Breaking
Thu. May 2nd, 2024
வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 25 வருடங்களாகும் நிலையில், அதுகுறித்து வடமாகாண சபையில் கவனயீர்ப்பு பிரேணையை கொண்டுவர இருப்பதாக வடமாகாண சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் கூறினார்,
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
வடமாகாண முஸ்லிம்கள் பலவழிகளிலும் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்படுகிறார்கள். வடமாகாண முஸ்லிம்களுக்கு பின்னர் இடம்பெயர்ந்த பல தொகுதியினர் மீள்குடியேற்றப்பட்டுவிட்டனர். வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்தில் வாழத் துடிக்கிறார்கள். ஆனால் அதற்கான வசதிகள் செய்து கொடுக்கபட்டவில்லை.
மீள்குடியேறும் முஸ்லிம்களுக்கு தமிழ் கூட்டமைப்பைச் சேந்த சிலர் தொடர்ந்தும் தடையேற்படுத்துகின்றனர். அரச அதிகாரிகள் முஸ்லிம்கள் விடயத்தில் பாரபட்சமாக செயற்படுகின்றனர். தமிழ்கட்சிகள் முஸ்லிம்களை சகோதரர்கள் என்றும், தமிழ் பேசும் மக்கள் என்றும் அழைத்து தொடர்ந்து எமாற்றுகின்றனர்.
இந்தநிலையில் வடமாகாண சபையில் வடக்கு முஸ்லிம்கள் குறித்து பிரேணை ஒன்றை கொண்டுவiவுள்ளேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இதுவிடயத்தில் முழு கவனம் செலுத்துவதுடன், இதுபற்றிய கவனத்தை ஈர்ப்பதற்காகவும் பிரேணையை கொண்டு வருகிறேன் எனவும் றிப்கான் பதியுதீன் இதன்போது கூறினார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *