Breaking
Fri. May 17th, 2024

ஊடகப்பிரிவு

 

புத்தளம், கற்பிட்டி மன்னார், சிலாபத்துறை ஆகிய இடங்களில் அமைந்துள்ள மாவட்ட, ஆதார வைத்தியசாலைகளின் புனரமைப்புக்கென பல மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டையும், மருத்துவ உபகரணத் தேவைகளுக்காக நிதி உதவியையும் அமைச்சர் ராஜித சேனாரட்ன வழங்கியுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பெயரில் அமைச்சர் ராஜித இந்த உதவிகளை வழங்கியுள்ளார்.

புத்தளம் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு 101மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் உடனடியாக 30மில்லியன் ரூபா கையளிக்கப்பட்டு ஆறு மாதத்திற்குள் அவசர தேவைகளை மேற்கொள்ளுமாறும், அடுத்தவருடம் எஞ்சிய தொகையை கையளிப்பதாகவும் அமைச்சர் ராஜித, அமைச்சர் ரிஷாட்டிடம் தெரிவித்துள்ளார்.

கற்பிட்டி வைத்தியசாலையை ஒரு மாத காலத்துக்குள் தரம் உயர்த்துவதாக அமைச்சர் ரிஷாட்டுடனான சந்திப்பின் போது அமைச்சர் ராஜித உறுதியளித்தார். அத்துடன் கற்பிட்டி வைத்தியசாலையின் கட்டிட நிர்மாணத்திற்காக 150மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்த அமைச்சர், வைத்தியசாலையை மேலும் விருத்தி செய்யும் வகையிலான  திட்ட வரைபு ஒன்றை சமர்ப்;பிக்குமாறு வேண்டினார்.

மன்னார் மாவட்டத்தில் சிலாபத்துறை ஆதார வதை;தியசாலை 3மாதத்திற்கு முன்னர் தரம் உயர்த்தப்பட்ட போதும் அந்த வைத்தியசாலையில் ஒரேயொரு வைத்தியரே கடமையாற்றுவதாகவும் அந்த வைத்தியரும் இல்லாத நிலை பல சந்தர்ப்பங்களில் ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்த போது, இவ்வருடம் வைத்திய படிப்பை முடித்துவிட்டு வெளியேறும் டாக்டர்களில் 9பேரை சிலாபத்துறை வைத்தியசாலைக்கு சேவைக்கு அமர்த்த நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டார்.

மன்னார் மாவட்டத்தின் சகல வைத்தியசாலைகளுக்கும் மருத்துவ உபகரண தேவைக்காக 50மில்லியன் ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே வெளிநாட்டு உதவியுடன் மன்னார் ஆதார வைத்தியசாலையை புனரமைக்க 550மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டதுடன் மேலும் அதே வைத்தியசாலைக்கு வெளிநோயாளர் பிரிவுடன் இணைந்தவாறான 4மாடி கட்டிடம் ஒன்றை அமைக்க 550மில்லியன் ரூபா செலவிளான திட்டத்திற்கான நகல் திட்டம் அமைச்சர் ராஜிதவிடம் கையளிக்கப்பட்டபோது அமைச்சர் அதனையும் ஏற்றுக்கொண்டார்.

மன்னார் மாவட்டத்திலுள்ள மறிச்சிக்கட்டி, சிலாபத்துறை, பண்டாரவெளி, இரணைஇலுப்பைக் குளம், விடத்தல்தீவு, அடம்பன் ஆகிய வைத்தியசாலைகளின் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாகவும் வாக்களித்த அமைச்சர் ராஜித இந்த வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வண்டிகளை பெற்றுக்கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *