Breaking
Mon. May 20th, 2024

நாட்டின் தேசிய ஒற்­று­மையைக் காப்­பாற்றி, ஐக்­கிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்பும் வகையில் எமது ஒவ்­வொரு நட­வ­டிக்­கை­யையும் முன்­னெ­டுத்துச் செல்­கின்றோம்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி ­ர­ம­சிங்க தலை­மையில் அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு எட்­டப்­படும் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அமைச்­ச­ரு­மான நிமல் சிறி­பா­லடி சில்வா தெரி­வித்தார்.

நாட்டை மீட்­டெ­டுக்கும் பய­ணத்தில் ஸ்ரீலங்கா சுதந்­தரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஒன்­றா­கவே பய­ணிக்கும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

தேசிய அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் மற்றும் அர­சியல் பிரச்­சினை தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குரிப்­பிட்டார்.

இவை தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

நாட்டின் தலை­மைத்­துவம் இன்று ஒரு கட்சி சார்ந்­த­தாக மட்­டுமே தங்­கி­யில்லை. பிர­தான இரண்டு கட்­சி­களின் தலை­வர்­க­ளி­டமும் நாட்டில் அதி­கா­ரமும், அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களும் தங்­கி­யுள்­ளன நாட்டில் ஜனா­தி­ப­தி­யாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யான எமது கட்­சியின் தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சேன செயற்­ப­டு­கின்றார். அதேபோல் பிர­த­ம­ராக ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க செயற்­ப­டு­கின்­றார். அவ்­வாறு இருக்­கையில் பிர­தான இரண்டு கட்­சி­களும் நாட்டை சரி­யாக வழி­ந­டத்த வேண்­டிய கடமை உள்­ளது.

அதேபோல் நாட்­டிற்கு எதி­ராக எழுந்­துள்ள அழுத்­தங்­களை சமா­ளிக்­கவும் அவற்றில் இருந்து நாட்டை விடு­விக்­கவும் நாம் இரண்டு தரப்பும் இணைந்து செயற்­பட வேண்­டிய நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. ஆரம்­பத்தில் இரண்டு கட்­சி­க­ளி­னாலும் தவ­றுகள் இழைக்­கப்­பட்­டுள்­ளன என்­பதை ஏற்­றுக்­கொள்ள வேண்டும். ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்சிக் காலத்தில் சில தவ­றுகள் இடம்பெற்றன. அதேபோல் எமது ஆட்­சி­யிலும் தவ­றுகள் ஏற்­பட்­டுள்­ளன. அவை இரண்டும் நாட்­டுக்கு எதி­ரான அழுத்­தங்­களை ஏற்­ப­டுத்­தவும் கார­ண­மாக அமைந்­துள்­ளன.

மேலும் கடந்த காலங்­களில் எமது இரா­ணு­வத்தின் செயற்­பா­டுகள் தொடர்பில் கடு­மை­யான விமர்­ச­னங்கள் எழுந்­தன. அவை தொடர்பில் இன்றும் கடு­மை­யான அழுத்­தங்கள் கொடுக்­கப்­ப­டு­கின்­றன. ஆகவே அவற்­றையும் வெற்­றி­கொண்டு நாட்­டையும் எமது இரா­ணு­வத்­தையும் காப்­பாற்ற வேண்டும். அதேபோல் சிறு­பான்மை மக்­களின் மனங்­க­ளையும் வென்­றெ­டுக்க வேண்டும். அதற்­கான கால­கட்­டத்தில் தான் பிர­தான இரண்டு கட்­சி­களும் ஒன்­றி­னது நாட்டின் தலை­மைத்­து­வத்தை ஏற்­றுள்­ளது.

ஆகவே இந்த கூட்­டணி ஆட்­சியில் இப்­போதே பல சவால்­களை வெற்­றி­க­ர­மாக சமா­ளித்து வந்­துள்ளோம். உள்­நாட்டு அர­சியல் சிக்­கல்கள் தொடர்பில் விமர்­சிக்கும் அளவில் எந்­த­வித மோச­மான நிலை­மை­களும் தற்­போது இல்லை. அதேபோல் சர்­வ­தேச அழுத்­தங்கள் மற்றும் இலங்கை தொடர்­பி­லான சர்­வ­தேச தலை­யீ­டு­களும் வெற்­றி­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

அதேபோல் எதிர்­வரும் காலத்­திலும் ஜன­நா­ய­கத்தை வெற்­றி­கொள்ளும் வகையில் ஆட்­சியை முன்­கொண்­டு­செல்ல நாம் தயா­ரா­கவே உள்ளோம். அடுத்து வர­வி­ருக்கும் உள்­ளு­ராட்­சி­மன்றத் தேர்­தலின் போது நாம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சார்­பிலும், ஜக்­கிய தேசிய கட்சி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யிலும் தனித்­த­னியே போட்­டி­யிடும். அவ்­வாறு போட்­டி­யிட்­டாலும் மக்­க­ளு­டைய பலத்­தி­னையும் அங்­கீ­கா­ரத்­தையும் பெற்­றுக்­கொண்டு நாட்டின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கையில் மற்றும் நாடாக எதிர்­கொள்­ள­வேண்­டிய சூழ்­நி­லை­களில் பிர­தான இரண்டு கட்­சி­களும் ஒற்­று­மை­யாக செயற்­ப­டுவோம்.

கேள்வி :- அர­சியல் தீர்வு தொடர்பில் எவ்­வாறு கையா­ளப்­படும்?

பதில்:- தமிழ் அர­சியல் தலை­மைகள் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரும் அர­சியல் தீர்வு தொடர்பில் தேசிய அர­சாங்­கத்தில் அதிக முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­ப­டு­கின்­றது. எனினும் நாட்டின் தேசிய ஒற்­று­மையை காப்­பாற்றி ஐக்­கிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்பும் வகை­யி­லேயே எமது ஒவ்­வொரு நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்க முடியும். ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு எட்­டப்­படும்.

கேள்வி :- அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் நீங்கள் எவ்­வா­றான நிலைப்­பாட்டில் உள்­ளீர்கள்?

பதில்:- அர­சியல் கைதிகள் என்று இலங்கை சிறை­களில் யாரும் இல்லை. யுத்­தத்தின் போது சந்­தே­கத்தின் பேரில் கைது­செய்­யப்­பட தமிழ் கைதிகள் உள்­ளனர். அவர்கள் தொடர்பில் குற்றம் நிரூ­பிக்­கப்­ப­பட்­டுள்­ளது. அதேபோல் குற்­ற­வா­ளிகள் அல்­லாத நபர்­களை விடு­விப்­பதில் எம்­மி­டையே எந்த முரண்­பா­டு­களும் இல்லை. எவ்­வாறு இருப்­பினும் இந்த விட­யங்கள் தொடர்பில் ஆராய அர­சாங்கம் வேறு குழுவை நிய­மித்­துள்­ளது. அவர்கள் இந்த விட­யங்­களை கையாள்­வார்கள்.

கேள்வி:- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தொடர்பில் தற்போது எழுந்துள்ள விமர்சனங்கள் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- சிலவிடயங்களில் அவரை எம்மால் விட்டுக்கொடுக்க முடியாது. யுத்தத்தை வென்ற தலைவர். அதேபோல் நாடு இன்று நல்ல நிலைமையில் உள்ளதெனின் அதில் அவரின் பங்கும் அதிகமாகவே உள்ளது. எனினும் மக்கள் இன்று அவரை நிராகரித்துள்ளனர். அதேபோல் அவர் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *