Breaking
Fri. May 17th, 2024

நாட்டில் அமு­லி­லுள்ள வக்பு சட்­டத்தில் சில திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

முஸ்லிம் சமய விவ­கார அமைச்சும் முஸ்லிம் சமய கலா­சார பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் வக்பு சபையும் வக்பு ட்ரிபி­யு­னலும் வக்பு சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு இணங்­கி­யுள்­ளன.

இச்­சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச். ஏ. ஹலீன் சட்­டத்­த­ர­ணிகள் அடங்­கிய குழு­வொன்­றினை நிய­மித்­துள்ளார்.

வக்பு சட்­டத்தின் கீழேயே வக்பு ட்ரிபி­யுனல் (வக்பு நீதி­மன்றம் ) இயங்கி வரு­கி­றது. வக்பு சட்­டத்தின் கீழ் பள்­ளி­வா­சல்கள் தரீக்­காக்கள் இவற்றின் ஆத­னங்கள் சொத்­துக்கள் என்­பன அடங்­கு­கின்­றன.

இவற்றில் ஏற்­படும் பிணக்­குகள் மற்றும் ஊழல்­களை வக்பு ட்ரிபியுனலே விசா­ரித்து தீர்ப்பு வழங்­கு­கின்­றது.

இன்­றைய கால கட்­டத்தில் சூழ்­நி­லைக்­கேற்ப சில திருத்­தங்­களைச் செய்ய வேண்­டு­மென வக்பு சபை அமைச்சர் ஹலீனா கேட்­டுக்­கொண்­ட­தற்­கி­ணங்­கவே அமைச்­சரால் இந்தக் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த 1980 ஆம் ஆண்­டுக்குப் பின்பு வக்பு சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

அமைச்­ச­ரினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பித்ததும் அவை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­படும் வக்பு சபையும் வக்பு ட்ரிபி­யு­னலும் தமது பணிகளைத் துரிதமாக முன்னெடுப்பதற்கு இத்திருத்தங்கள் அவசியம் என்பது அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *