Breaking
Mon. May 6th, 2024

(வாழைச்சேனை நிருபர்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பதினேழு வயது பெண் பிள்ளையை கடந்த 06.09.2014ம் திகதி முதல் காணவில்லை என்று பிள்ளையின் தந்தை வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மஜீட் ஜும்ஆ பள்ளிவாயல் வீதி றஹ்மத் நகர், நாவலடி, ஓட்டமாவடி என்ற முகவரியில் வசிக்கும் முஹைதீன் பாவா அச்சிமுஹம்மது (வயது 46) என்பரே தனது பிள்ளை வீட்டில் இருந்து காணமல் பொயுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் 07.09.2014ம் திகதி ஊஐடீ –ii – 345ஃ96 என்ற இலக்கத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டாளரின் வீட்டில் கிணறு இல்லாததால் வீட்டில் சற்றுத் தொலைவில் உள்ள கிணற்றில் இருந்தே இவர்களது தேவைக்கான நீரைப் பெற்று வந்துள்ளனர்.

இதே போன்று சம்பவ தினமான கடந்த 06.09.2014ம் திகதி வீட்டில் இருந்த மகள் ரினுசா (வயது 17) தந்தையின் இரண்டாந் தாரத்து மனைவி பாவனைக்கான நீரைப் பெற்றுக் கொள்வதற்காக காலை 08.00 மணியளவில் குறித்த இடத்திற்குச் சென்றுள்ளார். தந்தை மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது, மகள் இல்லாததால் அயல் வீடுகள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று தேடியும் மகள் கிடைக்காததால் மறுநாள் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பிள்ளையின் தந்தையான முஹைதீன் பாவா அச்சிமுஹம்மது தெரிவித்தார்.

அவர் மேலும் இது தொடர்பாக தெரிவிக்கையில்,

எனது மகள் பிறந்து ஒரு வருடமும் மூன்று மாதத்தில் எனது மனைவி மரணித்ததன் பின்னர் எனது மகளுக்காக நான் திருமணம் முடிக்காமல் இருந்தேன். எனது மகள் வளர்ந்து விட்டார் நான் கூலி வேலை செய்வதால் எங்கும் செல்லும் போது மகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கடந்த ஐந்து வருடத்திற்கு முதல்தான் மருமணம் செய்துள்ளதாக தெரிவித்ததோடு, எனது மகள்தான் எனக்கு எல்லாம் எனக்கு சொத்து என்றாலும் உறவு என்றாலும் மகள் மாத்திரம்தான் என்று தெரிவித்தார்.

ரினுசா பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது காணாமல் போன பிள்ளையின் தந்தையின் தொலைபேசி இலக்கமான 0773554841 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கானாமல் போன பிள்ளையின் தந்தை பொதுமக்களிடம் கேட்டுள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *