Breaking
Sun. May 12th, 2024

யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் உள்­ளக பொறி­முறை சரி­யான முறையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஜூன் மாதம் வாய்­மூல அறிக்கை சமர்ப்­பிக்­கப்­படும் நிலையில் அந்த அறிக்கை சர்­வ­தே­சத்தை திருப்­திப்­ப­டுத்தும் வகை­யிலும் அதே நிலையில் உண்­மை­களை கண்­ட­றியும் வகை­யிலும் பல­மான ஒன்­றாக அமையும். வருட இறு­திக்குள் நிரந்­தர தீர்வை எட்டும் நட­வ­டிக்­கை­களை நாம் மேற்கொள்வோம் என அர­சாங்கம் தெரி­வித்­தது.

முன்னாள் போரா­ளி­களின் கைது மற்றும் முகாம்கள் தொடர்­பு­டைய பாது­காப்பு விட­யங்­களில் விமர்­ச­னங்­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது எனவும் அர­சாங்கம் குறிப்­பிட்டது.

இலங்கை அர­சாங்­கத்தின் அழைப்பின் பெயரில் இலங்­கைக்கு வந்­தி­ருந்த ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் விசேட அறிக்­கை­யாளர் நிபுணர் குழு­வினர் நேற்று முன்­தினம் இலங்­கையின் நிலை­மை­களில் முரண்­பாட்­டுக் க­ருத்­து­களை முன்­வைத்­துள்ள நிலையில் அது தொடர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை வின­வி­ய­போதே அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *