Breaking
Fri. May 17th, 2024

வளைகுடா முஸ்லிம் நாடுகளில் வசிக்கும் முஸ்லிமல்லாத நண்பர்களின் கனிவான கவனத்திற்கு..!

மேலும் பன்றி இறைச்சி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டிருந்த போதிலும் இந்த நாடுகளில் வசிக்கும் முஸ்லிமல்லாத மற்ற மதத்தவருக்காக அந்த இறைச்சி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு (சவுதியை தவிர்த்து)அங்காடிகளில் முஸ்லிமல்லாதவர்களுக்காக என்று அறிவிப்பு செய்து விற்பனை செய்யப் படுகிறது.

பிழைப்புக்காக இந்த நாடுகளுக்கு வந்திருப்பவர்களாக இருப்பினும் அவர்களது மத மற்றும் தனி சுதந்திரத்துக்கு குறுக்கே நிற்காமல் உரிமை வழங்கியிருப்பதன் மூலம் இந்த நாட்டு அரசுகளின் சகிப்புத் தன்மையை புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் சிலர் இதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் இந்த நாடுகளின் அலுவல் மதமாக இருக்கக் கூடிய இஸ்லாமிய மார்க்கத்தை இந்த நாடுகளில் இருந்து கொண்டே இழிவு படுத்தவும் அதன் மூலம் அந்த மார்க்கத்தை பின்பற்றுபவர்களது உணர்வுகளை இழிவுபடுத்தி வருகின்றனர்.

துபாயில் இருந்து கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தை இழிவு படுத்தும் விதத்தில் பேஸ்புக்கில் பதிவிட்ட இந்தியர் ஒருவரை அந்த நாட்டு போலிஸ் கைது செய்து மத நிந்தனை வழக்கில் சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கிறது.

அவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு ஏழு வருடங்கள் சிறைத்தண்டனையும் 1 மில்லியன் திர்ஹம் அபராதமும் விதிக்க அந்நாட்டு சட்டத்தில் இடமிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
http://gulfnews.com/news/uae/courts/facebook-status-lands-man-in-court-1.1491112
தாயகத்தில் வசிக்கும் போது எத்தகைய கொள்கை கோட்பாடுகளை கொண்டவராக இருந்த போதிலும் அந்நிய நாட்டிற்கு அந்த நாட்டின் சட்டத்தை மதிப்பதாக உறுதிமொழியளித்ததன் பேரில் தங்கி தொழில் செய்யும் அல்லது வேலை பார்க்கும் நம்மவர்கள் இந்த நாட்டு மக்களின் இன,மொழி,மத உணர்வுகளை புண்படுத்தாமல் இருக்க முயலுங்கள்.

இது நமது தாய் மண் அல்ல… இது அந்நிய மண் என்பதை மனதில் கொண்டு இருக்க முயலுங்கள்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *