Breaking
Sun. Apr 28th, 2024

ஆவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் கடந்தாண்டு பழங்குடி மக்களுக்குத் தான் அளித்த வாக்குறுதியின் படி தனது அலுவலகத்தை குடிசைக்கு மாற்றியுள்ளார்.

கடந்தாண்டு ஆவுஸ்திரேலியப் பிரதமராகப் பதவியேற்ற டோனி அபோட், ஆண்டுதோறும் ஒரு வார காலம் பழங்குடி இன மக்கள் வாழும் பகுதியில் தனது பிரதமர் அலுவலகத்தை மாற்றி செயல்படப் போவதாக அறிவித்தார்.
அதன்படி நேற்று முதல் இன்னும் ஒரு வார காலத்திற்கு, மேற்கு ஆவுஸ்திரேலியாவின் டார்வின் நகரிலிருந்து ஆயிரம் கி.மீ., தொலைவிலுள்ள நுலுன்பை என்ற இடத்தில் தற்காலிக கூடாரத்தில் தங்கியிருந்து தனது பணிகளை செய்யவுள்ளார்.
இந்த தற்காலிக அலுவலகத்தில் இருந்தாலும், தலைநகர் கான்பெராவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கப்போவதாகவும், ஏதேனும் அவசியம் ஏற்பட்டால் அங்கிருந்து தலைநகர் திரும்பப்போவதாகவும் அபோட் தெரிவித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *