டவை. தற்­போது இக்­கு­டி­யி­ருப்பை சேர்ந்த மக்கள் உணவு, இருப்­பிடம், தண்ணீர் உள்­ளிட்ட அடிப்­படை வச­திகள் இல்­லா­மை­யினால் பெரிதும் சிர­மப்­ப­டு­கின்­றனர்.

இம்­மக்­க­ளுக்கு இது­வ­ரையில் காணி உறு­திப்­பத்­தி­ரங்­களும் வழங்­கப்­ப­ட­வில்லை. இவர்கள் உறு­திப்­பத்­தி­ரங்கள் கோரி அர­சாங்க அலு­வ­ல­கங்­க­ளுக்கு செல்லும் போது தமிழ் மாகாண சபை உறுப்­பி­னர்­களின் அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. இவை அர­சியல் பிரச்­சி­னைகள் அல்ல மனி­தா­பி­மானம் சார்ந்த பிரச்­சி­னைகள் என ஆட்­சி­யா­ளர்கள் விளங்­கிக்­கொள்ள வேண் டும். இப்­போதும் யார் இன­வாத போக்கில் செயற்­பா­டு­கின்­றார்கள் என்­பதை ஆட்­சி­யா­ளர்கள் புரிந்­து­கொள்­ளமால் இருப்­பது வருந்­தத்­தக்­கது. தற்­போது எமது நாட்டில் தமிழ் பிரி­வினை வாத குழுக்கள் அதி­க­மாக உரு­வெ­டுக்­கின்­றன. கடந்த அர­சாங்கம் அவர்­க­ளுக்கு அஞ்­சாமல் சிங்­கள மக்­க­ளுக்கு சேவை செய்­தது. இரா­ணு­வத்­தி­னரின் உத­வி­யையும் பெற்­றுக்­கொ­டுத்­தது. ஆனால் தற்­போது சிங்­கள மக்கள் வவு­னியா உள்­ளிட்ட தமிழர் பெரும்­பான்­மை­யாக வாழும் பகு­தி­க­ளி­லி­ருந்து வெளி­யேறிச் செல்­கின்­றனர்.

கடந்த ஜன­வரி 8 ஆம் திக­திக்கு பின்னர் இம் மக்­க­ளுக்கு எந்­த­வித நிவா­ர­ணங்­களும் வழங்­கப்­ப­ட­வில்லை. இவர்­க­ளுக்­கான உரி­மைகள் மறுக்­கப்­ப­டு­கின்­றன. எனவே எதிர்­கா­லத்­தி­லா­வது இவர்கள் மீது கவனம் செலுத்­துங்கள் என்று ஆட்­சி­யார்­களை வலி­யு­றுத்­து­கின்றோம். வடக்கின் தமிழ் உற­வு­களை சந்­திக்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மாதம் ஒரு­மு­றை­யா­வது யாழ்ப்­பாணம் செல்­கின்றார். வடக்கின் தமிழ் மக்­களை ஜனா­தி­பதி தான் சென்று பார்க்க வேண்டும் என்ற கட்­டாய தேவை இல்லை. ஏனெனில் வடக்கின் அர­சியல் தலை­மைகள் தமிழ் மக்­களின் உரி­மை­க­ளுக்­காக தொடர்ந்தும் குரல் கொடுக்­கின்­றனர். அதேபோல் கிழக்கில் முஸ்லிம்­க­ளுக்கு குரல் கொடுப்­ப­தற்­கான அர­சியல் வாதிகள் உள்­ளனர். இவ்­வா­றி­ருக்க தெற்கின் சிங்­கள அர­சி­யல்­வா­தி­களும் தமி­ழர்­க­ளுக்கே குரல் கொடுக்­கின்­றனர். அவ்­வா­றாயின் சிங்­கள மக்­களை கவ­னிக்கப் போவது யார் என்­பது கேள்­விக்­குறி­யான விடயம். அதனால் தமிழ் முஸ்லிம் மக்கள் அர­சியல் பிர­தி­நி­தி­களை பார்த்­தா­வது சிங்­கள அர­சியல் தலை­மைகள் மக்­க­ளு­க்கு சேவை வழங்க முன்­வர வேண்டும்.

மறு­புறம் மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் சுவா­மி­நாதன் வடக்கின் தமிழ் மக்­களை மீள் குடி­ய­மர்த்­து­வ­தற்­கான பிரதிநிதியாக மட்டுமே செயற்படுகின்றார். அவருக்கு மற்றைய இனத்தவர் தொடர்பில் அக்கறை இல்லை என்பதை அவரின் செயற்பாடுகள் ஊடாக காணமுடிகின்றது. இவ்வாறிருக்க சிங்கள மக்கள் உதவி கோரும் போது ராஜபக் ஷக்களிடம் கேளுங் கள் என்பவர்கள் தமிழ் மக்கள் கேட்காத உதவிகளையும் வடக்கிற்கு சென்று செய்து கொடுக்கின்றமை வேடிக்கையானது என்றார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *